ஆர்த்தி விஜயநாதனின் கனிஷ்ட அரங்கேற்றம்

ஒரு இனத்தினுடைய முகமும், முகவரியும் அந்த இனத்தினுடைய மொழியும், கலையும், கலாச்சாரமும் பண்பாடும் தான். நமது குழைந்தகளுக்கு நமது கலாச்சாரம் புரிய வேண்டும். பல்கலாச்சார சூழலில் அவர்கள் வாழ்ந்தாலும் பன்னெடுங்காலம் கொண்ட நமது அழியாத கலாச்சாரம் வாழவேண்டும் என்ற எண்ணத்தை நமது குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும்.

அந்தவகையில் கடந்த 03 செப்டம்பர் 2005 ஸ்காபரோ Armenian youth centre இல் நடைபெற்ற செல்வி ஆர்த்தி விஜயநாதன் அவர்களின் சங்கீத கனிஷ்ட அரங்கேற்ற நிகழ்வு நடந்தேறியது.

இந்நிகழ்வுபற்றிய கட்டுரையையும் நிழற்படங்களையும் இங்கே காணலாம்

சுகன்யா, ஷியாமளி, சுரபி சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

 திரு.பரநிருபசிங்கம், திருமதி.சாரதாம்பாள் அவர்களின் புதல்விகள் சுகன்யா, ஷியாமளி, சுரபி ஆகிய மூன்று சகோதரிகளுடைய நடனம் மிகவும் பாராட்டுதற்குரியது. இப்பெண்மணிகள் பரதக்கலை கற்பதில் காண்பித்த ஊக்கம், அடக்கம், பக்தி, பண்பு மிகச் சிறந்தது. கற்கும் சமயத்தில் குருவின் மனதை மகிழ்ச்சியாக வைப்பதில் காட்டிய ஆர்வம் அற்புதமானது.

இந்நிகழ்வுபற்றிய கட்டுரையையும் நிழற்படங்களையும் இங்கே காணலாம்

மெய்மறக்கச் செய்த சவிதாவின் புல்லாங்குழல் இசை அரங்கேற்றம்.

மேலைக் கரம்பனைச் சேர்ந்த ரோகினி, விஜயகுமார் தம்பதிகளின் செல்வப்புதல்வி சபிதாவின் புல்லாங்குழல் இசை அரங்கேற்றம் அனைவரும் பாராட்டத்தக்க முறையில் நவம்பர் 4ம் திகதி ஸ்காபரோவில் அமைந்துள்ள Chinese Cultural Centre இல் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் சவிதாவின் சகோதரனான சஜீவ் விஜயகுமார் மிருதங்கம் வாசித்து நிகழ்வை மேலும் மெருகூட்டினார். அரங்கேற்றத்தின் சில படங்களை இங்கே காணலாம்.

யா/கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கனடா பழைய மாணவர் ஒன்றியத்திற்கு பாராட்டு

சென்ற மார்ச் மாதம் 8ஆம் திகதி (03-08-08) சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் முறையே மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, அணிநடை மரியாதை ஏற்றல், பாடசாலை, ஒலிம்பிக், இல்லக்கொடிகள் ஏற்றல், சத்தியப்பிரமாணம், மற்றும் பிரதம விருந்தினரின் ஆசியுரையுடன் போட்டிகள் ஆரம்பமாகின.

மேலைக்கரம்பன் முருகமூர்த்தி கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சித்திரைக் கஞ்சி நிகழ்வு.

சென்ற மாதம் 20-04-2008 ஞாயிற்றுக்கிழமை மேலைக்கரம்பொன் முருக மூர்த்தி கோவிலில் அங்கு குடிகொண்டிருக்கும் கந்தப் பெருமானுக்கு விசேஷ பூஜைகளுடன் வெகு விமரிசையாக சித்திரைக் கஞ்சி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. முற்கூட்டியே இந்நிகழ்வு நடைபெறும் என்பதை அங்கு வாழும் மக்களுக்கு அறிவித்திருந்தமையால் எல்லோரும் பக்தி பூர்வமாக முருகப்பெருமானை வழிபட்டு மனமகிழ்வோடு இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

கண்ணுக்கு விருந்தளித்த தர்ஷியின் பரதநாட்டிய அரங்கேற்றம்

தென்கரம்பனைச் சேர்ந்த குகதாசன், சசிகலா தம்பதிகளின் செல்வப்புதல்வி தர்ஷியின் பரதநாட்டிய அரங்கேற்றம் 27-10-2007 இல் கனடா ஸ்காபரோவில் அமைந்துள்ள ஆர்மேனியன் மண்டபத்தில் மக்கள் கூட்டம் ரசிக்கத்தக்க வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காட்சிகளில் சிலவற்றை இங்கே காணலாம்.

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலய ஸ்தாபகர் தினம்

கடந்த வெள்ளிக் கிழமை 19-10-2007 அன்று கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலயத்தில் ஸ்தாபகர் தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் ஐப்பசித் திங்கள் அவிட்ட நட்சத்திர நாளின்போது வித்தியாலய ஸ்தாபகர் மகாதேவ சுவாமிகள் பூரணத்துவம் அடைந்தார் என்பதால் இந்நாளையே நிறுவகர் நாளாகவும், பெற்றோர் தினமாகவும் இவ்வித்தியாலயம் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் பங்குபற்றி தமது திறமைகளை காட்டினார்கள். இந்நிகழ்வுகளை கண்டு அதிபர், ஆசிரியர்கள் மாத்திரமன்றி பெற்றோர்களும் ஆனந்தமடைந்தார்கள். இந்நிகழ்வின் படங்களை இங்கே காணலாம்.

இங்கு காணப்படும் படங்களில் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுவதையும்,
அதிபர் ப.தேவராஜா, ஆசிரியை குருசுமுத்து, தாயக ஒருங்கிணைப்பாளாரும் பாடசாலையின் பழைய மாணவருமான செ.விஜிதரன், மற்றும் பெற்றோர்களும் நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பதையும் காணலாம்.

இங்கே காணப்படும் படத்தில் இடிபாடடைந்து காணப்படும் மகாதேவா மண்டபத்தின் ஒரு பகுதியைக் காண்கிறீர்கள். பாடசாலை நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இம்மண்டபத்தை மறுசீரமைக்கும் பணிக்காக கனடா கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலய பழைய மாணவர் சங்ககம் தேவையான நிதியுதவியை அளித்துள்ளது.

மதிப்புக்குரிய திரு.மனுவேற்பிள்ளை அவர்கள் கனடா வந்திருந்தபோது

கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலய முன்னாள் உடற்பயிற்சி மற்றும் ஆங்கில ஆசிரியர் மதிப்புக்குரிய திரு.மனுவேற்பிள்ளை அவர்கள் கனடா வந்திருந்தபோது அவரைக் கௌரவிக்குமுகமாக கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலய முன்னாள் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பழையமாணவர்கள் அவரது பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடிய நிகழ்வின் சில பதிவுகள்- 2006