உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிஏவி கன்சல்டிங் ஆகியவை இணைந்து உலகம் முழுவதுமுள்ள 80 நாடுகளை சேர்ந்த இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 65 விடயங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளுக்கும் புள்ளி வழங்குமாறு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை, கலாச்சார தாக்கம், முயற்சியான்மை, மரபுரிமைகள், வர்த்தகம், மின்வலு எரிசக்தி மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகச் சிறந்த நாடுகளின் வரிசையில் கனடா மூன்றாம் இடத்தை வகிப்பதுடன், உலகின் மிகச் சிறந்த வாழ்க்கை முறையைக் கொண்ட நாடுகளின் வரிசையில் முதலாம் இடத்தை வகிக்கின்றது.
தொடர்ந்து வாசிக்க…