எங்கே அந்த வெண்ணிலா? -நூல் விமர்சனம்

Enkea Antha Vennila-2014 Book cover

புனைகதை வித்தகன் குரு அரவிந்தன் அவர்கள் எழுதி சென்னை மணிமேகலை பிரசுரமாக வெளிவந்த “எங்கே அந்த வெண்ணிலா?” என் கையில் கிடைத்ததும் ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன். வானத்தில் தோன்றும் நட்சத்திரங்கள்….. முகில் கூட்டங்கள் ….. கூடவே அழகிய பெண் முகம் வானத்தில் தோன்றிய வெண்ணிலாவாகக் கண்ணைப் பறித்தது.
எங்கே அந்த வெண்ணிலா? …………. படிக்க முன்பே யார்தான் அந்த வெண்ணிலாவாக இருக்கும் என்ற ஆவல் நெஞ்சத்தைத் தொட்டது. மிகவும் பொருத்தமான அட்டைப் படமாக இருந்தது. 

அட்டைப் படத்தைத் தாண்டி உள்ளே சென்றதும் அந்த வெண்ணிலாவின் முழுத்தோற்றம் கொண்ட சித்திரம் மேலும் வாசகர்களின் ஆவலைத் தூண்டவே செய்யும். 

புலம்பெயர்ந்து தமிழர் வாழும் மண்ணில் உள்ள யதார்த்தங்களுடன் கற்பனை சேரப் பிறந்ததுவே இந்த நாவல் என்னும் கருத்தைக் கூறும் நூலாசிரியரின் சில வாசகங்கள் அவரின் “என்னுரை” பகுதியில் இருந்தன.

ரசிகர்களின் எதிர்பார்ப்பும்! நடுவர்களின் தீர்ப்பும்!!

Spoorti-2015-சுப்பர் சிங்கர் ஜூனியர் – 4

(குரு அரவிந்தன்)

சுப்பர் சிங்கர் ஜூனியர் – 4 இன் முடிவுகள் வெளிவந்த போது ஆசை காட்டி மோசம் செய்து விட்டார்கள் தொலைக்காட்சியினர் என்று எல்லோருமே புலம்பினார்கள். ஆனால் ஒவ்வொருவரின் புலம்பலும் வித்தியாசமானவையாக இருந்தன. ஒவ்வொருவரும் தாங்கள் எதிர்பார்த்தபடியே நடந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் எல்லாமே தலை கீழாக நடந்து முடிந்து விட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்பூர்த்திக்கு முதலிடம் கிடைத்த போது பலரால் நம்பமுடியவில்லை. நிர்வாகத்தினர் ஏற்கனவே எடுத்த முடிவைத்தான் நடுவர்கள் சொன்னார்கள். பணம் சேகர்ப்பதற்காக வாக்கெடுப்பு நடந்ததல்லாமல் வேறு ஒன்றுக்குமல்ல. காதிலே பூ வைத்தது இம்முறை மட்டுமல்ல, அன்று தொடக்கம் இதுதான் நடக்கின்றது. இம்முறைதான் நேயர்கள் முட்டாளாக்கப்பட்டது நேயரகளுக்கே தெளிவாகப் புரிந்தது. இது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சிதான், இதைப் பெரிது படுத்தக்கூடாது என்று நேயர்கள் நினைத்தாலும், இத்தனை மாதங்களாக நடுவர்களை வைத்து மிகவும் சிறப்பாக நடத்திய ஒரு நிகழ்ச்சியைக் கடைசி நேரத்தில் கோட்டை விட்டு விட்டார்கள் என்பதே பலரின் கருத்தாகவும் இருக்கின்றது.

பல்வேறு நோய்கள், சிகிச்சை பற்றி நூல்கள் எழுதிய அதிபர் கனகசபாபதி!

kanex“அதிபர் தோற்றத்தினாலும், உள்ளத்தினாலும், செயலாலும் மிக உயர்ந்தவர். அவரை நான் 1958ம் ஆண்டு முதன் முதலாக சென்னை கிறிஸ்த்தவ கல்லூhயில் சந்தித்தேன். அதன் பின்னர் அடிக்கடி சந்தித்தேன். கனடாவு க்கு வந்த பின்னர் எமது நட்பு இறுக்கமடைந்தது. “பணியுமாம் பெருமை சிறுமை என்றும்” என்பதற் கொப்ப அவர் மிகப் பணிவுடன் வாழ்ந்த பெருந்தகை.

உலகத் தமிழரின் பார்வைக்குள் விழுந்த ஈழத்துச் சிறுமி ஜெசிக்கா

Jessica“பூவே பூச்சூடவா” என்ற பாடலுக்காக பூச்செண்டு கொடுத்து வரவேற்கப்பட வேண்டிய ஜெசிக்காவின் சாதனையை நினைத்து உலகத்தமிழர்கள் பெருமைப்படுகின்றார்கள். ஜெசிக்காவே வைல்ட் கார்ட்டில் அதிக வாக்குகள் பெற்றிருக்கின்றார். விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் ஜூனியர்-4 இல் 34 இலட்சம் வாக்குகளில் 14 இலட்சம் வாக்குகளை அவர் பெற்றிருக்கின்றார். குறிப்பாக கனடியர்களாகிய நாங்கள் இந்த மண்ணில் பிறந்து இந்த மண்ணில் வளர்ந்த தமிழரான ஜெசிக்காவின் சாதனையை எண்ணிப் பெருமைப்படுகின்றோம். ஒரு தமிழ்ச் சிறுமியின் திறமையை வெளியே கொண்டு வருவதற்கு உதவிய உலகத் தமிழர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தணியாத தாகம் – “தாய்வீடு” ஆசிரியர் பி.ஜெ.டிலிப்குமார்

balaகலைப்பொக்கிஷம் 
கே.எஸ்.பாலச்சந்திரன் மறைந்து ஓராண்டின் நினைவாக… 

திரு கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் மறைவு, உங்களைப் போலவே தாய்வீடு குழுமத்திற்கும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் தந்துவிட்டிருக்கின்றது. தாய்வீடு இதழுக்கும் அவருக்குமான உறவு என்பதைக் கடந்து ஈழத்தமிழ்ச் சமூகம் ஓரு மாபெரும் கலைஞனை இழந்து நிற்கின்றது. ஒரு நடிகனாக, நாடகவியல் வல்லுநனாக, திரைப்படக் கலைஞனாக, பின்னாளில் பல்துறைசாரா எழுத்தாளனாக அவர் வியாபித்திருந்த பரப்புகள் மிகப்பரந்தவை.

எழுத்தாளர் அமரர் செங்கை ஆழியான் நினைவாக….

sengai_aaziyaan2ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் என்று அழைக்க்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா அவர்கள் கடந்த 28 பெப்ரவரி 2016 ஞாயிற்றுக்கிழமை தனது 75வது வயதில் காலமானார்.
1941ஆம் ஆண்டு ஜனவரி 25ம் திகதி யாழ் வண்ணார்பண்ணையில் பிறந்த இவர் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியை இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றபின் பட்டம் பெற்று நிர்வாக சேவை அதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்… ஒரு பார்வை

MSVபழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த, இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன்  காலமானார். 87 வயதான விஸ்வநாதன், 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன் 700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

நெஞ்சு நிறைந்தவர் நெஞ்சை விட்டு அகலார் -ஈழநாடு பரமேஸ்வரன்

P.Kanagasapi

நெஞ்சு நிறைந்தவர் நெஞ்சை விட்டு அகலார்

ஈழத்துக் கல்வியியல் வரலாற்றில் தனது தனித்துவத்தை நிலைநிறுத்தியது மட்டுமல்லாது கல்வியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் வித்திட்டு நின்ற ஒரு கல்விமான் அதிபர் கனகசபாபதி அவர்கள் இன்று எம்மை விட்டு நீங்கி விட்டார்.

நாளைய சந்ததியாகிய மாணவ சமுதாயம் கட்டுக்கோப்பான, சக்திமிக்க, தார்மீக நேர்மையுள்ள சமுதாயமாக, அறநெறி சார்ந்த பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட சமுதாயமாக வளர வேண்டும் என்பதற்காக கண்டிப்பும் கடமையுணர்வும் கொண்ட அதிபர் என்று பெயர் எடுத்த அதிபர் கனகசபாபதி அவர்கள் இன்று எம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.

எழுத்தில் வாழ்பவன் எஸ்.பொ – “காலம்” இதழ் ஆசிரியர் செல்வம்

Espo1Aநினைவுரைகளும், கலந்துரையாடலும்

கடந்த 13 டிசம்பர் 2014 சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு Don Montgomery Community Recreation Centre இல் “காலம்” இதழ் ஆசிரியர் செல்வம் அவர்களின் ஏற்பாட்டில் அமரர் எஸ்.பொ.வின் மறைவையொட்டிய அஞ்சலி நிகழ்வொன்று எழுத்தாளரும் எஸ்.பொ.வின் நண்பருமான என்.கே. மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் எழுத்தாளர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டார்கள். முதலில்  எஸ்.பொ.வின் சகோதரியும், சகோதரரும் விளக்கேற்றி, மலர்தூவ அதைத் தொடர்ந்து எல்லோரும்  எஸ்.பொ.வின் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

தனது “கிட்னி”யை தானம் செய்து என்னைக் காப்பாற்றிய சக நடிகை! -இதயத்தால் நன்றி கூறும் கணபதி ரவீந்திரன்

Kanapathyதனது “கிட்னி”யை தானம் செய்து என்னைக் காப்பாற்றிய சக நடிகை!

“தனது இரு “கிட்னி” களில் ஒன்றினை எனக்கு தானம் செய்து என் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என் னுடன் நாடகங்களில் நடித்து வரும் சக நடிமையான ரூபி. நான் எனது வழமையான பரிசோதனைக்காக கடந்த மாதம் எனது குடும்ப வைத்தியரிடம் சென்றிருந்தேன். அவர் இரத்த பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் அவர் என்னை தொலை பேசியில் அழைத்து உமது இரத்த பரிசோத னை விபரத்தைப் பார்த்தேன். உமக்கு கிட்னியில் வருத்தம் இருக்கிறது. நீர் உடனடியாக சென்.மைக் கல் ஹொஸ்பிற்றலுக்குப் போரும் என எனது குடும்ப டாக்டர் கூறினார்.

இயக்குநர்களில் நிஜமான சிகரம் கே பாலச்சந்தர்… ஒரு பார்வை

KB1‘கே.பி' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட கே.பாலசந்தர், மறைந்துவிட்டார். ஆனால் அசாதாரண சாதனைகளை விட்டுச் சென்றிருக்கிறார் அந்த திரையுலக மேதை. தமிழ் சினிமாவில் யாராலும் அழிக்க முடியாத அபார சாதனைக்குச் சொந்தக்காரர் கேபி. அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் நன்னிலம் கிராமத்தில் பிறந்தவர் பாலசந்தர். சிறுவயதிலேயே மேடை நாடகங்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்தார். தன் 15-ம் வயதில் சில நாடகங்களை எழுதியும் இருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் படிப்பில் சேர்ந்து படித்தவர், தொடர்ந்து மேடை நாடகக் கலையுடன் தொடர்பிலேயே இருந்தார்.

பூகோள வெப்ப நிலை உயர்வைத் தடுக்க முடியுமா?

முடியும் என விஞ்ஞானிகள் கூறினாலும், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளும், அரசாங்கங்களும், தொழிற்சாலை முதலாளிகளும், தனிமனிதர்களும் இதற்கான வழிவகைகளை அமுல் படுத்துவதில் பின் நிற்கின்றனர். 

பூகோள வெப்ப நிலை உயர்வு எம்மை எவ்வாறு பாதிக்கப் போகிறது?

பூமியின் வெப்ப நிலை உயர்வு பல ஆபத்தான விளைவுகளை எமக்குத் தரப் போகிறது. அதிமோசமான கால நிலைஇ நிலங்கள் பாலை நிலமாக மாறுதல், உணவு-குடி நீர் பற்றாக்குறை, இதன் விளைவாக உயிரினங்கள் உலகத்திலிருந்து ஒரேயடியாக அழிந்து போதல், பனிப் பாறைகள் உருகுதல், அதன் விளைவாக கடல் மட்டம் உயருதல், இதன் விளைவாக நாடுகள் தண்ணீரில் மூழ்குதல் என பூகோள வெப்ப நிலை உயர்வின் சங்கிலித் தொடர் விளைவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 

விளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018

tamil-new-year 2018வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி விளம்பி வருஷம் சித்திரை மாதம் 1ந் திகதி (14.04.2018) சனிக்கிழமை காலை 7மணிக்கு அபரபக்க திரயோதசி திதியில் உத்தட்டாதி நஷத்திரத்தின் 1ம் பாதத்தில் மேடலக்கினத்தில் சிங்க நவாம்சத்தில் சனிகால வோரையில் புதன் சூக்கும வோரையில் தாமத குணவேளையில் நஷத்திர பஷியாகிய மயில் உண்டித்தொழிலும் செய்யுங்காலத்தில் இப்புதிய விளம்பி வருஷம் பிறக்கின்றது.