உதிருங் காலத்தும் உயிருள்ள அழகு!
காலத்தை வென்ற கனடியம்!
பூக்களாய் இருந்த மேனி
பிரிகின்ற போதும் அந்த
ஆக்கமும் அறிவும் கூடி
ஆகிடும் அறிஞன் போலே
வீக்கமாய் மரத்துக் காகி
விருட்சமாய்ப் பழுத்துப் பின்பு
பூக்களாய்த் தோன்றும் இந்தப்
பொழுதிலும் அழகு என்னே!