ஒரு மனிதக்காதல் புனிதமாகிறது..

உலகம் முழுவதுமே பனித்திவலை நீங்காத பால்நிற மல்லிகைப் பூக்களால் கட்டிய பூ மண்டபம் போல் புனிதமானதொரு குளிர் பரவியிருந்தது. மலரின் மென்மையிலே கலந்து இழையோடும் மணம் போல அந்த குளிரோடு கலந்து வீசும் இதமான மென்காற்று. புலர்ந்தும் புலராமல் இருக்கின்ற பேரரும்பு போல விடிந்தும் விடியாத பேதைப் பருவத்து இளங்காலை நேரம். அந்தப் புலராத காலை நேரத்திலும் கன்னக் கனிகள் கனிய முறுவல் பூத்தவாறே கல்யாணி வானத்தின் வர்ண ஜால்களை இரசித்துக் கொண்டிருந்தாள்.

விடியல்..

காமாட்சி தனது மூத்த புதல்வியின் பேச்சுக்களை மனதில் ஜீரணித்துப் பொருமினாள். ஐந்து குழந்தைகளின் வயிற்றைத் தமது வருமானத்தில் எப்படி ஆற்றி விட முடியும்?
தேயிலைக் கொழுந்து எடுக்கும் வேலைக்கே தன்னை அர்ப்பணித்து அவள் வாழ்க்கை எப்போதும் இருண்டதாகவே கழிந்து கொண்டிருந்தது.
அவள் கணவன் கண்ணப்பா மூட்டை தூக்குபவனாக நடமாடும் சுமை தாங்கியாகி விட்டான். இருவரின் வருமானமும் அவர்களின் ஒரு நேரச் சாப்பாட்டுக்கே போது மானதாக இருந்தது.
இந்நிலையில் பிள்ளைகளைப் படிப்பிக்க வேறு செலவு?….  அவற்றை அவர்களால் ஈடு செய்யமுடியுமா?

நிஜங்களின் நிழல்கள்…

     
 May I help you?…MANCHU சுமதியின் குரலுக்குப் பதிலளிக்குமுகமாக வந்து நின்றவனைப் பார்த்தபோது இதயம் ஒருமுறை கடுகதிவேகத்தில் அடித்தது. யாரை இனி ஒரு நாளுமே பார்க்கக்கூடாதென நினைத்தாளோ அவனே முன்னால் நின்றான்.
 அது ஒரு வங்கி. அந்தவங்கிக்கு மாற்றலாகிவந்து ஒரு மாத காலமாகிறது. ஆனால் இன்றுதான் அவனைக்கண்டிருக்கிறாள். இவன் இங்கே எப்படிவந்தான்? மொன்றியாலில்தானே இருப்பதாகச் சொன்னார்கள்…. கேள்விகள் மனதை அரித்தெடுத்தன….

அம்மாவின் நிழல்!

‘பொண்ணுடா அப்படியே உங்க அம்மா மாதிரி மூக்கும் முழியுமா என்னடா ஆனந்த் சத்தமே இல்லே..பொண்ணு பிறந்திட்டேனு கன்னத்திலே கையை வச்சி உக்காந்திட்டியா?’ பாட்டியின் குரலில் வழிந்த சந்தோஷத்தை அப்படியே நகல் எடுத்துக் கொள்ள முடியாமல் செல் போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

பொண்ணு பிறந்ததில் அவனுக்கு ஒன்றும் வருத்தமில்லை. ஆனால் என்ன காரணம் கொண்டும் தன் அம்மாவின் சாயலில் இருக்கக்கூடாது. இந்த நினைப்பே அவனை என்னவோ செய்தது.

அப்பாவின் கண்கள்

Appaa1ராத்திரி எல்லாம் அப்பாவோடுதான் இருந்தான் சங்கரன். பொட்டு தூக்கம்கூட இல்லை. அப்பா, இருமிக்கொண்டே இருந்தார். சங்கரனின் கை விரல்களைப் பிடித்து நகத்தைத் தடவியவாறே ஓரக்கண்ணால் பார்த்தார். ‘நகத்தை வெட்டுடா சங்கரா… படிக்கிற பையன் மாதிரியா இருக்க!’ என அப்பா சொல்லும் வழக்கமான வசவு, சங்கரனின் காதுகளில் ஒலித்தது.

நிரம்பியிருந்த மூத்திரப் பையை எடுத்துச் சென்று பாத்ரூமில் ஊற்றினான். திரும்பி வரும்போது நைட் டியூட்டி நர்ஸ், டேபிளின் மீது இருந்த காகிதத்தில் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். அவரிடம் அப்பாவின் ஆரோக்கியம் பற்றி ஏதாவது கேட்கலாம் என நினைத்து அருகில் சென்றான். தலையைத் தூக்கி அவனைப் பார்த்தார். ‘எல்லாமே முடிந்துபோய்விட்டது. அப்புறம் என்ன சொல்வது?’ என்பதுபோன்று இருந்தது அவருடைய பார்வை. அதற்கு மேல் சங்கரன் அங்கு நிற்கவில்லை.

நிம்மதியைத்தேடி

imagesகாலை மணி 5:40 . ட்ரெயினிலிருந்து வரும் சத்தத்தில் தாம்பரம் இரயில்வே ஸ்டேஷனே அலறியது . வழக்கமாக ஒரு மணி நேரமோ , ஒன்றரை மணி நேரமோ தாமதமாக வரும் ‘ தஞ்சாவூர் பாசஞ்சர் ‘ , இன்று வழக்கத்திற்கு மாறாக வெறும் பத்து நிமிடம் மட்டுமே தாமதமாக வந்தது.
கையில் அக்பர் காலத்துப் பெட்டி ஒன்றுடன் ரயிலில் இருந்து இறங்கி , ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்திறங்கும்போது , ” சார் ஆட்டோ ” , ” ஆட்டோ வேணுமா சார் ” என்று ஆட்டோவை ஏலம் விட்டவாறு , லட்டுவை ஈ மொய்ப்பது போல் , சேகரை மொய்த்து விட்டனர் நம் ஆட்டோக்காரர்கள்.