யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, புளியங்கூடலைப் பிறப்பிடமாகக் கெகாண்டவரும், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் அதிகாரியாக பணிபுரிகின்றவரும், பிரபல கட்டுரையாளரும், நூலாசிரியருமான நடராசா சிறிரஞ்சனால் தொகுப்பட்ட “யாழ்ப்பாணத் தமிழ் அகராதி” மற்றும் “யாழ்ப்பாண வழக்குச்சொல் அகராதி தொகுதி – ஒன்று” அறிமுக விழா கடந்த 22ம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோவில் அமைந்துள்ள Kennedy Convention Centre மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பாக நடைபெற்ற நினைவுகள்-2020 பல்சுவை நிகழ்ச்சி!
கனடாவில் நன்கு அறியப்பட்ட புகைப்படக் கலைஞரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான கனா ஆறுமுகம் அவர்கள் வருடாந்தம் நடாத்தும் நினைவுகள்-2020 பல்சுவை மற்றும் விருதுகள் வழங்கும் விழா என்பது அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு பெரு விழா என்று கூறலாம். இவ்விழா கடந்த சனிக்க்கிழமை மாலை காபுரோ சீன கலாச்சார மண்டபத்தில்; வெகுசிறப்பாக நடைபெற்றது.
இளம் பாடக பாடகிகளை குழுக்களாக அமைத்து அந்த குழுக்களுக்கிடையில் பாடல் போட்டிகளை நடாத்தி அவர்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பணப் பருசுகளை வழங்குவதே இந்த விழாவின் நோக்கங்களில் ஒன்றாகும்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் கலை மரபுரிமைக் கழகம் நடாத்திய தைப்பொங்கல் நிகழ்வு 2020
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் கலை மரபுரிமைக் கழகம் நடாத்திய தமிழ்மரபுத் தைத்திங்கள் பொங்கல் நிகழ்வு, கடந்த தைமாதம் 25ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில், ரொறன்ரோ செல்வ சந்நதி முருகன் ஆலய கலைமண்டபத்தில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்றது. சங்கத் தலைவர் கனகரத்தினம் இரவீந்திரன்; தமைமையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு விழா ஒரு கலை விழாபோல், தமிழ்மரபுத் திங்கள் அடையாளங்களை உள்ளடக்கியதாக, மிளிர்ந்தது என்றால் அது மிகையில்லை.
ஸ்காபுறோவில் சிறப்பாக நடைபெற்ற “வேலாயிமவன்-2″ இறுவெட்டு வெளியீட்டு விழா!
கடந்த சனிக்கிழமை மாலை கனடா ஸ்காபுறோவில் நகரில் அமைந்துள்ள "Armenian Youth Centre" மண்டபத்தில் வேலாயிமவன்-2" இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. மங்கல விளக்கேற்றல், தேசியகீதம், தமிழ்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம் ஆகியவற்றோடு ஆரம்பமான நிகழ்வுகளை ஜெய்அரவிந் அவர்கள் நெறிப்படுத்தினார். இறுவெட்டில் உள்ள பாடல்களோடு வேறும் பல பாடல்கள் மேடையில் அரங்கேறியது. இளம் பாடகர்களோடு இணைந்து பிரபல பாடகர் வி.எம். மகாலிங்கம் அவர்களின் இசை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கனடா தளிர் இதழின் ஆறாவது ஆண்டு விழா!
கனடாவில் இருந்து வெளிவரும் தளிர் இதழின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள குயின்ஸ் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இளம் தலைமுறையினருக்காக இவர்கள் நடத்திய இசை, நடனப்போட்டியான ‘சலங்கையும் சங்கீதமும்’ என்ற நிகழ்வின் இறுதிச் சுற்றும் நேற்றையதினம் வெகு சிறப்பாக அந்த மண்டபத்தில் நடை பெற்றது
பிரபல பாடகர் வி.எம். மகாலிங்கம் கலந்து கொண்ட FRONTLINE COMMUNITY CENTRE ஆதரவில் இடம்பெற்ற அற்புதமான இசை நிகழ்ச்சி;
சென்ற வெள்ளிக்கிழமை 13ம் திகதி மாலை கனடா ஸ்காபுறோவில் நகரில் இயங்கிவரும் ஒரு சேவை வழங்கும் நிறுவனமான FRONTLINE COMMUNITY CENTRE இற்காக நிதி சேகரிக்கும் ஒரு இசை நிகழ்சி ஸ்காபுறோவில் அமைந்துள்ள "ஒன்ராறியோ தமிழ் இசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்ற அற்புதமான இசை நிகழ்ச்சியில் இனிய பாடல்களை வழங்குவதற்காக தமிழ் நாட்டிலிருந்து பிரபல பாடகர் வி.எம். மகாலிங்கம் வருகை தந்து பார்வையாளர்கள் அனைவரையும் மெய்மறக்கச் செய்தார்.
கனடாவில் கொரோனா வைரஸ் என்ற அழையாவிருந்தாளிகள்! – குரு அரவிந்தன்
அழையாவிருந்தாளிகள் என்பது இன்று உலகம் முழுவதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கின்றது. கொரோனா என்ற வைரசுதான் இன்று இன, மத வேறுபாடின்றி எல்லோரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸை எப்படித் தடுக்கலாம் என்று தொடக்கத்தில் ஆலோசனை கேட்டேன். பலவிதமான ஆலோசனைகள் கிடைத்தன. முகநூலில் சில ஆலோசனைகள் கிடைத்திருக்கின்றது பாருங்கள் என்றாள் மனைவி. இலவச ஆலோசனைகள் என்பதால், எது சரி, எது பிழை என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டியிருந்தது.
தாயாய்., தாதியாய்..! – (குரு அரவிந்தன்)
(அம்மா, சமூகத்திற்குச் சேவை செய்யத்தான் வேண்டும், ஆனால் எங்களுக்கு நீதான் வேண்டும் – மகளின் ஓலம் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன.)
‘அம்மா, நீயும் எங்களோட நிற்கிறியா..?’ அருகே படுத்து இருந்த ஆறு வயது கடைசிப் பெண் சங்கீதா கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டாள்.
‘நிற்கலாம், ஆனால் கட்டாயம் வேலைக்குப் போகணுமே, நீ சமத்தாய் தூங்கு. அக்கா பார்த்துக் கொள்ளுவா’
அவளுக்கு ஆறுதல் சொல்லி, தட்டிக் கொடுத்து அணைத்து தூங்க வைத்தாள். பக்கத்துக் கட்டிலில் இரண்டாவது மகள் சுகன்யா எந்தவித கவலையும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தாள்.
நேரத்தைப் பார்த்துவிட்டு வேலைக்குப் போவதற்காக அவசரமாக எழுந்து உடை மாற்றினாள். யாரோ அவளை அவதானிப்பது போல அவளது உணர்வு சொல்லிற்று. திரும்பிப் பார்த்தாள்.
உலகெங்கும் பரவும் கொறோனா (COVID-19) – விழிப்புணர்வு எமக்கும் நாட்டிற்கும் நன்மை தரும் – குரு அரவிந்தன்
வேண்டாத விருந்தாளியை எப்படித் தவிர்ப்பது என்பதில் கவனம் எடுக்க வேண்டும். கொறோனா வைரஸ்சை நாங்கள் சாதாரணமாக எண்ணக்கூடாது. எமது இனத்தைச் சேர்ந்த சிலருக்கும் இது தொற்றியிருக்கின்றது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாடுதான் கொறோனா வைரஸ்சால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதற்குக் காரணம் பாதிக்கப்பட்டவர்கள் அனேகமாக முதியோர்களாக இருப்பதேயாகும். இந்த நகரங்களில் 23 வீதமானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்வர்கள். இறந்தவர்களில் அதிகமானவர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
சிறுகதை – ரோசக்காரி – குரு அரவிந்தன்
சிறுகதை – தங்கையின் அழகிய சினேகிதி – குரு அரவிந்தன்
அவன் உள்ளே வரும்போது ஹாலில் அவள் தனியே டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள்.
யார் இந்தப் பெண்? தங்கையின் சினேகிதியாக இருக்குமோ?
அவன் அவளைக் கவனிக்காதது போலக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவளைக் கடந்து தனது அறைக்குச் சென்றான்.
தங்கைக்கு இப்படி ஒரு அழகான சினேகிதி இருப்பது கூட அவனுக்கு இதுவரை தெரியாமற் போச்சே என்று வருத்தப்பட்டான்.
கொரோனா வைரஸின் தொடக்கமும் அதன் தொடர்ச்சியும்.. -குரு அரவிந்தன்
உலகரீதியாக எடுத்துப் பார்ப்போமேயானால் 215 நாடுகளில் கொரோனா வைரஸ் இதுவரை பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. உலகநாடுகளைச் சேர்ந்த 15,550,133 பேர் இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸின் பாதிப்பால் இதுவரை 633,372 மரணமடைந்திருக்கிறார்கள். 9,457,782 பேர் நோயில் இருந்து குணமடைந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வடிவத்தில் புதிய வைரஸ்சுகள் உருவாகிக் கொண்டே இருப்பதால் கொரோனா வைரஸை அடையாளம் காண்பதற்காக, 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக அடையாளம் காணப்பட்டதால் கோவிட்-19 என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்!
எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் புதன்கிழமை 15-7-2020 மாலை கொழும்பில் காலமாகியதாகத் தெரிவித்திருந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமதி பத்மா சோமகாந்தன், மிகவும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். மூத்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளருமான இவர் தனது எழுத்து ஆளுமையால் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல கட்டுரைகளை ஊடகங்களில் எழுதியது மட்டுமல்ல, நூலாகவும் வெளியிட்டிருந்தார். ஈழத்து சோமு என்று இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட திரு. நா. சோமகாந்தன், திருமதி பத்மா சோமகாந்தன் ஆகிய இருவரும் 2004 ஆம் ஆண்டு உதயன் கலைவிழாவில் பங்குபற்ற கனடா வந்திருந்த போது அவர்களைச் சந்தித்து உரையாடியிருந்தேன். அவர்களுடன் இரவு விருந்துபசாரத்திலும் அதிபர் பொ. கனகசபாபதியுடன் நானும் மனைவியும் கலந்து கொண்டிருந்தோம். அன்று தொட்டு அவர்களுடனான எங்கள் இலக்கிய நட்புத் தொடர்ந்தது.
இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சின்னையா நடராஜசிவம் காலமானர்.
இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சின்னையா நடராஜசிவம் காலமானர்.
நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமாகியுள்ளார். தனது 74 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.
நீண்டகாலமாக இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அவர் பணியாற்றி இருந்தார். இவர் திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட, மேடை நடிகராவார்.
´ஒதெல்லோ´, ´நத்தையும் ஆமையும்´ முதலான பல வானொலி நாடகங்களில் நடித்ததோடு, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியிருக்கிறார்.
ரூபவாஹினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப்பெற்ற, கலாநிதி ஜே. ஜெயமோகன் எழுதிய ‘கற்பனைகள் கலைவதில்லை’ என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர். தொடர்ந்து பல சிங்களத் தொடர் நாடகங்களில் நடித்தவர்.
மகாஜனக்கல்லூரி பழையமாணவர் சங்கம் – கனடாவின் முத்தமிழ் விழா – 2019
மகாஜனக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் மாதம் 10 ஆம் திகதி 2019 அன்று ரொறன்ரோவில் உள்ள ‘ஆர்மேனியன் யுத் சென்ரர்’ மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தச் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவு விழாவில் மகாஜனக் கல்லூரி பழைய மாணவனும் எழுத்தாளருமான குரு அரவிந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து விழாவைச் சிறப்பித்தார்.
கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய வருடாந்ததேர் திருவிழா! -2019
கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் இன்று 17-08-2019 ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா ஆயிரக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் புடைசூழ இனிதே நடந்தேறியது. அதிகாலை அபிசேகத்துடன் பூசைகள் ஆரம்பமாகி வசந்தமண்டப பூசையை தொடர்ந்து ஐயப்பன், விநாயகப் பெருமான், சுப்பிரமணியப்பெருமான் சகிதம் உள்வீதி வலம் வந்து காலை 09.30 மணிக்கு தேரில் ஆரோகணித்தார்.
“தமிழின் சுவை” Taste of Tamil மாபெரும் திறந்த வெளி இசை நிகழ்ச்சிக்கு அலையென திரண்ட மக்கள் கூட்டம்
கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் 10ம் திகதி சனிக்கிழமையும் கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற "தமிழின் சுவை" Taste of Tamil என்னும் மாபெரும் திறந்த வெளி இசை நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்த வண்ணம் இருந்தது. அத்துடன் வற்றாத இசை வெள்ளத்தை ஓடவிட்ட அந்த மேடையில் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உட்பட பல அரசியல் தலைவர்கள் இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய வர்த்தகப் பெருமக்களுக்கு கௌரவ கேடயங்களையும், மலர்ச் செண்டு ஆகியவற்றை ஆகியவற்றை வழங்கினார்கள். அட்டகாசமாக ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் கூட்டத்தின் மத்தியில் சுப்பர் சிங்கர் பாடகரும் பாடகியுமான செந்தில்கணேஸ் லட்சுமி ஆகியோர் பாடி ரகிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றார்கள்.
திருமதி கிருஷ்ணவேணி என்ற “தீபதிலகை” அவர்களின் ” மகிழம்பூவும் அறுகம்புல்லும்” நூல் வெளியீடு
திருமதி கிருஷ்ணவேணி என்ற "தீபதிலகை" அவர்களின் " மகிழம்பூவும் அறுகம்புல்லும்" என்ற இலக்கிய நூல் வெளியீடு ஆகஸ்ட் 9ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று ஸ்காபோரோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இலக்கியத்துறை சார்ந்தவர்கள், கல்விமான்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், அன்பான உறவுகள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு நினைவு விழாவும்! நூல் வெளியீட்டு விழாவும்!!
ஈழம் தந்த இணையற்ற தமிழ்ப் பேரறிஞர், வித்துவான், பண்டிதர், சைவப்புலவர், சித்தாந்த சிரோன்மணி, கவிராயர், தமிழ்ப்பேராசான், தமிழ்ப்பேரன்பர் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டு நினைவு விழாவும், நூல் வெளியீட்டு விழாவும் கடந்த சனிக்கிழமை மாலை கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய கலாச்சார மண்டபத்தில் அவரது புதல்வன் இளஞ்சேய் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஈழத்தமிழுலகில் 1940-1966 வரையான காலப்பகுதியில் தன் எழுத்தாற்றல், கவியாற்றல், சொல்லாற்றல், பேச்சாற்றல் என்பற்றால் தமிழ் வேந்தனாகக் கோலோச்சிய
குரு அரவிந்தனின் இரண்டு நாவல்கள் இலங்கையில் வெளியிடப்பெற்றன
எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் கனடா தமிழ் பத்திரிகைகளில் தொடராக எழுதிய இரண்டு புதினங்கள் சென்ற மாதம் இலங்கையில் வெளியிடப்பெற்றன.
குரு அரவிந்தனின் 50 ஆண்டுகால இலக்கிய சேவையைப் பாராட்டி ஞானம் கலை இலக்கியப் பண்ணையால் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்ற நாவல் 16-06-2019 கொழும்பு தமிழ்சங்க மண்டபத்தில் வெளியிடப் பெற்றது.