ஈச்சமோட்டை கனடா சங்கம் நடாத்திய “ஈச்சமோட்டை திடல் Winter Gala 2023”

கனடாவில் இயங்கிவரும் ஈச்சமோட்டை கனடா சங்கம் நடாத்திய “ஈச்சமோட்டை திடல் Winter Gala 2023” வருடாந்த நத்தார் ஒன்றுகூடல் மற்றும் இராப்போசன விருந்து ஆகியன டிசம்பர் 2ம் திகதி சனிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள “St. Nicholas Church Hall” மண்டபத்தில் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மற்றும் நடனம்ஆகியனவும் இடம்பெற்று


கனடாவில் சமீபத்தில் வெளிவந்த தமிழ் நூல்கள்!

கனடாவில் கோடைகாலம் வந்தால் நூல் வெளியீட்டு விழாக்கள் தொடர்ந்து நடைபெறுவதுண்டு. அணிந்துரை அல்லது வாழ்த்துரை எழுதவோ அல்லது வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றவோ சில எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களைக் கொண்டு வந்து தருவதுண்டு. அப்படி என்னிடம் சமீபத்தில் கிடைத்த அந்த நூல்களை எப்படியாவது ஆவணப் படுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. எனக்குக் கிடைத்த நூல்களை மட்டும், சர்வதேச ஆர்வலர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாலும், மற்றும் அடுத்த தலைமுறையினருக்குப் பயன்படும் என்பதாலும் இங்கு ஆவணப்படுத்துகின்றேன்.


அகவை எண்பது காணும் சிந்தனைப்பூக்கள் எஸ்.பத்மநாதன்!

‘சிந்தனைப்பூக்கள்’ பத்மநாதன் என்று தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட உரையாளர், எழுத்தாளர் திரு. எஸ். பத்மநாதன் அவர்கள் இவ்வருடம் டிசெம்பர் மாதம் முத்து விழாக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் உள்ள உரும்பிராய் என்ற ஊரில் பிறந்தார். ஆரம்ப கல்வியை உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்திலும், அதைத் தொடர்ந்து உரும்பிராய் இந்துக் கல்லூரி, ஸ்கந்தவரோதயா கல்லூரி, பேராதனை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். பேராதனை பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புப் பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டமும் பெற்றவர். கனடாவில் ரொறன்ரோ வர்த்தகக் கல்லூரியில் 1993 ஆம் ஆண்டு ‘பிரயாணமும் உல்லாசப் பயணமும்’ என்னும் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார்.


கரம்பொன் அருள்மிகு சீரடி சாய்பாபா ஆலய விசேஷ பூஜைகள்

கரம்பொன் சுருவில் வீதியில் ஸ்ரீ பொன் சாயியாக வீற்றிருக்கும் சீரடி சாயி ஆலயத்தின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றி லண்டனில் வசித்து வரும் திருமதி. கமலா பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆலயத்திற்கு சென்று ஆலயத்தின் மகிமை பற்றி விபரமாக உரையாற்றினார். இன்று கரம்பொன் சீரடி சாயி இல்லத்திலே ஸ்ரீ பொன்சாயி தொண்டர்களின் சேவையானது மிகவும் சிறப்பான ஒன்றாக அமைகிறது.


‘விலா கருணா’ மூத்தோர் இல்லம் நடத்திய ‘சந்தியாராகம்’ சுப்பர் சிங்கர் போட்டி நிகழ்ச்சி

கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவருபவதுடன் தமிழ் பேசும் மூத்தவர்களின் உடல் நலம் குன்றிய நாட்களில் அவர்களைப் பராமரிக்கும் அற்புதமான மனித நேயப் பணியை மேற்கொண்டு வரும் திருமதி இந்திராணியின் ‘விலா கருணா’ மூத்தோர் இல்லம் நடத்திய ‘சந்தியாராகம்’ சுப்பர் சிங்கர் போட்டி நிகழ்ச்சி கடந்த 16ம் திகதி சனிக்கிழமை ஒன்றாரியோ இசைக் கலா மன்றத்தின் கலா மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கரம்பொன் சீரடி சாயி பாபா கோவிலில் பாபா சிலை பிரதிஷ்டை (குடமுழுக்கு விழா-10-09-2023)

கரம்பொன் சுருவில் வீதியில் ஸ்ரீ பொன் சாயியாக வீற்றிருக்கும் சீரடி சாயி பாபாவிற்கு ஸ்வஸ்தி ஸ்ரீ நிகழும் மங்களகரமான சோபகிருது வருஷம் ஆவணித் திங்கள் 24ம் நாள் (10-09-2023) ஞாயிற்றுக்கிழமை புனர்பூச நட்சத்திரமும் ஏகாதசி திதியும் சித்த யோகமும் கூடிய சுபதினத்தில் காலை 8.32 மணிமுதல் 10.36 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற்றது. மீண்டும் எங்கள் ஊர் பொன்னாக மிளிர ஸ்ரீ பொன்சாயியைப் போற்றுவோமாக!.


திரு& திருமதி தர்மசோதி, ஷீலா தம்பதிகளின் மகவுகளாகிய அண்ணன், தங்கை, ஹரிகரன், ஹரிணி இரட்டையர்களின் நாட்டிய அரங்கேற்றம்.

நிமிடத்துக்கு நிமிடம்,வியர்வைத் துளிகளை வழித்தெறியத் தேவையற்ற,குளிருக்கான ஆடைகள் எவற்றினும் தேவைகளற்ற, ஒரு கச்சிதமான காலநிலை.பூமி விரைவாகச் சூடாகி, உலகம் முழுவதுமே குழப்பமான காலநிலையை எதிர்கொள்கின்ற இந்தக் காலகட்டத்தில் , கனடா போன்ற ஒரு நாட்டில் இத்தகையதான நாட்கள் கிடைப்பதென்பது மிக அரிது.

அத்தகையதொரு கச்சிதமான காலநிலையைக் கொண்டிருந்த நாளில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களாக உறவுகளும் நண்பர்களும் ஒன்று கூடினோம். இடம்: ஸ்கார்புரோ சீனக் கலாச்சார மண்டபம் நாள்: ஆவணி 19,2023


இன்று 14-08-2023 ஊர்காவற்றுறை கரம்பொன் மேற்கு அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி ஆலய இரத உற்சவம்!

மேலைக்கரம்பொன் பதியில் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி சுவாமியின் வருடாந்த மகோற்சவம் மங்களகரமான சுபகிருது வருஷம் ஆடி மாதம் 21ம் நாள் (06-08-2023) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துத் தினங்கள் நடைபெற்று, 11ம் நாள் (14-08-2023) திங்கட்கிழமை தேர்த்திருவிழாவும் 12ம் நாள் (15-08-2023) செவ்வாய்க்கிழமை எம்பெருமானுக்குத் தீர்த்த உற்சவமும் நடைபெறுகிறது. இவ் உற்சவ காலங்களில் அடியார்கள் விரதம் அனுஷ்டித்து ஆசார சீலராய் ஆலயத்திற்கு வருகை தந்து ஸ்ரீ முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுச் செல்கின்றனர்!


கனடா ஓபன் பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் லக்‌ஷயா சென்

கனடா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.

கனடாவின் கல்கரி நகரில் நடைபெற்று வந்த இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 19-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்‌ஷயா சென், ஆல் இங்கிலாந்து சாம்பியனும் 10-ம் நிலை வீரருமான சீனாவின் லி ஷி பெங்குடன் மோதினார். இதில் 21 வயதான லக்‌ஷயா சென் 21-18, 22-20 என்ற நேர் செட்டில்வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.


நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா தற்போது நடைபெற்றுக்கெண்டிருக்கின்றது. தொடர்ந்து பதினாறு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில், இன்றைய தினம்(02.07.2023) ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது.