இன்று ஆஞ்சநேயரின் வாரதினமான சனிக்கிழமையுடன் கூடிய ஹனுமான் ஜயந்தியும், சித்திரை பௌர்ணமியும்!

Aanjaneyar9aஆஞ்சநேயரின் வாரதினமான சனிக்கிழமையுடன் கூடிய ஹனுமான் ஜயந்தியும் அத்துடன் சேர்ந்த சித்திரை பௌர்ணமி தினமான இன்று கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில்ஸ்ரீசுயம்பு ஆஞ்சநேயருக்கு செந்தூரம் இட்டு , 108 வடை மாலை, வெற்றிலை மாலை, அவரின் வாலைச்சுற்றி துளசி மாலை அணிவித்தும், நாற்பது புகழ்மாலை (ஹனுமான் சலிசா) பாடி, 108 போற்றிகளுடன் பூசை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றன.ஸ்ரீபொன்சாயிக்கு ஆராத்தியுடன் உழுந்துப் பிரியன் ஹனுமானின் இட்டலியும் பிரசாதமாக அடியவர்களுக்கு வழங்கப்பெற்றென.

கரம்பொன் கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று சித்ரா பௌர்ணமி தினத்தில் நடைபெற்ற அபிஷேகமும்  அன்னதான நிகழ்வும்! 

கண்ணகி அம்மன் பௌர்ணமி1cகரம்பொன் கிராமத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று 16-04-2022  சனிக்கிழமை விசேஷ பூஜைகளுடன் அபிஷேகமும்  அன்னதான நிகழ்வும்; சிறப்பாக நடைபெற்றது.
சித்ரா பவுர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பவுர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ ராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பவுர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது.

கரம்பொன் சீரடி சாயி இல்லத்தின் தமிழ் புதுவருட கொண்டாட்டமும், நன்றி வழங்கலும்!

Araneri students-1bகரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் தமிழ் புதுவருட தினமான இன்று 14-04-2022 வியாழக்கிழமை பக்தர்கள் கூடி சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். அத்துடன் திருவாளர் சோமசுந்தரம் கனகநாதன் (குமரன்) அவர்கள் தான் பிறந்த கரம்பொன் ஊரின் வளர்ச்சிக்காக கனடாவிலிருந்து சென்று சாயி தொண்டாற்றிய அவரது சேவைக்காக குழந்தைகளும் ஏன் பெரியவர்களும் கூட எங்கள் 'சாயி அப்பா' என வாழ்த்தி அவருக்கு நன்றியுரை கூறி, மீண்டும் மீண்டும் கரம்பொன் சீரடி சாயி இல்லத்திற்கு வருகை தந்து தங்களுக்கு அன்பு வழிகாட்டும்படி வேண்டி பயணம் அனுப்பி வைத்தார்கள்.

கரம்பொன் மக்களால் அழைக்கப்பட்ட ‘பொன்னர் வளவு’ ஸ்ரீ பொன்சாயி மாதிரிக் கிராமமாக குருவருளால் உருவாகவுள்ளது

கரம்பொponsaaji village1aன் மக்களால் அழைக்கப்பட்ட 'பொன்னர் வளவு' ஸ்ரீ பொன்சாயி மாதிரிக் கிராமமாக குருவருளால் உருவாகவுள்ளது. புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இன்று 13-04-2022 புதன்கிழமை சுருவில் வீதி, கரம்பொன் தென்கிழக்கு ஊர்காவற்றுறை J53 பிரிவில் அமைந்துள்ள 25 பரப்புடைய இக்காணி காணியற்ற கரம்பொன் குடிமக்களான பத்து குடும்ப அங்கத்தவர்களுக்கு (அரசாங்க வீட்டுத் திட்டத்திற்காக) பிரித்து குலுக்கல் சீட்டு முறையில் பாரபட்சமின்றறி வழங்கப்பட்டன. 

கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் நடைபெற்ற ‘இராம நவமி’ நிகழ்வு

Ramanavami1கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில இன்று 10-04-2022 ஞாயிற்றுக் கிழமை 'இராம நவமி' நிகழ்வு குருவருளாலும் இறையருளாலும் மிக சிறப்பாக நடைபெற்றென. இந்நிகழ்வில் பக்தர்களின் பஜனைப் பாடல்களுடன் சீரடி சாயிபா மற்றும் ஆஞ்சநேயருக்கும் பூஜைகளுடன் வழிபாடும் நடைபெற்றது. இத்திருக் கோவில் கரம்பொன் மக்கள் யாவர்க்கும் சீரடிபாபாவின் அன்புக் கொள்கையின் ' பாதையில் பேதமின்றி எல்லோருக்கும் சம உரிமையுடன்' தடையின்றி சென்று வழிபட அமைக்கப்பட்டுள்ளது.

பக்தி பூர்வமாக நடைபெற்ற ‘கரம்பொன் ஸ்ரீ சுயம்பு ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்’ 

கரம்பொன் ஸ்ரீ சுயம்பு ஆஞ்சநேயர்கரம்பொன் ' ஸ்ரீபொன் சாயி' தொண்டர் சேவையின் முன்னோக்கி நகரும் செயல் திட்டத்தின் கீழ் இன்று 23-03-2022 புதன் கிழமை கரம்பொன் சுருவில் வீதியில் அமைந்துள்ள கரம்பொன் ஸ்ரீ சுயம்பு ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் நல்லூர் ' யாழ் மத்தி ஸ்ரீ பகவான் சத்திய சாய் சேவா நிலையத்திலிருந்து சிவாச்சாரியார்கள் சகிதம் பக்தர்கள் புடை சூழ சுருவில் வீதி வழியாக மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, சுயம்பு ஆஞ்சநேயர் பிரதிஷ்டா, கும்பாபிஷேகம் குருவருளாலும் இறையருளாலும் மிகச் சிறப்பாக நடைபெற்றென.

கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்களால் வெளியிடப்பட்ட ‘தமிழ் வளர்த்த தீவகச் சான்றோர்கள்’ வாழ்க்கை-இலக்கிய-வரலாற்று ஆவண நூல்

book1aஅல்லைப்பிட்டி மண்டதீவைச் சேர்ந்த கலாநிதி செ.திருநாவுக்கரசு என்ற தனிமனிதனின் முயற்சியால் 1289 பக்கங்கள் கொண்ட 'தமிழ் வளர்த்த தீவகச் சான்றோர்கள்' என்ற வாழ்க்கை-இலக்கிய-வரலாற்று ஆவண நூலை வெளியிட்டுள்ளார். இந்நூலில் அவர் 109 தீவகச் சான்றோர்கள் பற்றி எழுதியுள்ளார்கள். ஊர்hவற்றுறையிலிருந்து 9 சான்றோர்கள் பற்றியும், மண்டைதீவு அல்லைப்பிட்டியிலிருந்து  13 தமிழ் சான்றோர்கள் பற்றியும், சரவணை பள்ளம்புலத்திலிருந்து 8 தமிழ் சான்றோர்கள் பற்றியும், வேலணையிலிருந்த 17 தமிழ் சான்றோர்கள் பற்றியும்,புங்குடுதீவிலிருந்து 14 தமிழ் சான்றோர்கள் பற்றியும், நயினாதீவிலிருந்து 15 தமிழ் சான்றோர்கள் பற்றியும், நெடுந்தீவிலிருந்து 8 தமிழ் சான்றோர்கள் பற்றியும்,

கனடாவில் தனது 87வது வயதில் முதுகலை பட்டம் பெற்ற வரதா சண்முகநாதன்

varathaகனடாவில் வசித்துவரும் இலங்கையரான வரதா சண்முகநாதன் தமது 87வது வயதில் யோர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று ஒட்டுமொத்த சமூகத்தையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இணையமூடாக நடந்த பட்டமளிப்பு விழாவில் 87 வயதான வரதா சண்முகநாதன் ஒன்ராறியோவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

கனேடிய இராணுவத்தில் சாதித்த யாழ்ப்பாண இந்துவின் மைந்தன் மதியாபரணம் வாகீசன்!

m.Vaaheesan1aகனேடிய பாதுகாப்புப் படையில் 25 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியமைக்காக உயர் மதிப்புறு விருதான Canadian Forces’ Decoration (CD) First Clasp என்னும் சிறப்பு விருதினை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதியாபரணம் வாகீசனிற்கு கனடிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

கனேடிய அரச சார்ந்த கௌரவத்தைப் பெற்ற அவர் தற்பொழுது கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஒரு சிரேஷ்ட நிதியியல் சேவைகள் நிர்வாகியாக பணியாற்றி தற்போது மனிடோபாவில் முதுநிலை நிதியியல் அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.

இது தொடர்பில் ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் முழுமையான காணொளி,

கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வு 2022!

Pongal 2022கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்தில் கரம்பொன் வாழ் மக்களால் தைமாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை பொங்கல் நிகழ்வு ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தச் சிறப்பு விழா ஒரு கலைவிழாபோல், தமிழ்மரபுத் திங்கள் அடையாளங்களை உள்ளடக்கியதாக, மிளிர்ந்தது என்றால் அது மிகையில்லை.; கரம்பொன் வாழ் மக்களும் அவர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பொங்கலை உண்டு மகிழ்ந்தனர்.

தைப்பொங்கல் தமிழர்களின் திருநாள்!

pongal5

தைப்பொங்கல் தமிழர் திருநாளாகும். உழவர் திருநாள் என்றும் இதை அழைப்பர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பொதுவாகப் பெரியோர் சொல்வார்கள். ஆங்கில நாட்காட்டியின்படி தைமாதம் 14 ஆம் திகதி அல்லது 15 ஆம் திகதியில் தைப்பொங்கல் வரும். அதுவே தமிழ் நாட்காட்டியில் தைமாதம் முதலாம் திகதியாகும். இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரிசஸ் மற்றும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப் படுகின்றது.

பிறந்தது 2022 புத்தாண்டு: மக்கள் உற்சாக வரவேற்பு!

2022 ஆ2022-New-Year1aண்டு புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வரும் நிலையில் நிலையில் நியூசிலாந்தில் முதலாவதாக 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. அங்குள்ள மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.

பூமிப் பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும் போது மறுமுனையில் இரவாக இருக்கும். அந்த வகையில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் சூரிய உதயத்தைச் சந்திக்கும் முதல் நாடாக உள்ளது. இதனடிப்படையில் ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பும் அமைகிறது.

மருத்துவப் படிப்பில் 13 தங்கப் பதக்கம்: இலங்கை தமிழ் பெண் தர்ஷிகா சாதனை!

tharshika1-13.jpgகொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.இலங்கையின் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே இந்த வியப்பு மிகுந்த சாதனையை நிகழ்தியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சில விண்வெளி நிகழ்வுகள்!

இன்ஜெனுட்டிகோவிட்- 19 பேரிடர் 2020 – 1921 ஆம் ஆண்டுகளில் ஒரு பக்கம் உலக மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்க, மறுபக்கம் முன்னேறிய நாடுகள் விண்வெளி சார்ந்த தமது நடவடிக்கைகளை மிகவும் கவனமாக நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறன. கோவிட் பேரிடரைக் காரணம் காட்டி அவற்றைத் தள்ளிப் போடவோ அல்லது நிறுத்திவைக்கவோ முடியாத ஒரு நிலையில் விண்வெளி சார்ந்த நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. பல நூறு விண்கலங்களும், ரோபோக்களும் விண்வெளியில் வலம் வந்து கொண்டிருப்பதால், அவற்றின் நடவடிக்கைகள் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு நிலையங்களில் இருந்துதான் கண்காணிக்கப்படுகின்றன.

அதிசய குணம் கொண்ட ஐந்தறிவு சிறிய பறவை…மனிதர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்!

Barn-Swallow1aபார்ன் சுவாலோ  (Barn Swallow ) இது ஆர்ஜென்டினா நாட்டிலே வாழும் ஒரு அதிசய பறவையினம் , ஐந்தறிவு ஜீவனான சின்னஞ்சிறு பறவையினம் தான் ஆனால் , இதனிடம் மனிதர்களாகிய நாம் படிக்க வேண்டிய பாடம் ஏராளம்.

தன்னம்பிக்கை , தைரியம் , முயற்சி , சாமர்த்தியம் என்று பல தகைமைகளை தன்னகத்தே கொண்ட இக்குருவி  (Barn Swallow ) , மனித படைப்பிற்கான இறைவனின் இன்னொரு பாடமாகும்.

எங்கள் வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம்!!

Comet Hale-Boppவானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம் தோன்றி இருக்கின்றது. ஆனால் இந்த மாதம் 12 ஆம் திகதி (12-12-21) ஞாயிற்றுக்கிழமை வானத்தில் காட்சி தர இருக்கும் வால்நட்சத்திரத்தை, மீண்டும் ஒரு முறை பார்க்க உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்காது. காரணம் பல ஆண்டுகளின் பின் தான் இது மீண்டும் தோன்றலாம். இந்த வால் நட்சத்திரம் சூரியனை நீண்ட பாதையில் சுற்றி வருவதால் திரும்பி வருவதற்கு சுமார் 3,500 வருடங்கள் எடுக்கலாம் என்று நம்புகிறார்கள்.10-50 தொலைநோக்கும் கருவி (Binocular) உங்களிடம் இருந்தால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

உலகின் தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான 2021 விருது பெற்ற யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன்

2021 ம் ஆRamanan1aண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Cristal Pen விருதினை யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன் பெற்றுக் கொண்டுள்ளார்.

விசேடமாக கொவிட் -19 இடர் காலத்தில் தலை சிறந்த அர்ப்பணிப்புடன் எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி கற்பித்தலில் புத்தாக்க முறைமைகளைப் புகுத்தி நிகழ்நிலை கற்பித்தலில் மாணவர்கள் வெற்றிகரமாக ஈடுபடுவதற்கான வழிவகைகளைக் கையாண்டு மாணவர்களை கல்வியின் பால் தூணடுவதன் மூலம் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் கல்விப் பணியாற்றியமைக்காகவும் உலகின் அனைத்து தமிழ் மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் இலவசமாக ஆசிரிய பணியினை முன்னெடுத்தமைக்காகவும் வழங்கப்படுகிறது.

Elson Badminton Club நடாத்திய வருடாந்த நத்தார் ஒன்றுகூடல் 2021!

Elson Xmas 2021-1கனடாவில் இயங்கிவரும் Elson Badminton Club நடாத்திய வருடாந்த நத்தார் ஒன்றுகூடல் மற்றும் இராப்போசன விருந்து ஆகியன டிசம்பர் 18ம் திகதி சனிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள '"The Estate Banquet Hall" மண்டபத்தில் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மற்றும் நடனம்ஆகியனவும் இடம்பெற்று சிறுவர் சிறுமியர்களுக்கு அன்பளிப்புக்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. 

Friends Badminton Club of Canada விளையாட்டுக் கழக ஆண்களுக்கான இரட்டையர் பூப்பந்தாட்ட போட்டிகள்!

11-21-21 FB-1aநவம்பர் மாதம் 21ம் திகதி  ஞாயிற்றுகிழமை Friends Badminton  Club of Canada விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் பிரிவுகளுக்கிடையே பூப்பந்தாட்ட போட்டிகள் கனடாவின் ஸ்காபுரோ பிரதேசத்தில் அமைந்திருக்கும் " Epic Sports Centre"  இல் நடைபெற்றது. இப் போட்டிகள் 20 இரட்டையர் பிரிவுகளுக்கிடையே நான்கு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டு ஒரே நேரத்தில் ஆரம்பபமாகியது.

கனடா மகாஜனா பழைய மாணவர்களின் பாராட்டுவிழாவும், இரவு விருந்துபசாரமும்

Maha-Dinner-Nov21-1aமிக நீண்ட நாட்களின் பின் கனடா மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் ‘கலேஸ்நைட்’ இரவு விருந்துபசாரம் நவெம்பர் மாதம் 14 ஆம் திகதி 2021, மாடி கிறாஸ் பாங்குவிட் மண்டபத்தில் நடந்தேறியது. இந்த விருந்துபசாரத்தில் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.