எம்மைப்பற்றி

 

கரம்பொன்.நெட்

இவ் இணையம் 2007ம் ஆண்டில் கரம்பொன்.நெட் என்ற இணையவலை முகவரியின் ஊடாக, எமது கிராமம் தொடர்பான தகவல்களை தன்னகத்தே கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

எங்கள் கிராமம், நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழலின் காரணத்தால் பாதிக்கப்பட்டு பெரும்பாலான கிராமத்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பாதிப்பால் அனைவரும் எல்லாத்திசைகளிலும் சிதறுண்டு அயல் கிராமங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற போதும், நாங்கள் பிறந்து வாழ்ந்த கிராமத்தின் பெயர் அனைவர் மனங்களில் இருந்தும் மறைந்து, மறைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இவ் இணையம் கிராமத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு இவ் இணையத்தின் பதிவு பக்கங்களை கிராமத்தின் வரலாறு …, கிராமம் தொடர்பான புகைப்படங்கள்…, ஆலயங்கள், பாடசாலைகள்…, கிராமத்தின் புகழ்பூத்த பெரியார்கள்.., அறிவித்தல்கள்… போன்ற விபரங்களுடனும் பல பயன்தரு தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் கிராமம் தொடர்பான தகவல்கள் எமக்குக் கிடைக்கும் போது இவ் இணையத்தின் ஊடாக வெளிக்கொணர்வதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

நன்றி