Mayuranயுனைரெட் விளையாட்டுக்கழகம் நடாத்திய – பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி-2014

எட்டாவது ஆண்டு நிறைவையொட்டி United Tamil Sports Club  நடாத்திய Badminton  சுற்றுப் போட்டி கடந்த 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுரோவில் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள்  சிறுவர்கள் பெரியவர்களென பல பிரிவுகளில் போட்டி  காலை 10.00 மணி தொடக்கம் இரவு 8.00மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டி முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன. வருடாவருடம் தவறாமல் யுனைரெட் விளையாட்டுக்கழகம் இப் பூப்பந்தாட்டப் போட்டியை நடாத்தி வருவது பாராட்டுதற்குரியது.

அந்நிகழ்வின் நிழற்படங்களும், ஒளிப்படங்களும்

[Best_Wordpress_Gallery id=”24″ gal_title=”gallery14″]

 

யுனைரெட் விளையாட்டுக்கழகம் (United Tamil Sports Club)

2006ம் ஆண்டு இக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. தினைந்து விளையாட்டு வீர வீராங்கனையுடன் ஆரம்பித்த இக்கழகம் இன்று 300க்கும் மேற்பட்ட திறமை வாய்ந்த விளையாட்டு வீர வீராங்கனைகளைக் கொண்டுள்ளது என்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றது. இக்கழகமானது உதைபந்தாட்டம், தடகள விளையாட்டுக்கள் மட்டுமன்றி பூப்பந்தாட்டம் என பல பயிற்சிகளை தமது மாணவர்க்கு கொடுத்து ஊக்கம் காட்டுகிறது. இன்று இக்கழகம் தமது மாணவர்களை தமது சமூகத்துள் மட்டுமன்றி வேற்றின சமூகத்துடனும் போட்டிகளில் பங்குபற்ற வைத்து வருகிறது. இன்று எமது வீர வீராங்கனைகள் மாகாண ரீதியில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள் என்பதனை பெருமைக்குரிய விடயமாகும். வேற்று இனமான Flying Angels  கழகத்தைத் தொடர்ந்து இரு ஆண்டுகளாக மிகப்பெரிய வெற்றிக் கேடயமான “Championship Trophy” எடுத்து வருவது எமது UTSC என்பது எங்கள் எல்லோருக்கும் பெருமை தரக்கூடிய விடயமாகும். 

மேலும் 2009ம் 2010ம் ஆண்டில் 9வது 10வது ஆண்டு பயிலும் மாணவர்களை OFSSA என்றழைக்கும் பள்ளிகளுக்கிடையில் நடைபெறும் மாகாண ரீதியிலான போட்டிகளுக்கு பயிற்சி அளித்து மாணவர்களை பல விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றச் செய்து பல பதக்கங்களை வென்றெடுத்த பெருமை இக்கழகத்தையே சாரும்.

OFSSA இல் பங்குபற்றிய இக்கழக 15 மாணவர்களும் இன்று மாகாண ரீதியி;ல் முதல் 10 இடங்களுக்குள் இருப்பது கழகத்திற்கு மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழினத்திற்கும் பெருமையே.

இன்று Ontario மாகாணத்தில் 23 வேற்றின கழகங்களுடன் ஈடுகொடுத்து முன்னின்று வருவது இக் கழகம் என்பதை மிகப் பெருமையுடன் உங்களுக்கு அறியத்தருகிறோம். இக் கழகம் கடந்த 2011ம் வருடம் மாகாண ரீதியில் முதலாம் இடத்தை எடுத்துள்ளது மட்டுமன்றி 21 வருடங்களாக இருந்து வந்த 4X200 Relay Record  ஐ அவ்வருடம் March 19th,2011  அன்று உடைத்து எமது 8வயது தமிழ் பெண்மணிகள் தங்களது புதிய Record ஐ நிலைநாட்டியுள்ளார்கள்.

ஒவ்வொரு வருடமும் முன்னேற்றப் பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கும் எமது மாணவர்களை தமது பயிற்சிகளின் மூலம் ஊக்கப்படுத்தி வேறு பலதுறைகளிலும் திறம்பட செய்யும் நோக்குடன் இக்கழகம் உதைபந்தாட்ட வீரர்களை “Leauge” அனுப்புகின்றது. மாகாண ரீதியில் வெற்றி பெற்ற 4 மாணவர்களை இந்த வருடம் தேசீய ரீதியில் பங்கு பற்ற பல பயிற்சிகளை அளித்து வருகின்றது.

 300க்கும் மேற்பட்ட திறமைவாய்ந்த மாணவர்களைக் கொண்ட இக் கழகத்தின் மிகப்பெரிய நோக்கமானது 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள Olympic போட்டியில் பங்குபற்றுவதே.

புலம்பெயர்ந்து வாழும் இக்கனடா நாட்டில்  நம் தமிழ் மாணவர்கள் விளையாட்டுத் துறையில் பலர் வியக்கும் சாதனைகளைப் படைக்க பயிற்றியளிக்கும் யுனைரெட் விளையாட்டுக்கழகத்திற்கு  வாழ்த்துக்கள்;. 
உங்கள் குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்க்கையும் முன்னேற்றமும் பெற்றோர்களான உங்கள் கைகளில் தான் உள்ளது.