எங்கள் பேரன்புக்கும், பெருமதிப்பிற்கும் உரிய வாசகர்கள், உறவுகள், ஊர்மக்கள், புலம்பெயர் வாழ் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
"எல்லோரும் எல்லாம் பெற்று இன்பம் பொங்கும்
சுபீட்சம் நிறைந்த ஆண்டாக 2015 மலரட்டும்"
புத்தாண்டான இன்று 01-01-2015 ஸ்ரீரடி சாயி மந்திர் மற்றும் கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்திலும் நடைபெற்ற பூஜைகளின் ஒளிப்படங்களில் சில
விட்டதை பிடிப்பதும்
கிடைத்ததை தக்க வைத்து கொள்வதும் தான்
ஒவ்வொரு மனிதனின் முதல் குறிக்கோள்
அனைத்து புத்தாண்டிலும்!
அனைத்தும் கிடைத்து
இபுத்தாண்டு இனியதாய் அமைய
எங்கள் வாழ்த்துக்கள்!
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
– பாரதி
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!..