அறிவு அடக்கம் அஞ்சாமை கொடுக்கும் குணம் உங்களிடம் இருக்குமானால் உங்களுக்கு வேண்டாதவர்கள் இந்த உலகில் இல்லை.
நாம் எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம்.
வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைக் கண்டு பயந்து அவற்றைப் பொல்லாதவை என்று மதிப்பிடுபவர்கள் வெறும் கோழைகளே.
வாழ்க்கை பின்னுக்குப் போவதுமில்லை நேற்றோடு நின்று விடுவதுமில்லை.
மனித வாழ்க்கை ஒரு பூங்கா, அதனைப் பேணாமல் விட்டு வைத்தால் சோம்பல் அச்சம் அறியாமை தந்திரம் பேதமை முதலிய களைகள் பல மலிந்து வாழ்க்கையைப் பாழாக்கிவிடும்.
நீங்கள் குடிப்பது தண்ணீர் போன்ற கூழாயினும் அது உங்கள் உழைப்பிலிருந்து கிடைத்தால் அதுவே அமிர்தமாகும்.
யாரெல்லாம் உங்களை விட வயதிலும் அறிவிலும் ஒமுக்கத்திலும் சிறந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களோடு பழகுங்கள். அறிவு உங்கள் மனநிலைக்கேற்ப அமையும்.
ஆனால் உங்கள் தகுதி நீங்கள் சேரும் சேர்க்கையைப் பொறுத்தே அமையும்.
வாழ்க்கையில் பெரிதும் எதிர்பாராதவையே நடக்கின்றன. இப்படி இல்லா விட்டால் வாழ்க்கைக்குப் பயனோ பொருளோ இருக்காது.
யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள்.
எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்.
பேசத் தகுதியுள்ள ஒருவரைச் சந்தித்து அவரிடம் பேசாமல் விட்டு விடுவீர்களேயானால் நேரத்தை வீணாக்கி விட்டீர்கள். பேசத் தகுதியற்ற ஒருவரைச் சந்தித்து அவரிடம் பேசினால் அப்பொழுதும் நேரத்தை வீணாக்கிவிட்டீர்கள்.
பலரைச் சிலகாலமும் சிலரைப் பலகாலமும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எக்காலமும் ஏமாற்ற முடியாது.
நீ சொல்லப் போகும் வார்த்தை மௌனத்தை விட சிறந்ததென்று திடமாக தெரியும்வரை வாயைத் திறவாதே.
தன்னைப் பற்றி அதிகமாகப் பேசுபவன் அந்த அளவுக்குப் பிறரைப் பற்றி பேசுவதைக் கேட்க விரும்புவதில்லை.
கவலை என்பது பயம் என்ற மையப் புள்ளியைச் சுற்றிச் சுழன்று வரும் பயனற்ற எண்ணங்களால் உருவான வட்டமே.
பத்து அறிவாளிகள் பேசிக் கொண்டிருக்கும் போது நீ மௌனமாக இரு. நிச்சயமாக நீதான் பதினோராவது அறிவாளி.
கல்வியின் நோக்கம் ஒவ்வொரு மனிதனையும் தன்னம்பிக்கை உடைய உத்தமனாக்குவதே.
குறிக்கோள் ஏதும் இல்லாதவன் அரை மனிதன்.
அதிகம் பேசுபவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல. அறவே பேசாதிருப்பவர்கள் முட்டாள்களுமல்ல. அளவோடு பேசு, அதிகம் மௌனம் சாதிக்காதே.
அதிகமான செலவும் கூடாது. முட்டாள் தனமான சிக்கனமும் கூடாது.
சிறுவர்களின் மனம் ஈரமான சீமெந்து பூசப்பட்ட உடன் தளம் போன்றது. அதில் பதியப்படும் எண்ணங்கள் அழியாது பதிந்து விடும்.
உண்மைக்கு பயப்படுபவன் ஒருவருக்கும் பயப்படமாட்டான்.
ஒரு நல்ல புத்தகம் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்து ஆகும்.
தன்னடக்கமுள்ளவனை வெளியில் எந்த சக்தியாலும் அசைக்க முடியாது.
சுயமான சிந்தனையும் சுதந்திரமான செயற்பாடும் பண்பும் பெற்ற ஒருவனைத்தான் புகழ் தானாக வந்து சரணடையும். கல்வியில்லாமலே சமாளித்துக் கொள்ள உதவுவது அறிவு. அறிவு இல்லாமலே சமாளித்துக் கொள்ள உதவுவது கல்வி.
நாம் அதிகமாக படித்திருந்தாலும் படிப்பு குறைவானவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்க வேண்டும். ஏனெனில் நமக்கு தெரியாத சில நுணுக்கமான ஆலோசனைகளை அவர்கள் அழகாக தருவார்கள்.
நம்முடைய எண்ணங்களையும் நோக்கங்களையும் கொள்கைகளையும் மறந்து அவற்றை எய்துவதற்குரிய வழியை விட்டு விலகிச் செல்லும் பொழுது தோல்வி நம்மை வந்தடைகின்றது.
நல்ல வீட்டிற்குச் சமமான பாடசாலை இல்லை. நல்ல பெற்றோருக்குச் சமமான ஆசிரியர்களும் இல்லை.
நமக்கு எது தெரியாதோ அதைச் சொல்லித்தருவது மட்டும் கல்வி ஆகாது. நாம் எப்படி நடந்து கொள்ளக் கூடாதோ அப்படி நடந்து கொள்ளாமல் இருக்க நமக்குச் சொல்லித் தருவதே கல்வி ஆகும்.
வலியிலும், வேதனையிலும் வருவதுதான் வீரம்.
வாழ்க்கையில் எல்லாம் நல்ல விதமாக அமைந்து விட்டால்,
நீ ஒரு பெரிய கோழையாகத்தன் இருப்பாய்!
மனிதன் கல்லை விட கடினமானவன்.
அதே சமயம், ரோஜா மலரை விட மென்மையானவன்!
பேசும் முன் கேளுங்கள்.
எழுதும் முன் யோசியுங்கள்.
செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
முதலீடு செய்யும் முன் விசாரியுங்கள்.
குற்றம் செய்யும் முன் நிதானியுங்கள்.
ஓய்வு பெறும் முன் சேமியுங்கள்.
இறப்பதற்கு முன் தர்மம் செய்யங்கள்.
'நான்' என்று நினைக்காதீர்கள்.
நினைத்தால் ஆண்டவன் 'தான்' என்பதைக் காட்டி விடுவான்
வருவதும், போவதும் – இன்பம், துன்பம்.
வந்தால் போகது – புகழ், பழி.
போனால் வராது – மானம், உயிர.
தானாக வருவது – இளமை, மூப்பு.
நம்முடன் வருவது – பாவம், புண்ணியம்
பொறுமையிலும் உயர்ந்த தவம் இல்லை.
திருப்தியிலும் உயர்ந்த இன்பம் இல்லை.
கருணையிலும் பெரிய அறம் இல்லை.
மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை!
பிறர் துன்பத்தைக் கண்டு வருந்துவது மனித குணம்;
பிறர் துன்பத்தைக் கண்டு நீக்குவது தெய்வ குணம்
ஒன்றும் செய்யாமலல் இருப்பவன் மட்டும் சோம்பேறி அல்ல.
இப்போது செய்து கொண்டிருப்பதை விட சிறப்பாக செய்யும் திறமை இருந்தும்,
அப்படி செய்யாமல் இருப்பவன் கூட சோம்பேறிதான்.
நாமே பெற்றோர்களாக மாறும் வரையில் பெற்றோர்களின்
பாசத்தைப் பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியாது
தவறு செய்தால், நீ ஒரு மனிதன்.
அதை எண்ணி வருந்தினால், நீ ஒரு புனிதன்.
அதை எண்ணி பெருமைப்பட்டால், நீ ஒரு பேய்
துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல.
அவை எப்போதும் பாலத்தின் அடியில் ஓடுகின்ற
தண்ணீரைப் போல் ஓடி விடும்.
சந்தேகத்தையும், பயத்தையும் வென்றவன் –
தோல்வியை வென்றவன்.
உலகம், வெற்றி பெற்றவர்களையே விரும்புகிறது;
விளக்கம் சொல்பவர்களை அல்ல!
கண்களை இழந்தவன் குருடன் அல்லன்.
எவன் தன்னிடமுள்ள குறைகளை மறைக்கிறானோ,
அவனே குருடன்!
தியாகம் செய்யவும், மன்னிக்கவும்.
நன்றி கூறவும் தெரிந்து கொண்டு விட்டால் –
மகிழ்ச்சியையோ, அமைதியையோ தேடி ஓட
வேண்டியதில்லை. அவையே நம்மைத் தேடி வரும்!