வலியிலும், வேதனையிலும் வருவதுதான் வீரம். 
வாழ்க்கையில் எல்லாம் நல்ல விதமாக அமைந்து விட்டால்,
நீ ஒரு பெரிய கோழையாகத்தன் இருப்பாய்!

மனிதன் கல்லை விட கடினமானவன். 
அதே சமயம், ரோஜா மலரை விட மென்மையானவன்!

பேசும் முன் கேளுங்கள்.
எழுதும் முன் யோசியுங்கள்.
செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
முதலீடு செய்யும் முன் விசாரியுங்கள்.
குற்றம் செய்யும் முன் நிதானியுங்கள்.
ஓய்வு பெறும் முன் சேமியுங்கள்.
இறப்பதற்கு முன் தர்மம் செய்யங்கள்.

'நான்' என்று நினைக்காதீர்கள். 
நினைத்தால் ஆண்டவன் 'தான்' என்பதைக் காட்டி விடுவான்

வருவதும், போவதும் – இன்பம், துன்பம்.
வந்தால் போகது – புகழ், பழி.
போனால் வராது – மானம், உயிர.
தானாக வருவது – இளமை, மூப்பு.
நம்முடன் வருவது – பாவம், புண்ணியம்

பொறுமையிலும் உயர்ந்த தவம் இல்லை.
திருப்தியிலும் உயர்ந்த இன்பம் இல்லை.
கருணையிலும் பெரிய அறம் இல்லை.
மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை!

பிறர் துன்பத்தைக் கண்டு வருந்துவது மனித குணம்;
பிறர் துன்பத்தைக் கண்டு நீக்குவது தெய்வ குணம்

ஒன்றும் செய்யாமலல் இருப்பவன் மட்டும் சோம்பேறி அல்ல.
இப்போது செய்து கொண்டிருப்பதை விட சிறப்பாக செய்யும் திறமை இருந்தும், 
அப்படி செய்யாமல் இருப்பவன் கூட சோம்பேறிதான்.

நாமே பெற்றோர்களாக மாறும் வரையில் பெற்றோர்களின் 
பாசத்தைப் பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியாது

தவறு செய்தால், நீ ஒரு மனிதன்.
அதை எண்ணி வருந்தினால், நீ ஒரு புனிதன்.
அதை எண்ணி பெருமைப்பட்டால், நீ ஒரு பேய்

துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல.
அவை எப்போதும் பாலத்தின் அடியில் ஓடுகின்ற
தண்ணீரைப் போல் ஓடி விடும்.

சந்தேகத்தையும், பயத்தையும் வென்றவன் –
தோல்வியை வென்றவன்.

உலகம், வெற்றி பெற்றவர்களையே விரும்புகிறது;
விளக்கம் சொல்பவர்களை அல்ல!

கண்களை இழந்தவன் குருடன் அல்லன்.
எவன் தன்னிடமுள்ள குறைகளை மறைக்கிறானோ,
அவனே குருடன்! 

தியாகம் செய்யவும், மன்னிக்கவும்.
நன்றி கூறவும் தெரிந்து கொண்டு விட்டால் – 
மகிழ்ச்சியையோ, அமைதியையோ தேடி ஓட
வேண்டியதில்லை. அவையே நம்மைத் தேடி வரும்!