tamil schoolஒன்ராறியோதமிழ் ஆசிரியர் சங்கம் தமிழ் மாணவர்களுக்கான தமிழ்  மொழி;த்திறன் போட்டிகளை இம்மாதம் மூன்றுநாட்கள் மிஸிசாகாகவிலும் (14.03.2015) ஸ்காபரோவிலும்(21, 22. மார்ச். 2015) நடத்தியது. இப்போட்டிகளில்; பாலர் வகுப்புமுதல் தரம் எட்டு வரையிலான 2500 க்கும் மேற்பட்டமாணவர்கள் பங்குபற்றினர். எழுத்தறிவுத் திறன்,வாசிப்புத் திறன், சொல்வது எழுதுதல் என்ற மூன்று வகையான தேர்வுகள் நடத்தப்பட்டன. 

பெற்றோர்கள் தம் பிள்ளைகளை மிக்க ஆர்வத்துடன் அழைத்து வந்தனர். ஆசிரியர்கள் மிகவும் சிரமத்துடன் ஆனால் மிகத் திறமையாகவும் வெற்றிகரமாகவும் இப்போட்டியை நடத்தியதைஅவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அப்போட்டிகளை முன்னின்று நடத்திய பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களைப் பேட்டிகண்டபோது. இத்தேர்வுகளின் முக்கியநோக்கம் மாணவர்களுக்குத் தமிழில் ஆர்வம் ஏற்படுத்துவதற்காகவும் அவர்களின் திறன்களைப் பெற்றோர் அறிந்து கொள்வதற்காவுமே இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன எனவும், இத் தேர்வுகளுக்குத் தம் பிள்ளைகளைத் தயார்ப்படுத்தி அழைத்து வந்து மிக்க ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நன்றி கூறுகிறேன் எனவும் குறிப்பிட்டார். 

அதுமட்டுமல்லாது இப்போட்டிகளுக்கு நடுவர்களாக கடமை ஆற்றிய தமிழ் அறிஞர்களுக்கும் சிறப்பாக நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.

 

tamil school-2 tamil school-3tamil school-4tamil school-5

tamil school-6

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: March 25, 2015