JHC 125-2சென்ற சனிக்கிழமை (02-05-2015) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த இராப்போசன ஒன்று கூடல் விழா (Annual Dinner Gala-2015)  ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் பாரம்பரியத்திற்கு ஏற்ப ஆரம்பமான இவ்விழாவில் கனடா தேசியகீதத்தை பவிதா நந்தகுமார் மற்றும் தர்ஷிகா நந்தகுமார் சகோதரிகளும், கல்லூரிக் கீதத்தை வைத்திய கலாநிதி மைதிலி தயாநிதியும் இசைத்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து சங்கத்தின் பொருளாளர் தர்மலிங்கம் சிறீதரன் அவர்கள் வரவேற்புரையை வழங்கினார். 

"                "இவ்விழாவில் சங்கத் தலைவர் கதிர் சுப்பிரமணியம் அவர்கள் தலைமை உரையாற்றினார்.  அவர் தம் உரையில், "யாழ். இந்துக்கல்லூரி தமிழர் தலைநிமிர் கழகமாகவும், கலைபயில் கழகமாகவும் தாயகத்தில் தொடர்ந்து திகழ்வதற்குப் பழைய மாணவர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது" எனக் குறிப்பிட்டார்.  இந்துக்கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்-கனடா, கல்லூரிக்கு வழங்கிய உதவிகள் பற்றியும் விரிவாகக் கூறினார். அத்துடன் வரும் ஜுலை மாதம் 1ம் திகதி வசந்தகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும், பின்னர் ஒக்டோபர் 10ம் 11ம் ஆகிய இருநாட்கள் முழுமையான தமிழ் கலை, கலாச்சார நிகழ்வுகள் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவையொட்டி விசேடமாக நடைபெறவுள்ளதாகவும் அந்நிகழ்விற்கு இலங்கையிலிருந்து கம்பவாரதி ஜெயராஜ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் எல்லோரும் அந்நிகழ்வுக்கு வந்து சிறப்பிக்குமாறும் வேண்டிக் கொண்டார். கனடா பழைய மாணவர் சங்கம் ஒன்றுதான் ஒவ்வொரு வருடமும் கல்லூரியின் நினைவாக மூன்று நிகழ்வுகளை நடாத்துவதாக குறிப்பிட்டார். 

"                "மேலும் இந்நிகழ்வில் Saturday Night Live   இசைக்குழுவினர் ஆங்கிலம் மற்றும் இந்திப் பாடல்களையும்,  Super Singer Juniors  புகழ் மகிஷா பகீரதன் மற்றும் வைஷாலி கிருஷ்ணானந்தன் ஆகியோர் தமிழ் திரைப்படப் பாடலையும் பாடினார்கள். சபையோர் இவ் இசைமழையில் நனைந்து பரவசம் அடைந்தனர். அத்துடன் இடையிடையே Ryerson Royalty  நடனக் குழுவினர்களின் நடனங்களும் கண்ணுக்கு விருந்தாக அமைந்திருந்தது. 

"                "அதனைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவில் NASA Langley Research Center இல் Research Scientist ஆக பணிபுரிந்து வரும் Dr.பொன்னம்பலம் பாலகுமார் அவர்கள் இவ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். இவர் முன்னாள் யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியர் பொன்னம்பலம் அவர்களின் மகனாவார். அவர் தமது உரையில் யாழ் இந்துக்கல்லூரியில் தான் கல்வி பயின்றிராவிட்டால் இத்தகைய ஓர் உயர்ந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்றும் கூறி யாழ். இந்து அன்னையை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். மேலும் யாழ் இந்துக்கல்லூரியின் சிறப்புகளைச் சபையோர் மனம்கொள்ளும் வண்ணம் கூறினார். 

JHC 125 Stampதொடர்ந்து நிகழ்வின் முத்தாய்ப்பாய் எமது கல்லூரியின் 125 வருட கால சிறப்புகளைத் தொகுத்து ஒளிப்படம் காண்பிக்கப்பட்டதோடு எமது கல்லூரியின் படத்தைக் கொண்ட இரு அஞ்சல் முத்திரைகளும் வெளியிடப்பட்டன. 

விழாவின் அடுத்த அம்சமாக விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 2015ம் ஆண்டிற்கான Academic Excellence  விருதினை Dr.காசிவிஸ்வநாதன் செல்வகுமாரும், Entrepreneurship விருதினை யோகேஸ்வரன் தியாகராஜாவும் பெற்றுக் கொண்டனர். ஓவ்வொரு வருடமும் இவ்விரு விருதுகள் இந்துவின் மைந்தர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவனும் கனடா வானொலி, தொலைக்காட்சி ஒலிபரப்பாளரான பிரணவனும், யாழ் இந்துக மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் பாடசாலை நாட்களில் கூடைப்பந்து விளையாட்டில் வீராங்கனையாகத் திகழ்ந்த வாசுகி ஆகியோர் சிறப்பாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள். 

JHC Annual Gala Dinner 2015-8இவ் விழாவை சிறப்பாக நடாத்த உதவிய அனைவருக்கும், பார்வையாளருக்கும் நிர்வாக குழு சார்பில் கிருஷ்ணானந்தன் ரட்ணசிங்கம் அவர்கள் நன்றி கூறினார். யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பின்னர் சுவையான இராப்போசன விருந்துபசாரத்துடன் விழா சுமுகமாக, இனிதே நிறைவேறியது.

 

-மோகன் குமாரசாமி
  பழைய மாணவன்- யாழ் இந்துக்கல்லூரி

JHC Annual Gala Dinner 2015-3JHC Annual Gala Dinner 2015-1JHC Annual Gala Dinner 2015-2JHC Annual Gala Dinner 2015-4JHC Annual Gala Dinner 2015-7JHC Annual Gala Dinner 2015-5aJHC Annual Gala Dinner 2015-9JHC Annual Gala Dinner 2015-12JHC Annual Gala Dinner 2015-13JHC Annual Gala Dinner 2015-10JHC Annual Gala Dinner 2015-11