uthayan-1000_6aகனடா நாட்டிலிருந்து வெளிவரும் ‘கனடா உதயன் – தமிழ் வார இதழின் ஆயிரமாவது இதழ் வெளியீட்டு நிகழ்ச்சி டொரண்டோ நகரத்தில் உள்ள Sir John A. Macdonald Collegiate Institute கலையரங்கில் 06.06.2015 ஆம் திகதியில் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடை பெற்றது.

‘கனடா உதயன்’ – இதழின் பிரதம ஆசிரியர் திரு ஆர் என் லோகேந்திரலிங்கம் விழா பற்றிய அறிமுகவுரையாற்றினார். இவ்விழாவில் ஆயிரமாவது இதழ் வெளியிடப்பட்டதோடு மாணவர்கள் பங்கேற்ற பல்சுவை கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களான Corneliu Chisu, Tim Uppal, John McKay, Judu Sgro, Rathika Sitsabaiesan ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தியதோடு விழாவின் சிறப்பு விருந்தினரான திரு த ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு விழா மேடையில் கனடா அரசின் சார்பில் சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கினர். டொராண்டோவை தலை நகரமகாகக் கொண்ட ஒண்டாரியோ மாநில முதலமைச்சர் (premier) சார்பிலும் பாராட்டுமடல் வழங்கப்பட்டது.

மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு த ஸ்டாலின் குணசேகரன் விழாச் சிறப்புரையாற்றினார். இவர் தனது உரையில் தமிழ் இதழியல் வரலாற்றுச் சுருக்கத்தை எடுத்துக் கூறியதோடு இன்றைய இதழியல் துறையின் கடமைகள் குறித்தும் அத்துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விளக்கிக் கூறினார். அத்தோடு இன்று உலகளாவிய தமிழர்களுக்கான பிரச்சினைகள் குறித்தும் குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை பற்றியும் எடுத்துரைத்தார். தமிழ் மொழியின் தனித்தன்மையையும் சிறப்புகளையும் பல்வேறு உதாரணங்கள் மூலம் விளக்கினார்.

விழாவை டாக்டர் கதிர் துரைசிங்கம் ஒருங்கிணைத்தார். திரு ரமணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

 

 

 

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: July 29, 2015