அணுவாய் அலைந்த என்னுடலை- அடக்கி
அண்டம் விழுங்கச்
சுமந்தவளே!
கனவில் என்னை நினைத்துக்கொண்டு-தினம்
கருவில் என்னை
வளர்த்தவளே!
அலுங்கிக் குழுங்கி நடக்காமல்-என்
அங்கம் வளரப்
பொறுத்தவளே!
பாரம் என்று வருந்தாமல்-என்னைப்
பத்திரமாய்க் கருவில்
நிறைத்தவளே!
ஈரைந்து மாதங்களாய் எனைச்சுமந்து-உயிர்
உருவாக்கத் தவம்
செய்தவளே!
ஊனுடன் உயிர் தந்து-என்னை
உலகம் காணப்
பெற்றவளே!
ஊனை உருக்கிப் பாலூட்டி-என்
உடலை வளர்க்கத்
துடித்தவளே!
வார்த்தையும் உண்டோ எம்மொழிதனிலும்-உன்
தாய்மையை வருணிக்கப்
போதவில்லை!
என்ன செய்வதோ கைமாறாய்-உலகில்
உன் தாய்மையினும் பெரிது
ஏதுமில்லை!
மீன்டும் ஜென்மம் வேண்டுமம்மா-உன்னை
வயிற்றில் சுமக்க
வேண்டுமம்மா!