Vikatan Srinivasan1aகனடிய இளந்தலைமுறையின் பிரபல புனைகதை எழுத்தாளராக விளங்கும் திரு. குரு அரவிந்தன் அவர்களது 25 வருடகால கனடிய இலக்கியச் சேவையைப் பாராட்டி ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி ரொறன்ரோவில் நடைபெற்ற பாராட்டுவிழாவன்று வெளியிடப்பட்ட ‘கனடாத் தமிழர் இலக்கியம் – பங்களிப்பு குரு அரவிந்தன்’ என்ற ஆவணநூலில் இடம் பெற்ற கட்டுரையில் இருந்து ஒருபகுதியைத் தருகின்றோம்.  
–  ஆசிரியர் –  

Kuru-Nov12-2015vikatan-4விகடன் எழுத்தாளர் என்று அடைமொழிவைத்து எல்லோரும் குரு அரவிந்தனைக் குறிப்பிட்டபோது எனக்குள் ஒருகேள்வி எழுந்தது, இவர் அப்படி என்ன பெரிதாக எழுதிவிட்டார் என்பதே! எனது இலக்கியப் பாராட்டுவிழாவில் நண்பர் மதிவாசன் வெளியிட்ட என்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை குரு அரவிந்தன் அழகாகத் தொகுத்து வெளியிட்டபோது தான் அவரது ஆற்றலை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. எடுத்தவிடயத்தை சிறப்பாகச் செய்து முடிக்கும் திறமை அவரிடம் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆர்வமிகுதியால் அவரிடம் கேட்டு வாங்கிய,அவரது விகடன் கதைகள் சிலவற்றை வாசித்துப் பார்த்தபோதுதான் அந்த அடைமொழிக்கு அவர் எவ்வளவு தகுதியானவர் என்ற உண்மை எனக்குப் புரிந்தது. ஆனந்தவிகடனில் வெளிவந்த குரு அரவிந்தனின் சிலகதைகளில் ,என் மனதைத் தொட்ட சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

Kuru-Nov12-2015vikatan-3விகடனில் வெளிவரும் அவரது கதைகளை மட்டுமே தனியாக ஒரு நூலாக வெளியிடக்கூடிய அளவிற்கு அவரிடம் விகடன் கதைகள் நிறையவே இருக்கின்றன. இவையெல்லாம் சாதாரணகதைகள் அல்ல, எல்லாமே ஏதோ ஒருவிதத்தில் தனித்துவமானவை மட்டுமல்ல, கதையின் தரம் அறிந்துதான் விகடன் அவற்றைப் பிரசுரித்திருக்கிறது என்பதை அவரது கதைகளை வாசித்தபோது புரிந்துகொண்டேன். அவற்றில் எனக்குப் பிடித்தமான சிலசிறுகதைகளை மட்டுமே இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

Vikatan Kannanவிகடனில் வெளிவந்த குரு அரவிந்தனின் முதற் கதையே ஒருசிறப்பான, சமுதாயப் பார்வை கொண்டதாக அமைந்திருந்தது. அதன் தலைப்பே ‘காதல் என்பது..’அருமையான கதை என்று பலராலும் பாராட்டப்பட்டிருந்தது. வேற்றுமதத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்வதால் அவர்கள் எதிர் நோக்கும் சவால்களை வெகு இலகுவானமொழியில் கதையாகத் தந்திருக்கின்றார். பிரபல ஓவியர் ராமு அவர்கள் இந்தக் கதைக்கு ஓவியம் வரைந்திருக்கின்றார். திருமணமான புதிதில் எனக்கும் அந்தஅனுபவம் இருந்ததால், என்னுடைய வாழ்க்கையில் நடந்த சிலசம்பவங்களை, நான் எதிர்கொண்ட சிலபிரச்சனைகளை அப்படியே நினைவுபடுத்துவது போல இந்தக் கதை அமைந்திருந்தது. வேற்றுமதத்தில் திருமணம் செய்தபலரைக் குரு அரவிந்தன் சந்தித்திருக்கலாம். அவர்களது அனுபவங்களையே யாருடைய மனமும் நோகாமல் இவர் கதையாக்கியிருக்கின்றார். இன்றும் கண்ணுக்குள் நிழலாடுவதுபோல என் வாழ்வில் நடந்த சிலசம்பவங்களை இந்தக் கதை அப்படியே எடுத்துச் சொல்கின்றது.
Kuru20151105_Vikatan-1விகடன் மிலேனியம் இதழில் வெளிவந்த இன்னுமொருகதை இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த இதழில் பல்வேறுநாடுகளில் இருந்தும் பல எழுத்தாளர்கள் எழுதியிருந்தார்கள். கனடாவில் இருந்து குரு அரவிந்தனுக்கு அந்த வாய்ப்பை விகடன் ஆசிரியர் பீடம் கொடுத்திருந்தார்கள். வடஅமெரிக்காவில் இருந்து குரு அரவிந்தனும், அதே இதழில் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து எழுத்தாளர் ஸ்ரீமதி. கீதாபெனட் அவர்களும் எழுதியிருக்கிறார்கள். இசைக் கலைஞரான அவர் இசைநிகழ்ச்சி ஒன்று நடத்துவதற்காகக் கனடாவிற்கு வந்திருந்தபோது குரு அரவிந்தனை நேரடியாகச் சந்தித்துப் பாராட்டி, வாழ்த்தியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Kuru20151105_Vikatan-2விகடனில் வெளிவந்த ‘ரோசக்காரி’ என்ற இன்னுமொரு கதையில் அதற்கான ஓவியமே வித்தியாசமாக இருந்தது. அந்த ஓவியத்தை வரைந்தது வேறுயாருமல்ல, பிரபலஓவியர் மாருதி அவர்களேதான். அந்தக் கதையில் வரும் பெண் பாத்திரமான சுபத்ராவுடன் பூங்காவில் அருகருகே அமர்ந்து அந்தப் பாத்திரத்துடன் தானே கதைத்துக் கொண்டிருப்பது போன்றதொரு ஓவியத்தை அவர் தானே வரைந்திருந்தார். உயர் கல்விகற்றுவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் அடைந்துகிடக்கும் ஒருபெண் பாத்திரத்தைப் பற்றியகதையிது. 

Vikatan Athipar1‘இதுதான் பாசம் என்பதா..’ஒருதந்தைக்கும் மகளுக்குமான வாழ்க்கைப் போராட்டம் பற்றியகதை. பிரபல ஓவியர் ஜெயராஜ் அவர்கள் இக்கதைக்கு அருமையான ஓவியம் வரைந்திருந்தார். உண்மையாகவே ஒருதகப்பனிடம் இருந்தும் மகளிடம் இருந்தும் அவர்களின் கருத்தை அறிந்து அதை அக்கதையுடன் அவர்களின் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.
காதலர் தினத்திற்காக விகடனில் வெளிவந்த ‘அவளுக்குஒருகடிதம்..’ அழகான ஒருகாதற் கவிதை என்றே சொல்லலாம். அதிபரின் மகளைத்தான் காதலிக்கிறான் என்று தெரியாமல் அதிபரிடமே காதலைச் சொல்லி மாட்டிக் கொண்டு தவிக்கும் காதலனின் செயலை நினைத்து மனம் விட்டுச் சிரிக்கமுடிகின்றது. தமிழ் நாட்டில் அதிக கல்லூரி, பல்கலைக்கழக மாணவ மாணவிகள் வாசித்து ரசித்த கதையாக இது அமைந்திருந்தது. இக் கதையின் மீது கொண்ட மோகத்தால் பிபிசி அறிவிப்பாளர் திரு. விமல் சொக்கநாதன் அவர்கள் லண்டனில் இருந்து கனடா வந்தபோது, கீதவாணி வானொலிக்காக அருமையான இசையும் கதையுமாக்கி இக்கதைக்கு ஒலிவடிவம் கொடுத்திருந்தார். அவளுக்கு ஒருகடிதம் என்ற இவரது இந்தக் காதலர்தினக் கதை விகடனில் வெளிவந்தபோது தமிழர்கள் அதிகம் வாழும் வௌ;வேறு ஐந்து நாடுகளில் உள்ள பத்திரிகைகளில் இவரது வௌ;வேறு காதலர் தினக்கதைகள் ஒரேசமயத்தில் இந்தியா, இலங்கை, கனடா, ஜேர்மனி, லண்டன் ஆகிய இடங்களில் வெளிவந்து எழுத்துலகில் ஒரு புதியசாதனை படைத்திருந்து.

Kuru-Nov12-2015vikatan-5விகடன் தீபாவளி மலருக்காக உண்மைச் சம்பவம் ஒன்றை எழுதமுடியுமா என்று இவரிடம் ஆசிரியர் பீடம் கேட்டபோது, 1983 ஆம் ஆண்டு தனக்கு நடந்த, அந்த இனக் கலவரத்தில் தான் எப்படிப் பாதிக்கப்பட்டார் என்பதைச் சுவாரஸ்யமாக சிறிது கற்பனை கலந்த நடையில் எழுதியிருந்தார். ‘நங்கூரி’என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த உண்மைக் கதைக்கு ஓவியர் மனோகர் சிறப்பாக வர்ணஓவியம் வரைந்திருந்தார். தரைவழியால் செல்வது பாதுகாப்பில்லை என்பதால், நங்கூரி என்ற கப்பல்தான் சொந்த மண்ணிலே அகதியாக்கப்பட்டவர்களைக் கடைசியாகக் கொழும்புத் துறைமுகத்திலே இருந்து ஏற்றி, கடல் வழியாகக் காங்கேசந்துறைக்குக் கொண்டு சென்ற இந்தியக் கப்பலாகும். இந்தக் கதையை வாசித்தபோது, நாங்கள் அப்போது பட்ட அவலங்களும் கஷ்டங்களும் எனது நினைவுகளில் வந்து மீண்டும் தாய் மண்ணைத் தொட்டுத் திரும்பியது. கனிமொழி, கவிப்பேரரசுவைரமுத்து, பிரபஞ்சன், தமிழச்சி தங்கபாண்டியன் கவிஞர் தாமரை, மனுஷ்யபுத்திரன், சுஜாதா, மிஷ்கின், கே.வி. ஆனந், சாருகேசி போன்ற பல வி.ஐ.பி. களின் ஆக்கங்களுடன் அவர்களுக்கு இணையாக இவரது ஆக்கமும் தீபாவளிமலரில் இடம் பெற்றது கனடிய எழுத்தாளரான இவருக்கும் பெருமை சேர்ப்பதாக இருந்தது.

Kuru-5-Nov12-2015-7‘நீர்மூழ்கிநீரில் மூழ்கி..’ இது நூலாக வெளிவந்த குரு அரவிந்தனின் குறுநாவல். முதலில் ஆனந்தவிகடன் பவளவிழா ஆண்டிதழில் வெளிவந்து பலரின் பாராட்டையும் பெற்றிருந்தது. இவர் உயர்கல்வி கற்ற மகாஜனாக் கல்லூரியின் 100 ஆண்டு விழாவின்போது இந்த நாவலைத்தான் தான் கல்விகற்ற கல்லூரிக்காக இவர் சமர்ப்பணம் செய்திருந்தார். தமிழகத்து பிரபல ஓவியர்கள் பலர் இந்தக் குறுநாவலுக்குச் சித்திரம் வரைந்திருப்தே குரு அரவிந்தனுக்குக் கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளவேண்டும். சர்வதேச ரீதியாகப் பத்துலட்சம் வாசகர்களுக்கு மேல் சென்றடைந்த கதையிதுவாகும். தமிழகத்தில் பரந்த தொருவாசகர் வட்டத்தை விகடன் மூலம் தன்வசப் படுத்தியிருந்ததே இந்த கனடிய தமிழருக்குக் கிடைத்த பெருவெற்றியாகும். ஈழத்தமிழர் ஒருவரின் இந்த நூல் தமிழகத்தில் மட்டும் 1500 மேற்பட்ட நூல் நிலையங்களில் வாசிப்புக்காக வைக்கப் பட்டிருப்பதாகத் தெரியவந்திருப்பது கனடியரான எமக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கின்றது.

Kuru-5-Nov12-2015-6இன்று இவர் விகடன் இதழில் மட்டுமல்ல, தமிழகத்தில் இருந்து வெளிவரும் பிரபலதமிழ் பத்திரிகைகளில், இதழ்களில் எல்லாம் இவரது பண்பட்ட எழுத்து மூலம் சாதனை படைத்துக் கொண்டுதான் இருக்கின்றார். பன்முக ஆளுமைகொண்ட இவரது சிரித்த முகமே எல்லோரையும் அவர்பால் கவர்ந்திழுப்பதில் ஆச்சரியமில்லை. சிற்றிலக்கியப் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த ஈழத்து எழுத்தாளர்களின் பார்வையைத் தமிழகத்து வர்த்தகப் balaபத்திரிகைளின் பக்கம் திருப்பிய முன்னோடி எழுத்தாளர் குரு அரவிந்தன் தான் என்பதை எங்கேயும் எப்போதும் துணிந்து சொல்வதில் எனக்கு எவ்விததயக்கமும் இல்லை. தமிழ் இலக்கிய உலகில் இது போன்ற சாதனைகள் பல படைக்கவேண்டும் என்று அவரை மனதாரவாழ்த்துகின்றேன்.

K.S. பாலச்சந்திரன்

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 12, 2015