ctbf-1aஉலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2016 ஆம் ஆண்டுக்கான சுற்றுப் போட்டி March மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஒவ்வவொரு நாட்டில் ஒழுங்கு செய்யப்படும் இந்தப் போட்டி இந்த வருடம் ஜேர்மனிய நகரமான Willich இல் இடம் பெற உள்ளது.

UK, Germany, Holland, Canada, Sweden, France, Denmark, USA, Norway, Switzerland, Australia மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர். கனடாவில் இருந்து 30 போட்டியாளர்கள் வரை கலந்துகொள்ள உள்ளனர். 

இவர்களுடன்  கரம்பொனைச் சேர்ந்த விஜயநாதன் வசந்தரூபி தம்பதிகளின் மகன் செல்வன் மயூரன்   விஜயநாதனும் போட்டியில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார். கனடா நாட்டின் சார்பில் இவர்கள் அனைவரும் வெற்றிவாகை சூடி வர கரம்பொன் நெட் இணையத்தளமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

ctbf-1

http://www.wtbf.net/en/wtbf-germany-2016-2/germany-2016-photos/