Toronto Tamil Artists Night-2016-1aகடந்த வெள்ளிக்கிழமை மார்க்கம் நகரில் நடைபெற்ற "இசை எம்பயர்" நிறுவனத்தின் TORONTO TAMIL ARTISTS NIGHT-2016  இசைத் திருவிழா நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்றது. இந்த மேடையில் பல நடனங்களும் இடம்பெற்றன. முக்கியமாக தமிழகத்தின் பிரபல பாடகரும் விஜேய் தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் நடுவர்களில் ஒருவரான திரு. ஸ்ரீநிவாஸ் அவர்கள் அங்கு கலந்து கொண்டது அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சி தரும் விடயமாக இருந்தது.

அவரும் சில பாடல்களை எமது கனடிய இளம் பாடக பாடகிகளோடு பாடியபோது அனைவரும் கரகோஷம் செய்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இரவு 12.00 மணிவரை நீடித்த இந்த இசைத் திருவழா  பார்வையாளர்களை மகிழ்வித்த ஒரு நிகழ்வாகவே அமைந்தது. ஏற்பாட்டாளர்கள் அனைவரும் முகமலர்சியுடன் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

Toronto Tamil Artists Night-2016-1

Toronto Tamil Artists Night-2016-3Toronto Tamil Artists Night-2016-2

Toronto Tamil Artists Night-2016-4

 

நன்றி: அனலை எக்ஸ்பிறஸ்

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: October 1, 2016