Ammaa5aஇந்த உலகில் பெற்ற தாய்க்கு இணையாக வேறு யாரும் இல்லை. இதனால்தான் பலர் ஈன்ற தாயை தெய்வமாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். தான் பெற்ற குழந்தைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் அந்த தாய்க்கு இணையாக வேறு யாரை குறிப்பிட முடியும்? இந்த தியாகத்தை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Ammaa2aஅன்றைய தினம் அன்னையரை சந்தித்து பரிசு  பொருட்கள் வழங்கி அவர்ளை மகிழ்வித்து அவர்களிடம் வாழ்த்துகளும் பெறுகின்றனர். ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ என்ற வரிகள் தாய்மையின்  புனிதத்தையும் பெருமையையும், தியாகத்தையும் அடையாளப்படுத்தும் மிக உன்னத வரிகள். 

தாய்மைக்கு இணையாக இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட நிலையில், ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தோழியாக, தாரமாக,  தாயாக, பாட்டியாக என பல்வேறு நிலைகளில் வாழ்க்கையில் வலம் Ammaa3வருகிறாள். இப்படி அனுபவங்களின் ஆசானாக எத்தனையோ பாத்திரங்களில்  தன்னை நிலைப்படுத்தி கொண்டு வலம் வந்தாலும் ‘அன்னை’ என்ற பாத்திரம் தான் மிக உன்னத இடத்தை வகிக்கிறது.  அத்தகைய தாயைப்  போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை மேற்கத்திய நாடுகளில் அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 

Ammaa1aதயவு செய்து பொறுமையாக படித்து பாருங்கள் 
அழுதுவிட்டேன் இது போன்ற கவிதைகளை பதிவு இடுவதில் பெருமைப்படுகின்றேன்!


எனதருமை மகனே !
எனதருமை மகனே !

 

நான்
உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..
முதுமையின் வாசலில் – நான்
முதலடி வைக்கையில்
தள்ளாட்டம்
என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்

கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க !
என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
நான்
சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே..
உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு
கூர்க !

ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே..
படுக்கை முழுதும்
நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை
இதயம் கொள்க !
ஒரே பேச்சை, தேய்ந்த
ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே.

ஒரே
மாயாவி கதையை
ஒரு நூறு முறை
எனை படிக்கச் சொல்லி
நீ
உறங்கிய
இரவுகளை ஞாபகம்
கொள்க !
நான் குளிக்க மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று
சுடுசொல் வீசாதே..

உன்னை
குளிக்க வைக்க
நான் செய்த யுக்திகளை
எனக்காக புதுப்பித்துத் தருக!
புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் – உன்
புயல் வேகப் புரிந்துகொளல்
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை !
கேவலப் படுத்தாதே..
கற்றுத் தருக ! கவனித்துப்
பழக அவகாசம் தருக !

இனி,
சில நேரங்களில் -
என்
நினைவுப் பிறழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்!
நிறைய வேலை இருக்கிறதென்று
நேரம் பார்க்காதே..

என் அருகிருந்து
ஆற்றாமை தேற்றுக!
ஆசுவாசப் படுத்துக!
என் கால்கள்
என்னை ஏமாற்றுகையில்
நீ
முதல் நடை பழக
என் விரல்
நீண்டது போல்
கைகொடுத்து
எனக்கு உதவி செய்க !
ஒரு நாள் சொல்வேன் நான்,
வாழ்ந்தது
போதுமென்று !
வருத்தப் படாதே..

சில
வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை..
சில
வயதுக்கு மேல்
வாழ்வதில் அர்த்தமில்லை..

காலம்
வரும்போது – இதை
நீயும்
புரிந்து கொள்வாய் !
இனி நான் வேண்டுவதெல்லாம்
நீ எனை
புரிந்து கொண்ட
புன்னகை !
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் !

எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்…
என் வாழ்வு
அமைதியோடும் – உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..?

( ஓர் தாய் முதுமையில்thai1
மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை)
இது ஏதோ ஒருவர் அனுப்பியது அல்ல நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நடக்கப்போவது..!!

நமது தாய், தந்தையை பேணி காப்பது நமது தலையாய கடமை, 
நமது உயிர் இருக்கும் வரை நாம் அவர்களை பேணிக்காப்போம். 
நமக்கும் ஒரு நாள் இந்த முதுமை வரும் அதற்குள் நமது பணியை சிறப்பாக செய்து நமது பெற்றோரையும் சிறப்பாக வாழ வைப்போம்.

 -மோகன் குமாரசாமி

 

அன்புமிக்க அன்னையர்க்கு! – நிருத்யா வர்மா

கரம்பன் பொன்னூரில் பொன்னாக விளைந்த
அன்னையர்கள் பலப் பல
ஆனாலும் இன்றோ பல அன்னையர்கள்
நம்மிடம் இல்லை
எனக்குத் தெரிந்த சிலருக்கு
சின்னஞ்சிறு சமர்ப்பணம்

கமலம்மா ரீச்சர் என்ற சாந்த சொரூபி
தன் குழந்தைகள் போல் பிறர் குழந்தைகட்கும்
பக்குவமாக பாடம் புகட்டிய
வெண்கமலத் தாய்!

எங்கள் கிருபா ரீச்சர் எதையும் வென்ற தாய்
ஆங்கிலம் படிப்பிக்கும் அதேவேளை
தமிழை செந்தமிழாக உச்சரிக்கும்
எடுத்துக் காட்டான அன்புத் தாய்!

ஆனந்த சொரூபி சதாரூபதி ரீச்சர்
அழகிய குழந்தைகட்கும் தாய்
அதேவேளை சண்முகநாத மகாவித்தியாலயத்தின்
சந்திர ஒளி!

சிங்க வாஹினி போல ஒரு தாய்
இராசம்மா என்ற வீரத்தாய்
காவலூர் குழந்தைகளை ஊருலகுக்குக் களித்த
என் நண்பி ஜெகதியின் தாய்

கமலாம்பிகையென்ற ஒரு அன்னை
விலை மதிக்கவொன்னா செல்வங்களை ஈன்று
நன்றாக வழிகாட்டிய செங்கமலத்தாய்!

மணியாக மணியின் ஒளியாக விளங்கிய 
அன்னை அருளமணி
மாணிக்கங்களை பெற்றெடுத்து
மாண்புடன் வளர்த்தெடுத்த லட்சியத்தாய்!

ஒயிலான சத்தியபாமா, அழகிய அன்னை பூபதி
கனிவான அன்னம்மா, புன்முறுவல் மாறாத தங்கம்மா
சொல்லிக்கொண்டே போகலாம்..

இறுதியாக எங்கள் அம்மா பெரியநாயகி
தாய்மையுள்ள தாய்மையின் உதாரணம்
செய்த தியாகங்களுக்கு
ஆயிரம் கோடி நன்றிகளம்மா!!
ஒரே ஒரு ஆசை இன்னோர் முறை 
உங்கள் மடி வேண்டும் தாயே!

pnayaki

 

"HAPPY MOTHERS DAY"
- நிருத்யா வர்மா

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: June 20, 2016