verum-vilzuthum1a "வேரும் விழுதும்"  

கனடிய மண்ணில் கடந்த 23 வருடங்களாக தமிழ் இலக்கியப் பணியில் முன்னோடிகளாகத் திகழ்ந்து வரும் " கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்" தனது 2016ம் ஆண்டுக்கான கலை நிகழ்வாக "வேரும் விழுதும்" என்ற முதியோருக்கான "நியூஹொரைசன்" செயற்திட்ட நாடக விழாவை கடந்த 16ம் திகதி ஞாயிறு அன்று பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வுக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தலைமை ஏற்றிருந்தார். மாலை 5.30 மணிக்கு மங்கல விளக்கேற்றல், தமிழ்த் தாய் வாழ்த்து, தேசியகீதம், அகவணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து தலைவர் அவர்களின் வரவேற்புரையோடு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.

verum-viluthum2

தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த "அரங்க நெடுமாறன்" அவர்களின் வாழ்த்துரை அரங்கத்தை கலகலப்பாக்கியது. தனது பேச்சை விழாமேடையில் தமிழ் அமுதமாகவே படைத்து விட்டுச் சென்றார் "அரங்க நெடுமாறன்" அவர்கள்.அவரது உரையைத் தொடர்ந்து விழாவுக்கான மலர் வெளியிடப்பட்டது. தமிழ் இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் அறிந்துகொள்ளவும், எதிர்கால சந்ததிக்கு உதவும் வகையிலும் துறைசார்ந்தோரின் கட்டுரைகள் சில அந்த மலரில் வெளியாகியிருந்தன. பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் "நாட்டுக்கூத்து வரலாறு" மணிவேலுப்பிள்ளை அவர்களின் "கவின் கலைகளின் வரலாறு" வ.திவ்வியராஜன் அவர்களின் "தமிழ் நாட்டியநாடக வரலாறு" பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன் அவர்களின் "கனடாவின் பல்பண்பாட்டு சமூகத்தில் ஈழத்தமிழரின் முப்பதாண்டுகால தாக்கங்கங்களும் தடயங்களும் பற்றிய கண்ணோட்டம்" முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் "கவின்கலைகள் பழமையும்

verum-vilzuthum3

புதுமையும்" ஆகிய கட்டுரைகள் பதிவாகியிருக்கின்றன. இவ் "வேரும் விழுதும்" நூலை அதன் இணை ஆசிரியர்களான குரு. அரவிந்தன், சு.சிவவிநாயகமூர்த்தி ஆகியோர் வெளியிட்டு வைத்தார்கள். நூலின் முதல் பிரதியை சங்கத்தின் காப்பாளர் கவிநாயகம் கந்தவனம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அவரைத் தொடர்ந்து சுப்பிரமணியம் ஐயர் அவர்கள் மற்றும் இலக்கியப் பிரமுகர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

verum-vilzuthum4

மலர் வெளியீட்டைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. "வீட்டுக்குவீடு வாசற்படி" என்ற நாட்டுக்கூத்தும் "பணமும் பாசமும்" என்ற நாட்டிய நாடகமும் அரங்கேற்றப்பட்டன. முதியோரை மையப்படுத்தியதாகவே மேற்படி இரு மேடை நாடக கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. முதியோரைப்பற்றிய விழிப்புணர்வை இளையதலைமுறையிணர் மூலம் வெளிக்கொணர்ந்த verum-vilzuthum5விதமும், அதன் முயற்சியும், கலைஞர்களின் பங்களிப்பும் போற்றுதற்குரியனவாக அமைந்தன. அடுத்து வரும் எமது தலைமுறைக்கு சிறந்ததொரு காட்சிப் பதிவாகவும், ஆவணமாகவும் இவை அமைந்தன என்று சொல்லலாம்.

மதி பாஸ்கரன் அவர்களின் பாடல் வரிகளோடும், நெறியாள்கையோடும் அரங்கேறிய நாட்டுக் கூத்து அனைவரின் வரவேற்பையும் பெற்றது. அதில் நடித்த அனைத்து பிள்ளைகளும் மிகவும் சிறப்பாகப் பாடியும், ஆடியும் மகிழ்வித்தார்கள்.

verum-vilzuthum6"பணமும் பாசமும்" நாட்டிய நாடகத்துக்கான பாடல்களை கவிநாயகம் கந்தவனம் அவர்கள் எழுதியிருந்தார்கள். திருமதி சூரியகலா அவர்களின் இசையமைப்பில் நாட்டிய நாடகம் அரங்கேறியது. புலம்பெயர்ந்து வந்த நம் வயதான பெற்றோருக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகளையும், அன்புக்காக ஏங்கும் ஆதியோரையும் மையமாக வைத்து நாட்டிய நாடகம் உருவாக்கப்பட்டது.

கண்முன்னே நிகழ்ந்த காட்சிகளாக அமைந்த இரு மேடைநாடகங்களும்  விழாவுக்கு வருகைதந்த அனைவரையும் நெகிழ வைத்தன என்று சொல்லலாம்.

verum-vilzuthum7நாடகங்களில் பங்குகொண்ட அனைத்துப் பிள்ளைகள் மற்றும் கலைஞர்களுக்கு கவிநாயகம் கந்தவனம், பேராசிரியர் சுப்பிரமணியம் ஐயர், செந்தாமரை மற்றும் வுநுவு-ர்னு அதிபர் ராஜி அரசரத்தினம், திருமதி விமலா பாலசுந்தரம் ஆகியோர் விருதுகள் வழங்கி கௌரவித்தார்கள். 

verum-vilzuthum10verum-vilzuthum8verum-vilzuthum11verum-vilzuthum12

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: November 25, 2016