shrvan1aதமிழ்த் திரையுலகத்தைச் சார்ந்த பிரபல பாடகர்கள், பாடகிகள் மீது கொண்டுள்ள பற்றும், அவர்களின் இது போன்ற கலை நிகழ்வுகள் என்றால் அனைவருமே singers ஐ கண்டு ரசித்து இன்புறத் தவறுவதில்லை அதனால் தமிழகத்திரையுலகப் பின்னணி கலைஞர்கள், இசை அமைப்பாளர்களை வரவழைத்து, அவர்களின் இசை மழையில் நம்மை எல்லாம் மூழ்க வைத்தும், இந்தியக் கலைஞர்களை கௌரவித்து பாராட்டிப் பெருமை சேர்க்கும் பண்பினால், அவர்களின் இதயத்திலும் இடம் பிடிக்க தவறுவதில்லை.

அந்த வகையில் கனடா T.M.S V.S  தெய்வேந்திரனின் “ராஜ கீதம்ஸ்” வழங்கிய "பொன்மாலைப்பொழுது"  இசை நிகழ்ச்சி ஸ்காபரோவிலுள்ள பெரிய சிவன் ஆலய கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள மத்தியில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் Toronto விற்கு முதன்முதலாக தமிழகத்திலிருந்து Super Singer  புகழ் Shravan கலந்து கொண்டு பிரபலமான பழைய, புதிய பாடல்களைப் பாடி அசத்தியிருந்தார். இவருடன் நமது கலைஞர்களான பிரபா பாலகிருஷ்ணன், எலிசபெத் மாலினி  போன்றவர்களும் பங்கேற்று நிகழ்வை பெருமையுறச் செய்துவிட்டார்கள்.

shrvan2
ஆரம்பம் முதல் இறுதி வரை நிகழ்ச்சிகளை மிக அருமையாக தொகுத்தளித்த திரு ஆன்டன் அவர்களின் பங்களிப்பும் மிகக் கச்சிதமாகவும், பொருத்தமாகவும் அமைந்து ‘பொன்மாலைப் பொழுது’ இசையிரவிற்கு பெருமையும், வெற்றியும் பெறச் செய்துவிட்டது.

shrvan3shrvan4shrvan5