அமெரிக்க வனாந்திரப் பிரதேசங்களில் வசிக்கும் ராக்கூன் என்ற பறவை, சுகாதார விஷயத்தில் நம்பர் ஒன்! எந்தப் பொருள் கிடைத்தாலும், தண்ணீரில் நன்றாக கழுவிய பின்னே உண்ணும்!

கனவுகள் இரவு முழுவதும் வருகின்றன என்றும், 90 நிமிட இடைவெளி விட்டு அவை தோன்றுகின்றன என்றும், சராசரியாக ஒரு இரவு உறக்கத்தில் நாலரை கனவுச் சம்பவங்கள் வருகின்றன என்றும் கண்டறியப் பட்டுள்ளன.

ஜப்பான் நாடு மட்டுமே மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுத கற்றுக் கொடுக்கிறது.

உலகில் உள்ள ஜீவராசிகளிலேயே அதன் உருவத்தோடு ஒப்பிடும்போது, மிகப் பெரிய மூளை எறும்புக்குத்தான் இருக்கிறது.

உடலில் இருக்க வேண்டிய நீரின் அளவில் இரண்டு சதவீதம் குறைந்தால், தாகம் எடுக்கும். 10 சதவீதத்துக்கு மேல் குறைந்தால், உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

உங்கள் உடம்பில் எவ்வளவு ரத்தம் உள்ளது என்று நீங்களே சொல்லி விடலாம். உங்கள் எடையை பன்னிரென்டால் வகுத்துக் கொள்ளுங்கள். வருவதுதான் ரத்தத்தின் எடை என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

சீனர்கள் காகிதத்தை காகிதக் குளவி என்னும் பூச்சிகளைப் பார்த்து கண்டறிந்தார்களாம். காகிதக் குளவிகள் தாம் கூடு கட்ட மரங்களைக் கடித்து துருவி, தன் உமிழ்நீரைக் கலந்து கூழாக்கி, காகிதம் போன்றதோர் பொருளை உருவாக்கி, அதனால் கூடு கட்டுகின்றன.

ஒரு கொசு தன் எடையைப் போல் இரண்டு பங்கு ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டு பறக்க முடியுமாம்.

உலகத்தில் அன்றாடம் இரண்டாயிரம் குழந்தைகள் இருதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இவை பெரும்பாலும் ஒரு வயதிற்குள்ளேயே மாண்டு விடுகின்றன.

சோவியத் யூனியனில் அமைந்துள்ள நிலத்தடி மருத்தவமனையில் சுமார் 8000 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று, தங்கள் உடல்நலம் தேறியிருக்கின்றனராம். 178 மீடடர் நிலப் பரப்பிற்கு அடியில் அமைந்துள்ள உப்புச் சுரங்கத்தில் உள்ள இந்த மருத்துவமனை, 7 வருடங்களாக இயங்கி வருகின்றது. இங்கு சுத்தமான காற்றும், அதிகளவு பிராண வாயுவும், நுண்ணுயிரிகள் அற்ற சூழ்நிலையும் இருக்கின்றது என்று மருத்தவர்கள் கூறுகிறார்கள்.
 
      எட்டாம் எண்ணின்மீது சீனர்களுக்குப் பெரும் பிடிப்பு உண்டு.
சீனர்கள் 8-ஐ ஒரு அதிர்ஷ்ட எண்ணாகக் கருதுகின்றனர். 2003-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஒரு சீன விமான நிறுவனம் “88888888” என்ற தொலைபேசி எண்ணைப் பெற செலவிட்ட தொகை 2,80,723 அமெரிக்க டாலர்கள்.

எரித்திரியா 35 ஆண்டு கால விடுதலைப் போராட்டத்தின் பின்பு 1993-05-24ல் விடுதலையடைந்தது. இதன் பரப்பளவு 1,24,000 சதுர கிலோ மீட்டர். 35 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

உலகில் இரண்டாவது மிகப் பெரிய நாடு கனடாவாகும். இதன் பரப்பளவு 9.9 மில்லியன் சதுர கிலோமீட்டர்.

உலகில் உள்ள இரண்டாவது பெரிய தீவு நியூ கெனியாவாகும். இதன் பரப்பளவு 777,000 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

உலகில் உள்ள இரண்டாவது பெரிய பாலைவனம் ஆஸ்திரேலிய பாலைவனமாகும். இதன் பரப்பளவு 1,550,000 சதுர கிலேர் மீட்டராகும்.

உலகின் இரண்டாவது பெரிய நகரம் மெக்சிக்கோ ஆகும்.

சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்ட லூனா என்ற விண்கலம் 1959 ஜனவரி 2ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இக்கலமே சந்திரனைத் தாண்டி வெற்றிகரமாக பறந்து சென்ற முதலாவது விண்கலமாகும்.

இந்தியாவின் முதல் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பலின் பெயர் ஐ.என்.எஸ் சக்ரா என்பதாகும்.

விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல் நாடு இந்தியா. 1929ம் ஆண்டு இதற்கென ஒரு செட் சிறப்பு தபால் தலைகளை இந்தியா வெளியிட்டது.

அமெரிக்காவில் உள்ள கூர்லி இயந்திர நிறுவனத்தினர் 1907ம் ஆண்டு துணி துவைக்கும் இயந்திரத்தினைக் (வாஷிங் மெசின்) கண்டு பிடித்தனர்.

கி.மு 200 ஆண்டுகளுக்கு முன் சீனப் பெருஞ்சுவர் எதிரிகளிடமிருந்து தமது நாட்டைப் பாதுகாக்கவென பெரும் மனிதவலுவின் பிரயோகத்தால் கட்டியெழுப்பப்பட்டது.

உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து தீவாகும். இதன் பரப்பளவு 2,175,600 சதுர கி.மீ ஆகும்.

பயணிகள் ரயில் போக்குவரத்து முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் 1820ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ், அலெக்சாண்டர், ரிமன் கியோர் 1850ம் ஆண்டு குளிர்சாதனப் பெட்டியைக் (ப்ரிட்ஜ்) கண்டு பிடித்தனர்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்கோனி என்பவர் 1895ம் ஆண்டு வானொலிப் பெட்டியைக் கண்டுபிடித்தார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பெயர்டு என்பவர் 1926ம் ஆண்டு தொலைக் காட்சிப் பெட்டியைக் கண்டுபிடித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்.

நாய்க்கு எத்தனை பற்கள் உண்டு? 42

யானைக்கு எத்தனை பற்கள் உண்டு? 4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்.

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்.

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்.

நின்று கொண்டு தூங்கும் மிருகம் எது?
யானை.

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி.
 
கப்பலை சுமந்துசெல்லும் விமானமுள்ள நாடு?
ரஷியா.

நோபல் பரிசு எந்த ஆண்டிலிருந்து வழங்க தொடங்கினர்?
1901

ஈபிள் டவரின் உயரம் என்ன?
320 அடி

மனிதமூளை தனது ஆயுள் காலத்தில் எத்தனை செய்திகளை பதிவு செய்யக்கூடியது?
10 கோடி

குளிர்ச்சியான கோள் எது?
புளுட்டோ

மனிதன் சாதரணமாக ஒரு நாளில் (24 மணி) எத்தனை தடவைகள் சுவாசிக்கிறான்?
26000 தடவைகள்

ரேடியத்தில் வெளிப்படும் கதிர்கள் எவை?
ஆல்பா பீட்டா காமா

தேனீக்கு எத்தனை கண்கள்?
5 கண்கள்

தேனீ கூடுகட்ட பயன்படுத்தும் மெழுகின் அளவு எவ்வளவு?
1.5 அவுன்ஸ்

தேனீ ஒரு மணிநேரத்தில் எத்தனை பூக்களில் தேன் எடுக்கும்?
800 பூக்கள்

கண்டம் நகர்வானது வருடத்திற்கு 2.5 செ.மீ அளவில் இடம்பெறுகின்றது. இது நமது கை விரல் நகத்தின் வளர்ச்சி வீதத்திற்கு சமமானதாகும்.

கிறிஸ்து காலத்தில் 971ம் ஆண்டில் முதலாவது பல்கலைக்கழகம் எகிப்தில் கெய்ரோவில் நிறுவப்பட்டது.

ஸ்பானிய ஓவியரான பிக்காசோ 1950ல் நடத்தப்பட்ட அமைதி மாநாட்டிற்கு இவர் அமைதியைப் புறாவாக உருவகப்படுத்தி ஓர் அடையாள ஓவியம் உருவாக்க அதை உலகம் அமைதியின் சின்னமாக ஏற்றுக் கொண்டது.

உலகில் மிக வேகமாக ஓடக் கூடிய மிருகம் சீட்டா என்ற புலியினமாகும். இதன் வேகம் மணிக்கு 96.5 கிலோ மீட்டர்களாகும்.

முதன் முதல் பெண்கள் உரிமைகள் மாநாடு 1848ல் நியூயார்க்கில் நடைபெற்றது.

ரோமானியரான அப்பிசியஸ் என்பவரே முதன் முதல் சமையல் முறையினை நூல் வடிவில் எழுதியவராவார்.

650ம் ஆண்டு பாரசீகரால் காற்றாடி கண்டுபிடிக்கப்பட்டது.

ஒலிபெருக்கியானது முதன் முதல் 1924ல் அமெரிக்கரான ரைஸ் கெல்லொக் என்பவர் கண்டுபிடித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஓவின்ஸ் கோர்மிங் என்பவர் முதன் முதல் 1938ல் கண்ணாடி இழை நாரினை கண்டுபிடித்தார்.

1628ல் இங்கிலாந்து விஞ்ஞானியான வில்லியம் ஹார்வே என்பவர் முதன் முதல் மனிதனின் குருதிச் சுற்றோட்டத்தை கண்டறிந்தார்.

முதன் முதல் மின் காற்றாடியை 1882ல் வீலர் என்னும் அமெரிக்காவைச் சேர்ந்தவர் கண்டு பிடித்தார்.

உலகின் மிகப்பெரிய நகரம் ஜப்பானில் தலைநகரமாகிய டோக்கியோவாகும்..

1990ல் கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் ஒன்றிணைந்தன.

உலகில் மிக வேகமாக ஓடக்கூடிய பறவையினம் தீக்கோழியாகும். இது மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.

1938ம் ஆண்டு புளோரசன்ட் மின்குமிழ் முதன் முதல் கண்டுபிடிக்கப்பட்டது. ஜெனரெல் எலக்ட்ரிக் வெஸ்டிங் கவுஸ் என்ற அமெரிக்க நிறுவனமே இதனைக் கண்டுபிடித்தது.

கி.மு 1500 ஆண்டுகளுக்கு முன் இந்து சமயம் இந்தியாவில் உருவானதாக கருதப்படுகின்றது.

2ம் உலக மகா யுத்தத்தின் போதே முதன் முதல் யுத்த களத்தில் விமானம் பயன்படுத்தப்பட்டது. ரெட் பரோன் என்ற விமானத்தை ஜெர்மனி பயன்படுத்தியது.

1851ல் முதன் முதல் உலகளாவிய கண்காட்சி இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் 6 மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர்.

1863ல் முதன் முதல் நிலக்கீழ் புகை ரதச் சேவை இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1776ம் ஆண்டு பிரிட்டானியக் கடலோடியான ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாக் கண்டத்தைக் கண்டுபிடித்தார்.

பசிபிக் பெருங்கடல் பயணத்தின்போது நியூசிலாந்து, டஹித்தி, முதலான பல தீவுக்கூட்டங்களையும் கண்டுபிடித்தார்.

1922ல் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. 1941-1945ற்கு இடைப்பட்ட இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் 20 மில்லியன் சோவியத் நாட்டவர்கள் இறந்தனர்.

பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் சார்ள்ஸ் டார்வின் ஆவார்.

முதன் முதல் டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டீசல் என்பவராவார். இவர் 1895ல் இதனைக் கண்டறிந்தார்.

உலகின் மிகப்பெரிய பாலைவனம் வட ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா பாலைவனமாகும். இதன் பரப்பளவு 8400000 சதுர கிலோ மீட்டர்களாகும். (3250000 மைல்கள்).

1949ம் ஆண்டு வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் அமையம் உருவாக்கப்பட்டது.

1957ல் ஐரோப்பிய நாடுகள் சில ஒன்றிணைந்து ஐரோப்பிய சங்கத்தினை நிறுவின.