Aththisoodi Pongal-1aவேலணை வடக்கு ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்-கனடா மன்றம் எடுத்த தமிழ்மரபுத் தைத்திங்கள் பொங்கல் நிகழ்வு, கடந்த தைமாதம் 21ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில், ரொறன்ரோ ஐயப்பன் கலைமண்டபத்தில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்றது. சங்கத் தலைவர் பொன் பஞ்சலிங்கம் தமைமையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு விழா ஒரு கலைவிழாபோல், தமிழ்மரபுத் திங்கள் அடையாளங்களை உள்ளடக்கியதாக, மிளிர்ந்தது என்றால் அது மிகையில்லை.

கனடிய தேசியகீதம், தமிழ்மொழி வாழ்த்து, ஆத்திசூடி மக்கள் ஒன்றிய சங்க கீதம், பிரிந்தோருக்கான மௌன அஞ்சலி என்ற நிகழ்வுகளோடு ஆரம்பமாகியது. ஏரோடும் தமிழ்நிலத்தில் வாழ்ந்த மக்களின் நிகழ்ச்சியாக அமைந்த இந்தத் தைமரபுத் திங்கள் விழாவிற்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார் திரு. தீவகம் வே. இராசலிங்கம் அவர்கள்.

ஏழாவது வருட நிகழ்வாக நடந்த இந்தச் சிறப்பு விழாவை அலங்காரமாக ஆரம்பிக்து வரவேற்பு நடனத்தை வழங்கினார் செல்வி தரணி வாசன் அவர்கள். அடுத்ததாக, அபிநயா நாட்டியாலயா அதிபர் ஸ்ரீமதி ரஜனி சக்திரூபன் அவர்களின் அழகிய நடனம் விழாவை சிலிர்த்தெழச் செய்தது. 

நவீனா சிவநாதன் அவர்களது தயாரிப்பில் உருவான நடனம் சிறப்புற அமைந்தது.

ஸ்ரீமருதம் சங்கீத கலைக்கல்லூரி அதிபர் மஜெந்தா மகிந்தன் அவர்களினால் நெறிப்படுத்தப்பட்ட தமிழ்மரபும் பொங்கலும் என்ற சிறுவர் வில்லுப்பாட்டு  விழாவின் ஒரு சிறப்பு அம்சமாக அமைந்தது. 

தொடர்ந்து ஆசிரியை ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்கள் அளித்த சிறப்பான நடனம் இடம்பெற்றது. 

மிது கானலயம் இசைக்கல்லூரி ஆசிரியை இசைக்கலாமணி சிறீமதி தர்மினி திஷ்யன் அவர்களின் மாணவிகள் அளித்த இசையுடன் பாடல் நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத் தக்கதாகும். 

வருடா வருடம் ஆத்திசூடி மக்கள் ஒன்றியத்திற்குச் சிறப்பு நடனம் வழங்கிவரும் தரணி வாசன் அவர்களது அழகிய நடனம் இம்முறையும் இடம்பெற்றுச் சபையோரைக் கவர்ந்து கொண்டது. 

சிதம்பர நாட்டியாலயா அதிபர், பரதகலா வித்தகர் ஸ்ரீமதி கௌரிபாபு அவர்களின் மாணவிகள் அளித்த அழகான நடனம் அடுத்து இடம்பெற்றது. 

'சுப்பர் சிங்கர்’ என்று இன்றைய பிரமிப்பூட்டும் விஜய் தொலைக்காட்சியின் பாடல் நிகழ்வில் பங்குபற்றி எமக்குப் பெருமை சேர்த்த பாடகி சரிகா நவரட்ணம் அவர்களின் பாடல் நிகழ்வு பிரமிப்பு ஊட்டுவதாக அமைந்தது.

ஸ்ரீமருதம் கலைக்கல்லூரி அதிபர் திருமதி மஜெந்தா மகிந்தன் அவர்களின் பொங்கல் பாடலோடு, தனம் அவர்கள், சோம சச்சிதானந்தன், உமைமாறன், மற்றும் கல்யாணசுந்தரம், சிவஸ்ரீ கிருஷ்ணராஜக்குருக்கள் அவர்களின் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” என்ற பாடலுடன் சிவபாதம் இசைக்குழுவின் சிறப்பான இசைநிகழ்வு நடைபெற்றது.

பொங்கல் படைத்து, அதற்கான வழிபாட்டை நெறிப்படுத்தி, இந்த விழாவின் சிகரமாக விளங்கிய தீபாராதனையை சிவஸ்ரீ கிருஷ்;ணராஜக்குருக்கள் நடத்தியமை விழாவின் சிறப்பு அம்சமாக விளங்கியது எனலாம்.Aththisoodi Pongal-1cவிழாவிற்குச் சிகரம் வைத்ததுபோல் கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் அவர்கள் பாரதியாராக வந்த நிகழ்வும், தேசபாரதி தீவகம் வே. இராசலிங்கம் அவர்களின் பாரதியார் வரவேற்புக் கவிதையும் அனைவரின் பாராட்டுப் பெற்ற ஒரு சிறப்பு நிகழ்வாக அமைந்தது.

விழா சிறப்புற அமைய உதவிய வணிக வள்ளல்கள், பெருந்திரளாகச் சிறப்பித்த ஊரவர்கள், நண்பர்கள், தமிழ் நேயநெஞ்சங்கள் அனைவருக்கும், உணவு தயாரித்து வழங்கியவர்கள் மற்றும் பலவழிகளாலும் பொங்கல் விழாவுக்கான உதவிகள் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

இரவு ஒன்பது மணியளவில் பொங்கற் பிரசாதமும், இரவு உணவுப் பரிமாறலும் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். மிகவும் கோலாகலமாக நடந்த ஆத்திசூடி மக்கள் ஒன்றியம் கனடா கிளையின் தமிழ்மரபுத் தைத்திங்கள் பொங்கல் விழா சிறப்புற அமைந்தது என்றால் மிகையில்லை.

விழாவை அழகாக, கணீரென்ற குரலில் ஒழுங்கமைத்தவர்கள், திரு கல்யாணசுந்தரம் குமாரசிங்கம்,  திரு. சோம சச்சிதானந்தன் அவர்களுமாவர்.  இறுதியில் விழா இனிதாக, சிறப்பாக நிறைவுற்று ஆத்திசூடி மக்கள் ஒன்றியத்திற்குப் பெருமை சேர்த்தது என்றால் மிகையில்லை

Aththisoodi Pongal-10

Aththisoodi Pongal-12

Aththisoodi Pongal-8

Aththisoodi Pongal-3

Aththisoodi Pongal-4Aththisoodi Pongal-1b

கலைவேந்தன் கணபதி ரவீந்திbaarathiரன் பாரதியார் வேடமிட்டு நடந்த கலைநிகழ்வு அனைவரையும் கவரும் படியாக இருந்தது.  பாரதியார் தான் பாடிய பாடல்களை முன்மொழிந்து பாட, அவரைக் கேள்வி கேட்பதுபோல் தீவகம் வே. இராசலிங்கம் சுப்ரமண்ய பாரதியாரை வரவேற்றுப் பாடிய பாடல் இதுவாகும்.

பாரதி வருக எங்கள்
பாவலா வருக பாட்டுச்
சாரதி வருக முந்தைச்
சந்ததி வருக தையின்
சூரனே வருக  சொல்லின்
செல்வனே வருக வாழும்
வீரனே வருக  என்றும் 
வீழ்ந்திடாய் வருக வாராய்!

காந்தனே வருக வெற்புக்
கவிஞனே வருக எங்கள்
பூங்கவி வருக வேகப் 
புலவனே வருக தேனார்
மாங்கவி வருக  பெண்ணை
மதிப்பவா வருக எங்கள்  
பூம்பனிக் கனடா நாட்டில்
பேரருங் கவியே வருக!

குயிலொடுங் காதல்  ஆயர்க்
கோதையுங் காதல்  வண்ண 
மயிலொடுங் காதல்  மண்ணின்
மலையிலுங் காதல்  பச்சைbaarathi-3ப்  
பயிரொடுங் காதல் பண்ணார் 
பாட்டுடன் காதல்  நஞ்சை
வயலொடுங் காதல்  வாஞ்சை
வாலிபக் கவிஞா வாராய்!

சாதிகள் இல்லை யார்க்கும்
சரிநிகர் வார்ப்பின் எல்லை!
வீதிகள் சிறுவர் முல்லை!
விலங்குகள் அனைத்தும் பிள்ளை! 
ஆதியும் தந்தை தாயும்
அன்பிடுங் கவியின் கொள்கை!
நீதியும் மதமும் யாதும்
நிகரெனும் புலவா வாராய்!

பாப்பாப் பாட்டுப் பாடியவா
பாரின் விடியல் பாடியவா
நாப்பொய் யாளர் பாடியவா
நடிப்புச் சுதேசி பாடியவா
தோப்புந் தென்னை பாடியவா
தேருந் தமிழைப் பாடியவா
மாப்பண் குழந்தைத் தாலாட்டை
மகனே நீயேன் பாடவில்லை?

பெண்மையை உயர்த்திப் பாடி
பெண்களை அம்மா என்கப்
பண்புடன் கவிதை தந்து
பக்குவம் சொன்ன வேந்தன்

baarathi-4எந்தையும் தாயும் என்று
எந்தையை முதலிற் சொல்லிப்
பெண்மயம் பின்னே வைத்துப்
புகன்றது ஏனோ? சுப்பா!

வறுமையில் உழன்றாய் செல்லம்
வடித்ததோர் சோறுஞ் சிட்டுக்
குருவிக்குக் கொடுத்தாய் இஸ்லாம்
கூட்டத்தை வீட்டில் வைத்துப்
பெருமைக்கு அன்ன மிட்டாய்!
பேசடா சுப்பா உன்றன்
தருங்கவி ஊற்றோ எந்தத்
தடையிலா வண்ணம் ஏதோ?

காட்டமாய் யானுங் கேட்கக்
கலைவேந்தன் பார திக்காய்
போட்டதோர் சால்வை வேடம்
பொல்லொடும் மேடை வந்தார்!
மீட்டிடத் தையின் பொங்கல்
மேவிடும் ஆத்தி சூடி
நாட்டொடுங் கனடா மன்றில்
நயத்தையே நாமுங் கண்டோம்!
 

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 14, 2017