isaikethu ellai 2017-1dமெல்லிசை ரசிகர்களின் கரம்பற்றி மெல்ல அழைத்து வந்து சாஸ்திரிய நதியில் நீராட்டும் இசையரங்கம் வழங்கிய இருபத்தி நான்காவது இசைக்கு ஏது எல்லை. இசைப்பிரவாகத்தில் ஒரு புதிய பரிமாணம். நவம்பர் 12, 2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு சென்ரானியல் கல்லூரிக் கலையரங்கில் பல இசை ரசிகர்களின் மத்தியில் இனிதே நடைபெற்றது. நிகழ்வை மிக நேர்த்தியாக இலங்கதாஸ் தொகுத்து வழங்கியிருந்தார்.

எல்லை இல்லா இசைநதியில் காலை நனைக்குமுன் உங்களோடு சில நிமிடம்

isaikethu ellai 2017-1
isaikethu ellai 2017-1aஇசையில் திறமை ஒரு சாராருக்கு மட்டும் சொந்தமானதல்ல. கனடாவில் பல இளஞ்சந்ததியினர் அபார திறமையுடன் பாடுவதை அவதானிக்க முடிகிisaikethu ellai 2017-1bறது. இவர்கள் தமது திறமையை வளர்த்துக் கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பாகும். இசை இலக்கணத்தைப் பயின்றவர்கள் மீண்டும் மீண்டும் அதையே பாடாமல் தாம் வளர்த்த திறமையைக் கொண்டு புதிய பாடல்களுக்கு மெட்டமைத்து சொந்தப் பாடல்களைப் பாட வழிசமைக்க வேண்டுமென்பது இசையரங்கத்தின் நோக்கங்களிலொன்று. நுண்கலைகளின் நுட்பங்கள் தேடி அறியப்பட வேண்டும். உணர்ந்த பின் உணர்வுகள் உருவாக்கம் பெறவேண்டும். முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் முடியாதது ஏதுமில்லை.  இசையரங்ககத்தின் முயற்சி ஈழத்தமிழினத்திற்கான ஓர் இசைப்பாரம்பரியத்தை உருவாக்குவதே.

இந்த முயற்சியில் இன்று கைகோர்த்து நிற்கும் கலைஞர்கள்

isaikethu ellai 2017-2பாட்டு -

iswaryaஐஸ்வர்யா சந்துரு
பாடகரும் நாட்டிய மணியுமான இவர் 3 வயதிலிருந்தே ஆடல்கலையை தன் தாயார் நிரஞ்சனா சந்துருவிடமும், வயலினையும், பாட்டையும் நங்கீத வித்வான் திருமதி தனதேவி மித்திராவிடமும் கற்றிருக்கிறார். 2012 இலிருந்து ஜனக் காண்ட்ரே நாட்டிய குழுவுடனிணைந்து செயற்படுபவர். பல தயாரிப்புக்களில் பங்கெடுத்ததோடு அவர்களுடன் மத்திய கிழக்கு, இந்தியா வரை சென்று நடனமாடியிருக்கிறார். இந்தியாவிலும், இங்கிலாந்திலும் வழமையாக கச்சேரிகள் செய்யும் ஐஸ்வர்யா யோர்க் பல்கலைக் கழகத்தில் உலக நாட்டிய கற்கையில் இறுதியாண்டு மாணவி. இசையரங்கம் வெளியிட்ட இசைத்தட்டில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.


varakiவாரகி விசயராஜ்
தனது இசைப்பயணத்தை டாக்டர் அலக்கானந்தாவிடம் ஆரம்பித்து மேலதிக பயிற்சிகளை ராஜி கோபாலகிருஷ்ணனிடமும், சங்கீத கலாநிதி ஷேஸகேகாபாலனிடமும் பெற்றவர். கடந்த 10 வருடங்களாக இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா என கச்சேரிகள் செய்யும் இவர் இந்தியாவில் வருடந்தோறும் நடக்கும் மார்கழி இசை உற்சவத்தில் பாடிவருவதோடு பல விருதுகளும் பெற்றவர். கூடவே மிருதங்கம், வயலின், நாட்டியம் என்பனவும் பயின்றிருக்கிறார்.கல்வியில் உளவியலில் முதுமானிப் பபட்டம் பெங்ஙவர். சென்ரானியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.

sarikaசரிகா நவநாதன்
சிறுவயதிலிருந்தே பாடிவரும் சரிகா முறையாக கர்நாடக சங்கீதத்தையும், மேற்கத்தைய இசையையும் பயின்றதோடு தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி என பல மொழிகளிலும் பாடி வருகிறார்.  விஜே ரிவி சுப்பர் சிங்கரில் பாடியதிலிருந்து எலகின் பல பாகங்களிலும் பாடி வருகின்றார். பல இசை ஜாம்பவான்களுடன் பாடிய சரிககா தொடர்ச்சியாக கச்சேரிகள் செய்து வருவதோடு ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் வணிகத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்கிறார். இசையரங்கம் வெளியிட்ட இசைத்தட்டில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

 
mayurathiமயூரதி தேவதாஸ்
ஐந்து வயதிலிருந்து சித்திராங்கி சுரேஷ்குமாரிடம் இசைபயின்றவர். 2014ம் ஆண்டு அரங்கேற்றம் கண்டார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மூன்றாம் ஆண்டில் இளமானிப் பட்டப் படிப்பை மேற்கொள்கிறார். கூடவே வயலினும், நாட்டியமும் பயிலும் இவர் சினிமாப் பாடல்களையும் மேடையில் பாடுபவர்.

 

 

nilaநிலா சிவனேந்திரன்
நான்கு வயதிலிருந்தே பாடும் நிலா திருமதி சங்கீதா கோகுலனிடம் வாய்ப்பாட்டு கற்று 2015 இல் அரங்கேற்றமும் கண்டார். தமிழ் அக்கடமியில் ஆசிரியர் தராதரம் வரை பரீட்சையில் சித்தியெய்தியுள்ளதோடு பைரவி அக்கடமியில் மாணவர்களுக்கு போதித்தும் வருகிறார். பாட்டு தவிர பரதநாட்டியத்தை குரு வாசு சின்னராசாவிடம் பயின்று 2012ம் ஆண்டு அரங்கேற்றமும் செய்தவர். பல இசைக்குழுக்களில் சினிமா இசை பாடி வருகிறார்.


Mahisaமகிஷா பகீதரன்
சிறுவயதிலிருந்தே பாடும் இவர் ரிவிஐ நடாத்திய சுப்பர் ஸ்ரார் இசைப்போட்டியில் ஆதலிடம் பெற்றவர். விஜே ரிவியின் சுப்பர் சிங்கரில் 10ம் இடம் வரை வந்தவர். ஆரம்ப குரு சங்கீதா கேகாகுலனிடம் இசையை கற்று தற்போது மேலதிக பயிற்சி பெறுகிறார். இசையரங்கம் வெளியிட்ட இசைத்தட்டில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

 

 

nirubanநிரூபன் நாகேந்திரம்
நாதஸ்வர மேதை பஞ்சாபிகேசனதும், தவில் மேதை குமரகுருவினதும் பேரனாதலால் இயலபாகவே இசைஞானம் மிகுந்தவர். நாதஸ்வரத்தை தன் தந்தையிடம் பயின்றவர். வாய்ப்பாட்டு திறமையை ஈரம்பத்தில் தானாகவே வளர்த்துக் கொண்டார். பின்னர் சிறிது காலம் சங்கீத வித்வான் சண்முகராகவனிடமும், கனடா வந்த பின்னர் வயலின் வித்வான் ஜெயதேவனிடமும் கற்றுக் கொண்டார். நாதஸ்வரத்தை தொழிலாகக் கொண்டவர். அரங்கேற்றங்களுக்கும் பாடி வருகின்றார். இசையரங்கம் வெளியிட்ட இசைத்தட்டில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

 

rajaneesanகீபோட் – றஜனீசன் ஜேசுராசன்
ரொறன்ரோ, மொன்றியல், அமெரிக்கா என பல இடங்களிலும் தொடர்ச்சியாக இசை வழங்கும் இவர் ஒரு நுட்பமான கீபோட் கலைஞர்.  இவர் பல தென்னிந்திய கலைஞர்களுக்கு இசை வழங்கியிருக்கின்றார். இசையின் நுட்பத்தை ஆழமாக அறிந்து வைத்திருப்பதால் ஒவ்வொரு ஸ்வரங்களையும் மிக துல்லியமாக வாசிக்கும் ஆற்றல் பெற்றவர். சிறுவயதிலிருந்தே றஜனீசன் நாடகங்களுக்கும், சினிமாவுக்கும், அல்பங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். ஏழு ஸ்வரங்கள் என்ற இசைக்குழுவின் இயக்குனரும் ஆவார்.

 

suruthiவயலின்-புல்லாங்குழல் – சுருதி பாலமுரளி
வயதில் மிக இளையவர். தந்தையிடம் சிறுவயதிலிருந்து வயலின், புல்லாங்குழல், வீணை, கீபோட் என்பவற்றைப் பயின்றவர். வாய்ப்பாட்டிலும் வல்லவர். சிறு வயதிலேயே இசையில் முதிர்ச்சியை வெளிப்படுத்துவாற்காக பலரின் பாராட்டுகளையும் பெறுபவர். கூடவே நடனமும் பயின்றுவரும் இவர் பல இசைக்குழுக்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றார்.

 


navalanதபேலா – நாவலன் இளையதம்பி
நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது 10வது வயதில் ராஜன் இசைக்குழுவில் பாட ஆரம்பித்தார். 13வது வயதில் திரு சிதம்பரநாதனிடம் மிருதங்கத்தைக் கற்க தொடங்கினார். கூடவே தானாகவே தபேலா வாத்தியத்தை வாசிக்கக் கற்றுக் கொண்டவர். 18வது வயதில் ராஜன்; இசைக்குழுவில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். இவரின் திறமையைக் கண்ட இசையமைப்பாளர் கண்ணன் தனது இசையமைப்புகளில் பாடவும், தபேலா வாசிக்கவும் நாவலனை பாவித்தார். கனடா வந்த நாவலன் பல இசைக்குழுக்களுக்கு தபேலா வாசித்து வரும் அதேவேளை தனது வாசிப்பை மெருகூட்ட பல குருக்களிடம் மேலதிக பயிற்சி பெற்றிருக்கிறார். தற்போது சாக்குPர் குசைனிடம் பயின்று வருகிறார். இவர் இசையரக்கத்தின் ஆரம்ப கலைஞர்களில் ஒருவர். விஸ்வமித்ரா என்ற fusion band  இன் முக்கிய அங்கத்தவர்.

 

babuஒக்ரோ பாட் – பாபு
மொன்றியல் பாபு என அழைக்கப்படும் இவர் லய ஞானமுள்ள மிருதங்க கலைஞர். கூடவே தபேலாவும் வாசிப்பார். இவர் தனது இசைப்பயணத்தை சித்தாராவுடன் ஆரம்பித்தார். 1996 இலிருந்து கனடாவிற்கு வருகை தரும் இந்தியப் பாடகர்களுக்கு ஒக்ரோ பாட் வாசித்து வரவேற்பைப் பெற்றவர். பாலா, ஜேசுதாஸ் என 65 இற்கும் மேற்பட்ட பாடகர்களுக்கு வாசித்தவர். ரொறன்ரோவிலிருக்கும் அத்தனை இசைக்குழுக்களு;கும் தேவைப்படும்போது வாசிப்பவர்.

 

nilaksanபேஸ் கிட்டார்- நிலக்ஷன் ராஜேஸ்வரன்
கிட்டார் வாத்தியத்தை நடா ஜெயதேவனிடம் முறையாகக் கற்றவர். பேஸ் கிட்டாரை வாசிக்கும் திறமையை வளர்த்துக் கொண்டவர். இவர் ரொறன்ரோவில் பல இசைக்குழுக்களுக்கு கிட்டாரும், பேசும் வாசித்து வருகிறார்.

 

 

கவிதைகள் -

கலைவாணி ராஜகுமாரன்
யாழ் பல்கலைக்கழகத்தில் வணிகம் படித்தபோதும் இவர் பேனா ஈழத்தமிழர்களின் வேதனைகளையும், விடுதலையையும் எழுதிக் கொண்டிருந்தது. எழுத்துத் துறையில் அளப்பரிய சாதனைகளைப் புரிந்து வரும் கலைவாணி இசையரங்கம் எடுத்த முதல் முயற்சியிலிருந்து இன்றுவரை பல பாடல்களை புனைபவர். இன்று இவர் பாடல்கள் ஏழு அரங்கேறுகிறது.

சேரன்
வின்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல்-மானுடவியல் பேராசிரியராக கடமையாற்றுமளவுக்கு படித்திருந்தாலும் தன்னை கவிஞர் என இனங்காண்பதையே பெரிதாக கருதுபவர். மகாகவியின் மைந்தனாகப் பிறந்ததினால் இலக்கியத்தின் இளவரசனாகும் உயர்வினை வளர்த்துக் கொண்டவர். கவிதைக்காக உலகளாவிய ரீதியில் பல விருதுகளைப் பெற்றவர். தமிழ் பேசும் முழு உலகும் அறியப்பட்ட இவரின் பாடல்கள் இரண்டு இன்றைய நிகழ்வில் இடம்பெறுகிறது.

செழியன்
மரபுக் கவிதைகளால் மக்களைக் கவர்ந்தவர். புதுக்கவிதைகளால் வாழ்வியலின் யதார்த்தங்களை நாடிபிடித்துக் காட்டியவர். பின் சிறந்ததொரு நாடக எழுத்தாளன் எனவும் பலராலும் பாராட்டுப் பெற்றவர்.

பா.அ.ஜெயகரன்
கனடா நாடக உலகில் தனக்கென ஓர் முத்திரையைப் பதித்தவர். இவர் நாடகங்கள் கடல் கடந்து பல நாடுகளில் மேடையேறியிருக்கிறது. தத்துவார்த்தமான பாடல்களை புனைவதில் வல்லவர். இவருடைய பாடல்கள் இரண்டு பாடப்படுகிறது.

மைதிலி
சமூகசேவகியாக 16 வருடங்களுக்கு மேலாக இலாப நோக்கற்ற ஸ்தாபனங்களில் வேலை செய்கிறார். கூடவே யோகாசனத்தையும் பயிற்றுவிக்கிறார். ஓம்னி தொலைக்காட்சியின் செய்திப் பிரிவிலும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் வேலை செய்கிறார். இவருடைய கவிதைகள் அடங்கிய புத்தகம் ஒன்று 2002ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவருடைய பாடலொன்று இசைக்கப்படுகிறது.

ஜெயக்குமார்
90களில் பத்தரிகைகளுக்கு கவிதையெழுதியவர். மோகன் இசையமைத்த சகானாவுக்கு பாட்டுக்களை எழுதத் தொடங்கி பாடலாசிரியர். 30க்கு மேற்பட்ட இவரது பாடல்கள் இறுவெட்டாக வெளிவந்திருக்கிறது. இவருடைய பாடல்களில் ஒன்று பாடப்படுகிறது.

 isaikethu ellai 2017-3b

– மோகன் குமாரசாமி

 

 

 

 

 

 

 

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 1, 2018