கனடாவில் இயங்கிவரும் கொய்யாத்தோட்டம் கனடா சங்கம் நடாத்திய வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் மற்றும் இராப்போசன விருந்து ஆகியன கடந்த சனிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள"The Estate Banquet Hall" மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக பொறியியலாளர் திரு.ஜெயக்குமார் மற்றும் சிறப்புப் பேச்சாளராக கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு.ஆர்.என்.லோகேந்திரலிங்கம், கனடிய நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிஆனந்தசங்கரி, ரொறொன்ரோ மாநகர உறுப்பினர் நீதன் சாண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
யாழ்ப்பாண நகருக்கு மிக அண்மையில் உள்ள கொண்யாத்தோட்டம், பாண்டியன்தாழ்வு மற்றும் ஈச்சமோட்டை ஆகிய பிரிவுகளை பிறப்பிடமாகக் கொண்டிருந்த கனடா வாழ் மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு மகிழ்ச்சியுடன் கூடியிருந்தனர்.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஆகியனவும் இடம்பெற்று சிறுவர் சிறுமியர்களுக்கு அன்பளிப்புக்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.