Golden 2017-1aஅன்னைத் தமிழை போற்றும் பிள்ளைகளாய் எம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள் என்றுமே எங்கள் இதய தெய்வமாய் நிலைத்து நிற்பவர்கள். முதுமைப் பருவத்தில் அவர்கள் மகிழ்வோடும் அமைதியோடும் தங்கள் இறுதிக் காலத்தை கழிக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை பிள்ளைகளாகிய எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. பிறந்து வளர்ந்த தாயகத்தைப் பிரிந்து உறவுகளோடு கூடி வாழ்ந்த தாய் மண்ணைப் பிரிந்து, சொந்த பந்தங்கள்  வீடு வாசல்களை விட்டுப் பிரிந்து புலம் பெயர் தேசத்தில் வாழும் பிள்ளைகளே தஞ்சமென துணை தேடி வந்தவர்கள் நம் பெற்றோர்கள். தாயக மண்ணில் தனித்துவமாய் வாழ்ந்தவர்கள்.

சொத்து சுகம், காணி பூமி, கல்வி அந்தஸ்து என்ற பெருமைக்குரியவர்களாய் வாழ்ந்தவர்கள். மதம் மொழி, கலை கலாச்சாரம என்பவற்றைப் போற்றி வாழ்ந்தவர்கள். இறுதிக் காலத்தில் பிள்ளைகளே தமக்கு துணையிருப்பர் என்ற எதிர்பார்ப்பில் தாயகத்தை விட்டு வந்து புலம் பெயர் தேசத்தில் இணைந்து கொண்டவர்களே நம் பெற்றோர்கள்.

வசதி வாய்ப்புகள் உள்ள மேலைத்தேய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வந்துவிட்டாலும், தாயகத்தில் வாழ்ந்தது போன்று உறவுகளுக்கிடையேயான நெருக்கத்தை அதிகம் பேணமுடியாத ஒரு வாழ்க்கை முறையே இங்கு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. பனி விழும் குளிர் தேசத்திலே தொலைபேசியும், தொலைக்காட்சியுமே அவர்களது உறவுப் பாலமாய் இருக்கின்றன. பிள்ளைகள் வேலைக்கு சென்றுவிட, பேரப்பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட தனிமையின் பிடிக்குள் சிக்கியவர்களாக வாழும் நிலையில் நம் பெற்றோர்கள். அவர்களுக்கு ஏற்பட்ட தனிமைச் சிறையால் அவர்களது உடல் நலம், மன நலம் பாதிக்கப்பட்டதோடு அவர்களுக்குள் இருக்கும் திறமைகளும், ஆற்றல்களும் மழுங்கடிக்கப்படுகின்றன.Santhiya2017-14

பெற்றவர்களின் வயதான காலத்து தனிமை உணர்வை போக்குவதன் மூலம் அவர்களை ஆரோக்கியமாகவும், அவர்களின் திறமைகள் வெளிக்கொணர்வதன் மூலம் அவர்களை உற்சாகமாகவும் வைத்திருக்கமுடியும் என்ற எண்ணமே இந்த பாடல் போட்டி உருவாவதற்கு காரணமாக அமைந்தது. அதன் வெளிப்பாடே "சந்தியா ராகம்" என்ற முதியோருக்கான இசை நிகழ்ச்சி. சமூகம் சார்ந்த ஒரு ஊடக மையம் என்ற வகையிலும், சமூகத்தின் மேலான அக்கறையின் அவசியம் கருதியும், வயதானவர்களை வைத்து ஒரு பாடல் போட்டி நிகழ்ச்சியை நடாத்துவதற்கு TET-HD   தொலைக்காட்சி நிலையம் முன்வந்தது.

Santhiya2017-7முதியவர்களுக்கான பாடல் போட்டியை TET-HD  தொலைக்காட்சி நடாத்துவதற்கு தீர்மானித்த போது அதற்கு அனுசரணை வழங்க "விலா கருணா முதியோர் இல்லம்" முன்வந்தது. முதியோருக்கான தமது உன்னத சேவையின் 14 ஆண்டைப் பூர்த்தி செய்யும் "விலா கருணா முதியோர் இல்லம்" "சந்தியா ராகம்" என்ற நிகழ்ச்சியினூடாக முதியவர்களின் ஆற்றலை வெளிக்கொணர முன்வந்தது. இந்த இணைவின் மூலம் ரொறன்ரோ வாழ்முதியவர்களின் பாடும் திறன் வெளிக்கொணரப்பட்டுள்ளது. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு சிறந்ததொரு பாடல் போட்டி நிகழ்ச்சி இசைவிருந்தாக வழங்கப்பட்டிருக்கிறது. முதுமைக்கு களம் அமைத்துக் கொடுத்ததில் TET-HD   தொலைக்காட்சி மன நிறைவு கொள்கிறது.

Golden 2017-2Bபாடல் போட்டி ஆரம்பமானதில் இருந்து TET-HD  தொலைக்காட்சி வாராவாரம் தொடர்ச்சியாக அதை ஒளிபரப்பி வந்தது. வயதானவர்கள் பங்கு கொள்ளும் இத்தகைய ஒரு நிகழ்ச்சி இதுவரை எந்த ஓரு தமிழ் தொலைக்காட்சியிலும் இடம்பெறவில்லை என்பதும், அதை விலா கருணா முதியோர் இல்லத்தோடு இணைந்து TET-HD   வழங்கியது என்பதும் முதியோருக்கு செய்யும் உயர் கௌரவமாக கருதப்படுகிறது.

பாடல் போட்டி  ஆரம்பிக்கப்பட்டபோது 40 முதியவர்கள் பங்குள்கள் விண்ணப்பித்தார்கள். தேர்வுப்பாடலில் ஆரம்பித்து டூயட், மெலடி, குத்துப்பாட்டு, பக்திப்பாடல், இருவர் இணைந்த பாடல், வயல்காட் என வகைப்படுத்தப்பட்டு வாரா வாரம் ஒளிப்பதிவு இடம்பெற்றது. நடுவர்களின் முடிவுக்கேற்ப படிப்படியாக சிலர் விலக்கிக்கொள்ளப்பட திறமையானவர்கள் முன்னிலைக்கு வந்து கொண்டிருந்தார்கள். கடைசியில் 1) பாலசிங்கம் தம்பிப்பிள்ளை  2) ஜமுனா பாலச்சந்திரன்  3) கனி விமலநாதன்  4) லிங்கேஸ்வரி ராஜ்குமார்  5) மனோகரன் நடேசபிள்ளை  6) கிறிஸ்ரோபில்லா அல்போன்சஸ் ஆகிய  ஆறு பாடகர்களே இறுதிச்  சுற்றுக்கு தெரிவானார்கள்.

"சந்தியா ராகம்" -2017  Golden Super Singer – Grand Finale  பாடல் போட்டிக்கான முடிவுகள் ஒரு பொதுமேடையில் கலை நிகழ்வாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் விலா கருணா முதியோர் இல்லத்தால் TET-HD  தொலைக்காட்சியோடு செய்யப்பட்டன. அந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று Metropolitan Centre – Scarborough  மண்டபத்தில் இடம்பெற்று முடிந்திருக்கிறது. விலா கருணா முதியோர் இல்லத்தின் பொறுப்பாளர்இந்திராணி நாகேந்திரம் அவர்களின் தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள். முதியவர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகச்சிறந்த கௌரவமாக மக்கள் வருகையை கருதப்படுகிறது.Santhiya2017-2A

மங்கள விளக்கேற்றல், தேசிய கீதம்,  தமிழ்தாய் வாழ்த்து, அகவணக்கம் என்பவற்றோடு ஆரம்பமான நிகழ்வை ரமணன், சாந்தி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள் ஆரம்ப உரைகள் மற்றும் நடன நிழ்சிசிகளைத் தொடர்ந்து Golden Super Singer – Grand Finale  வெற்றியாளரை அறிவிக்கும் தேர்வுக்கான இறுதிப்போட்டி இடம்பெற்றது. இரண்டு பாடல்கள் பாடுவதற்கான சர்ந்தர்ப்பம் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. போட்டியாளர் அறுவரும் தங்கள் இறுதி முயற்சியாக சிறந்த பாடல்களை  வழங்கியதன் மூலம் தமக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி இருந்தார்கள். பைரவி இசைக்குழுவின் இன்னிசையில் அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் விழாவுக்கு வருகை தந்திருந்த மக்களின் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Santhiya2017-12நான்கு நடுவர்களோடு சிறப்பு நடுவராக திரு.வர்ண ராமேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார். பாடல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நடுவர்களின் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. அதாவது வெற்றியாளராக திரு.பாலசிங்கம் தம்பிப்பிள்ளை தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தை திருமதி கிறிஸ்ரோபில்லா அல்போன்சஸ் அவர்களும், மூன்றவாது இடத்தை கனி விமலநாதன் மற்றும் லிங்கேஸ்வரி ராஜ்குமார் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கான வெற்றிப் பட்டிகளை செந்தாமரை ஊடக மையத்தின் அதிபர். திருமதி இராஜி அவர்கள் அணிவித்து கௌரவித்தார். ஆடல் பாடல் நிகழ்வுகளோடு விழா இனிதே நிறைவு பெற்றது.

Santhiya2017-18

Santhiya2017-10

Santhiya2017-2

Santhiya2017-3

Santhiya2017-9

Santhiya2017-13

Santhiya2017-15

Santhiya2017-16Santhiya2017-6Santhiya2017-1

Santhiya2017-4

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 22, 2018