உலகின் மிக உயரமான நிர்மாணமாக வார்ஸ்சோ அமைப்பின் வானொலி பரிவர்த்தனைக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. போலந்தில் புளொக் என்ற இடத்தில் உள்ள மிக உயரமான கட்டடத்தில் 1974ம் ஆண்டு நிர்மானிக்கப்பட்ட இதன் உயரம் 646 மீட்டர் ஆகும்.

உலகில் மிக நீளமான பாலம் ஜப்பானில் உள்ள கொன்சு-சிக்கோ என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1780 மீற்றர் ஆகும்.

பேர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளுக்கிணங்க பைபிளை முதன் முதல் தமிழில் மொழி பெயர்ப்புச் செய்தவர் ஆறுமுகநாவலர்.

1885ல் திருத்தியமைக்கப்பட்ட இரு சக்கர வண்டியை வடிவமைத்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டெரி என்பவராவார்.

1783ம் ஆண்டு மொண்ட் கொல்வியர் என்ற பிரஞ்சு நாட்டவரே முதன் முதல் பறக்கும் பலூனைக் கண்டுபிடித்தவராவர்.

இரையே இல்லாமல் பாம்பு 25 மாதங்களும், தவளை 16 மாதங்களும், மூட்டைப்பூச்சி 6 மாதங்களும் உயிர் வாழும்.

ரோமானியப் பேரரசின் தலைவர்களான் ஜூலியஸ்சீசர், அகஸ்டின்சீசர் ஆகிய இருவருமே, இன்று வழக்கிலுள்ள நாட்காட்டி அமைப்பிற்கு முதலில் வித்திட்டவர்கள். ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களும் இவர்களது பெயரினை குறித்து வைத்தவையாகும்.

1954ல் அமெரிக்க கான்சர் மையம் முதன்முதலாக சிகரட் பிடித்தால் புற்றுநோய் வருமென்று கண்டு பிடித்துச்சொல்லியது.

உலகிற்கு முதன்முதல் தபால் முத்திரையை அறிமுகப்படுத்திய நாடு இங்கிலாந்தாகும். 1840ல் பிளாக்பென்னி முத்திரை இங்கிலாந்தில் விநியோகிக்கப்பட்டது.

முதலாவது பயணிகள் புகையிரதம் 1825ல் இங்கிலாந்தில் சேவையிலீடுபடுத்தப்பட்டது.

1555ல் புகையிலை ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகில் டைனோசர்களின் ஆதிக்கம் நிலவியது.

வெந்நீர் சுவையில்லாமல் இருப்பதற்குக் காரணம், நீரைக் கொதிக்க வைக்கும் போது நீருக்குச் சுவையூட்டும் வாயு வெளியேறிவிடுகின்றது.

1665ல் இங்கிலாந்து விஞ்ஞானியான ஐசார்க் நியூட்டன் புவியீர்ப்புக் கொள்கையைக் கண்டுபிடித்தார்.

உலகின் முதலாவது ஒலிம்பிக் போட்டி கி.மு 776ல் கிறீஸ் நாட்டில் நடைபெற்றது.

1903 ல் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரைட் சகோதரர்களால் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

1290ல் முதன் முதல் வாசிக்கக்கூடிய மூக்குக் கண்ணாடி இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது.

1914ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ஆரம்பித்து 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி வரையிலான 1561 நாட்கள் முதலாம் உலக மகா யுத்தம் நடந்தது. இதில் 1 கோடி படை வீரர்களும் 2 கோடி மக்களும் இறந்தனர்.

1897ல் பாதுகாப்பு முகச்சவரக் கத்தியை கிங்.சி.கில்லட் என்பவர் கண்டுபிடித்தார்.

உலகின் இரண்டாவது பெரிய நகரம் மெக்சிக்கோ ஆகும்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கொலட் என்பவரால் முதன் முதல் 1836ல் பிஸ்டல் ரிவால்வர்-ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

உலகில் முதன் முதல் அச்சிட்டு வெளியிடப்பட்ட நூல் டிமோன் சுட்ரா என்பதாகும். இது 868ல் சீனாவில் வெளியிடப்பட்டதாகும்.

சினிமாத் துறையின் மைய நிறுவனமாக 1913ம் ஆண்டு ஹாலிவூட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

முதன் முதல் காற்று நிரப்பப்பட்ட டயர் 1845ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்தவர் ஸ்கொட்டிஸ் நாட்டைச் சேர்ந்த பொறியியலாளரான ரொபேட் டபிள்யு தாம்சன் என்பவராவார்.

உலகில் முதலாவது பல்கலைக்கழகம் எகிப்தில் கெய்ரோவில் 971ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.

1787ம் ஆண்டில் முதன் முதலாக டாலர் நாணயம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
முதன்முதல் 1510ம் ஆண்டு ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாக கடல் வழியாக கரிபியன் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

உலகப்புகழ் பெற்ற பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தை நிர்மாணித்த பொறியியலாளர் யார் தெரியுமா? அவர்தான் ஈஃபில் அலெக்சாண்டர் குற்படவ்.

தண்ணீருக்குள் பறக்கும் பறவை ஒன்று உள்ளது. அதன் பெயர் டிப்பர்.

பைபிளில் மோசஸுக்கு கடவுள் காட்சியளித்ததாகக் கூறப்படும் இடம் சீனாய் மலை. இங்கிருந்துதான் மோசஸ் 10கட்டளைகளைப் பெற்றுவந்தார் என்பது யூதர்களின் – கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இந்த மலை எகிப்தில் உள்ளது.

மணிக்கு 1000கிமீ வேகத்தில் தடையற்றுப் பறக்கும் ஒரு ஜெட் விமானம் இங்கிருந்து சூரியனைச் சென்றடைய 17ஆண்டுகள் ஆகும்.

இந்தியாவின் மிகப்பெரிய ஆலமரம் கோல்கத்தா தாவரவியல் தோட்டத்தில் உள்ளது.

ஷங்க் என்ற பிராணி எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தன்னைச் சுற்றி சிறிது தூரத்திற்கு மிகவும் துர்நாற்றமான நீரைப் பீய்ச்சியடிக்கும்.

டமான்டுவா என்ற விலங்கு தன்குட்டியை எப்போதும் தன் முதுகிலேயே சுமந்து செல்லும். எவ்வளவு உயரமான மரத்திலும் வெகு விரைவாக ஏறிவிடும்.

ஒரு ஆண் எலியும் ஒரு பெண் எலியும் சேர்ந்து ஓர் ஆண்டுக்கு 1372குட்டிகளை ஈன்றெடுக்கும்.
 
உலகிலேயே சிலைகள் அதிகம் கொண்ட கோவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில். இங்கு 33,000 சிலைகள் உள்ளன.

உலகிலேயே மிக நீண்ட பிரகாரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மூன்றாம் பிரகாரம் ஆகும்.

மிக நீளமாக வளரும் செடி – பிரம்புச்செடி

காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தை சூட்டியவர் – ரவீந்திரநாத் தாகூர்.

கருப்புத் தங்கம் என்றழைக்கப் படுவது – மிளகு

கோள்களில் சிறியது – புளூட்டோ, பெரியது – ஜூபிடர்

நாம் வாழும் இந்தப்பூமியே ஒரு காந்தம் என முதலில் குறிப்பிட்டவர் – வில்லியம் கில்பர்ட்

ஐ.நா. சபை என்னும் பெயரை உருவாக்கியவர் – பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்

கிழக்கிந்திய ஸ்காட்லாந்து எனப்படுவது – மேகாலயா

சாவகத்தீவு என அழைக்கப்பட்டது – இந்தோனேஷியா

உலோகங்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது – பூளூட்டோனியம்

யுரேனியத்தை கண்டுபிடித்தவர் – வில்லியம் ஹெர்சல்

இந்தியாவின் மிக நீண்ட பீச்: மெரினா பீச், சென்னை. இது 13 கி.மீ நீளமுடையது. உலகின் 2 வது மிக நீண்ட பீச் ஆகும்.

உலகின் மிகப்பெரிய கோவில் – ஆங்கர்வாட்

உலகின் பழமையான விளையாட்டு – போலோ

சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு – 1950

இந்தியா சுதந்திரம் அடைந்த கிழமை – வெள்ளிக்கிழமை

ஆங்கிலேயர்கள் லிட்டில் இங்கிலாந்து என்று அழைத்த ஊர் – உதகமண்டலம்

அதிக சிறைச்சாலை கொண்ட மாநிலம் – மராட்டியம்

செல்போனின் தந்தை என வர்ணிக்கப்படுபவர் – மார்ட்டின் கூப்பர்

ஜீரோ வாட் பல்ப் என்பது உண்மையில் எத்தனை வாட் கொண்டது – 15 வாட்

ஆங்கில மொழியில் அதிகம் பயன்படும் முதல் வார்த்தை – The

ஆக்டோபசி என்ற மீன் இனத்தைப் போன்று ராட்சச கைகளைக் கொண்ட கலாமர் என்ற கடல் மீன் வகை பிரான்ஸ் நாட்டு மர்சேய் என்ற ஆழ்கடல் பகுதியில் அதிகம் கிடைக்கிறது. ஐரோப்பிய மக்கள் விரும்பி உண்ணும் இந்தப் பெரிய மீன் அவ்வளவு எளிதில் வலைகளில் சிக்காது. சமீபத்தில் பிடிக்கப்பட்ட இந்த மீன் ஒன்றின் நீளம் மட்டும் மூன்று மீட்டர்.

உலகிலேயே மூன்று நாடுகளில்தான் சந்தனமரங்கள் உள்ளன. அவை இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகும். இவற்றுள் மிக அதிகப் பரப்பளவில் சந்தன மரங்கள் இந்தியாவில்தான் உள்ளன.

பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிய முதல் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்தான். கதையின் பெயர் டேவிட் காப்பர் பீல்டு.

பிரிட்டீஷ் இந்திய காலத்தில் இந்தியாவின் கோடைகாலத் தலைநகர் சிம்லா.

1938-ல் ஹோவர் ஹூக்ஸும் நான்கு உதவியாளர்களும் 3 நாட்கள், 19 மணி, 17 நிமிடங்களில் உலகை வலம் வந்தனர். அவர்கள் பயணம் செய்த விமானத்தின் பெயர் "NEW YORK WORLD FAIR"
.
சீனாவில் குழந்தைகளின் வயதை அவர்கள் தாயின் வயிற்றில் உருவானதில் இருந்து கணக்கிடுகிறார்கள்!

எத்தகைய கோடையிலும் அசோக மரத்தில் இலைகள் முழுமையாக உதிர்ந்து விடுவதில்லை!

முள்ளங்கி என்பது கிழங்கு அல்ல, செடியின் வேர்!

பாம்பின் கண்களில் எப்போதும் நீர் ததும்பி நின்று பளபளப்பாகக் காணப்படும். ஆனால் பாம்புகளால் அழ இயலாது!

குயில் ஒரு புத்திசாலியான பறவை. அது தனக்காக ஒரு கூட்டை கட்டிக் கொள்வதில்லை. அதனால் முட்டையிடும் காலங்களில் தனது முட்டைகளை வேறு பறவைகளின் கூடுகளில் போட்டுவிடும். கூட்டின் சொந்தக்காரப் பறவை தனக்கே தெரியாமல் குயிலின் முட்டையையும் அடைகாக்கும். குஞ்சு பொரித்தவுடன் குஞ்சாக இருக்கும் குயில் இன்னும் பொரிக்காமல் இருக்கும் மற்ற முட்டைகளை கூட்டிலிருந்து கீழே தள்ளிவிடும். ஆனாலும் கூட்டின் சொந்தக்காரப் பறவையானது குயில் குஞ்சினையும் தமது குஞ்சாகவே பாவிக்கும்.

சென்னையில் 1876-ஆம் ஆண்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போதைய ஆளுநர் பக்கிங்ஹாம் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக அடையாற்றையும் கூவம் ஆற்றையும் இணைக்கும் கால்வாய் ஒன்றை வெட்டினார். அவர் நினைவாக இது பக்கிங்ஹாம் கால்வாய் என்றழைக்கப்படுகிறது.

நகம் நாள் ஒன்றுக்கு 0.1மில்லி மீட்டர் வளரும். நகத்திற்கு உணர்ச்சி கிடையாது. ஏனெனில் உணர்வு நரம்புகள் இல்லை. ஆனால் புதிய செல்கள் உற்பத்தியாகும்.

சாதாரணமாக அமிலத்தில் வைரங்கள் கரையாது. அதிக சூடுபடுத்தினால் மட்டுமே கரையும்.

நன்றி: முத்தமிழ் மன்றம்