V.N.M book released_1aவி.என்.மதிஅழகன் “சொல்லும் செய்திகள்” நூல் அறிமுகம்விழா கடந்த சனிக்கிழமை ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் இடம்பெற்றது. குறிப்பிட்ட நேரத்துக்கே முழுமையாக நிறைந்து விட்ட சபா மண்டபத்தில் இலக்கியத்துறை சார்ந்தவர்கள், கல்விமான்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், ஊடகம் சார்ந்தவர்கள், அன்பான உறவுகள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.மதிஅழகனின் நீண்டகால ஊடக நண்பரும், தமிழ் ஒலி, ஒளிபரப்புத்துறை மற்றும் கலைத்துறையின் முன்னோடியுமான பி.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் நூல் அறிமுக விழா இடம்பெற்றது.

உலகத் தமிழினத்துக்கு நன்கு அறிமுகமான வானொலி, தொலைக்காட்சி ஊடக முன்னோடியான திரு.வி.என்.மதிஅழகன் அவர்களின் அனுபவப் பகிர்வானது அச்சுப் பதிப்பாக கடந்த வாரம் அறிமுகமாயுள்ளது. கடந்த 48 ஆண்டுகளாக ஒலி-ஒளி வாங்கியின் மூலம் ஊடகத்துறையில் பெற்ற அனுபவங்களை  பேனா முனையின் துணையோடு தமிழ் பேசும் நல்லுலகத்தின் முன்னே படைத்துள்ளார் மதியழகன்.  

உன்னதமான குரல் வளத்துக்V.N.M book released_1-கும், தெளிவான தமிழ் மொழி உச்சரிப்புக்கும் மதியழகன் அவர்கள் ஒலி, ஒளி ஊடகத்துறையில் நீண்ட காலம் பயணித்து பல இன்னல்களையும், நெருக்கடிகளையும் கடந்து உயர்ந்து நிற்கும் ஒரு கோபுரக் கலசமாகக் கருதப்படுபவர்.

இலங்கையில் இருக்கும்வரை வானொலி, தொலைக்காட்சித்துறைகளில் உயர் பதவிகளை வகித்தவர். தமிழ் மக்களால் மட்டுமல்ல ஏனைய இனத்தவர்களாலும் நன்கு அறியப்பட்டவர். அனைவரையும் கவரும் வகையிலான செய்தி வாசிக்கும் குரல் வளமே அவரது தனித்துவத்துக்கு காரணம்.  

ஒலி-ஒளிபரப்புத்துறையில் அவரது தகைமைக்கு ஏற்ப உயர் வாய்ப்புக்கள் இலங்கையில் இருந்த போதும் விரும்பியோ விரும்பாமலோ நாட்டைவிட்டு கனடாவிற்கு இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போதும், ஊடகப் பணியை தான்சார்ந்த மக்களுக்காக தொடர்ந்தும் வழங்கி வருகிறார் என்பது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் பல்லாண்டுகால அனுபவப் பகிர்வாக வெளிவந்திருக்கும் அவரது   “வி.என்.மதிஅழகன் பேசுகிறேன்” என்ற நூலானது வானொலி, தொலைக்காட்சி பற்றிய அனுபவத் தகவல்களின் பொக்கிசமாகக் கருதப்படுகிறது. 

ஒலி-ஒளிபரப்பு ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும், அதன் உள்V.N.M book released_2bளார்ந்த விடயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ள வாசிப்புப் பிரியர்களுக்கும் இந்த நூல் ஒரு பயனுள்ள கைநூலாகும்.

ஏற்கனவே இலங்கையிலும் இந்தியாவிலும் வெளியிடப்பட்டுவிட்ட இந்த நூல் கனடாவில் ஒரு அறிமுக விழாவாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. சம்பிரதாய நிகழ்வுகளோடும் சோம சச்சிதானந்தம் அவர்களின் இனிமையான தமிழ்தாய் வாழ்த்துப் பாடலோடும் நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஆரம்பத்திலேயே நூலாசிரியரின் உரை இடம்பெற்றது. தனது ஊடகப் பயணம் பற்றிய தகவல்களோடு நூல் பற்றிpய சிறு விளக்க உரையை ஆற்றிய மதிஅழகன் அவர்கள் தனது நூலின் மூலம் கிடைக்கப்பெறும் நிதியில் ஒரு பகுதியை ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்காக வழங்க இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஒலி ஒளிபரப்பு ஊடகத்துறையில்  பல அனுபவங்களையும் உயர் பதவிகளையும் பெற்றிருந்த போதும் கனடா வருV.N.M book released_3-கையின் பின் ஒரு வருட காலம் என்ன செய்வது என்று புரியாமல் தவித்திருந்த வேளையில் சரியான பாதையைக் காட்டியவர் நண்hர் பி.விக்னேஸ்வரன் என்று குறிப்பிட்டு அவருக்கு நன்றி தெரிவித்ததோடு அன்றைய நிகழ்வுக்கு அவரையே தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து சிறப்புரைகள் இடம்பெற்றன. போசிரியர் சிவநாயகமூர்த்தி, தமிழர் தகவல் ஆசிரியர் திருச்செல்வம், கவிஞர் கலாராஜன், எழுத்தாளர் அ.முத்துலிங்கம் போன்றோரின் உரைகள் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து  நூல்பிரதிகள் வழங்கப்பட்டன. பொன்னையா விவேகானந்தனின் சிறப்புரையோடு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

வானலையில் – 45 ஆண்டுக்காலம் – 4 கலையகங்களில்

VNM Vaanalaiyil 45 years

சொல்லாமல் சொல்லும் செய்திகள்……

VNM sollamal sollum seithikal-1

VNM sollamal sollum seithikal-2

VNM sollamal sollum seithikal-3

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: November 28, 2018