Sriranjan1aயாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, புளியங்கூடலைப் பிறப்பிடமாகக் கெகாண்டவரும், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் அதிகாரியாக பணிபுரிகின்றவரும், பிரபல கட்டுரையாளரும், நூலாசிரியருமான நடராசா சிறிரஞ்சனால் தொகுப்பட்ட “யாழ்ப்பாணத் தமிழ் அகராதி” மற்றும் “யாழ்ப்பாண வழக்குச்சொல் அகராதி தொகுதி – ஒன்று”  அறிமுக விழா கடந்த 22ம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோவில் அமைந்துள்ள Kennedy Convention Centre  மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Sriranjan1அங்கு தலைமையுரையாற்றிய வைத்திய கலாநிதி இலம்போதரன் அவர்கள் உரையாற்றுகையில் எங்கள் மத்தியில் கடினமான விடயங்களைப் பொறுப்பேற்றுச் செய்வதில் பலரும் முன்வருவதில்லை. அதிலுள்ள சிரமங்கள் அவர்களைத் தடுத்துவிடும். ஆனால் மெது தொகுப்பாசிரியர் நடராசா சிறிரஞ்சன் அவர்கள் அவ்வாறானவர் அல்ல என்பதை நிரூபித்துள்ளார்.

யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு அல்லது வட்டார வழக்கு என்பது மிகவும் அருகிப் போகின்ற விடயமாகவே உள்ளது. இது தொடர்பாக நாம் உண்மையில் கவலைப்பட வேண்டும். எம்மில் பலர் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கைத் தாண்டி இப்போது பலவாறாக தங்கள் உரையாடல்களை மேற்கொள்ளுகின்றார்கள். எனவே தொகுப்பாளர் நடராசா சிறிரஞ்சன் அவர்களின் இந்த படைப்புக்கள் ஒரு காலத்தின் தேவை என்றுதான் நான் கூறுவேன் என்று குறப்பிட்டார். 

அகராதி தொகுதி – ஒன்று