சீரடி சாயியின் திருவருளால் இன்று சார்வரி ஆண்டு ஆவணித் திங்கள் 7ம் நாள் (23-08-2020) ஞாயிறு காலை 8.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையுள்ள சுபநேரத்தில் "ஸ்ரீ பொன் சாயி" கரம்பொனுக்கு வருகை தரும் வைபவம் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது.
இந்தியாவின் புண்ணிய சீரடி மண்ணிலுள்ள பாபாவின் மகா சமாதியில் "ஸ்ரீ பொன் சாயி" ஆசீர்வதிக்கப்பெற்று பின் இலங்கை " யாழ் மத்தி ஸ்ரீ பகவான் சத்திய சாய் சேவா நிலையத்தில்" சௌகரியமாக தனது பொன்னான நாளை எதிர்பார்த்து இன்று நல்லூர் " யாழ் மத்தி ஸ்ரீ பகவான் சத்திய சாய் சேவா நிலையத்தின்" தலைமையில் "ஸ்ரீ பொன் சாயியின்" நிழல் உருவப்படம் அங்கு எழுந்தருளல் காயத்ரி, அஷ்ரோத்ர சத நாமாவளி, வைகறை ஆராத்தி ஆராதனையைத் தொடர்ந்து காலை 9.15 மணியளவில் பக்தர்கள் புடை சூழ கரம்பொன் தெற்கு ஒழுவில் "ஸ்ரீ ஞானவைரவர் அரச மரத்தடிக்கு 10.00 மணியளவில் வந்தடைந்து கோவிலில் இருந்து சுருவில் வீதி வழியாக மங்கள வாத்தியங்களுடன் "ஸ்ரீ பொன் சாயி" ஊர்வலமாக கரம்பொன் சுருவில் வீதியில் அமைந்துள்ள கனிஷ்ட பாடசாலைக்கு (Karampon little flower convent) அருகிலுள்ள "கரம்பொன் சீரடி சாயி" இல்லத்தில் தனது இருப்பிடத்தில் வந்தமர்ந்து கொண்டார்.
தனது நிரந்தரமான துவாரகாமாயி மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யும் வைபவத்தில் நூற்றியெட்டுப் போற்றிகளுடன் பாதபூசையும், நல்லூர் சாய் சமித்தி அடியார்களுடன் இணைந்து, வட்டுவில் முருகமூர்த்தி கோவில் அறநெறிப் பாடசாலைச் சிறுவர்களின் பஜனை மற்றும் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும்; மதிய போசனம் வழங்கப்பட்டது.
"துவாரகாமாயிடம் வந்த பக்தர்கள் எவரும் வெறும் கையுடன் திரும்பிச் சென்றதில்லை" -சீரடி பாபா
நன்றி: ஓம் ரிவி