மகாளயத்தின் கடைசி அமாவாசை நாளான இன்று 17-09-2020 வியாழக்கிழமை சிவன் கோவிலில் வம்சாவழியாக இருக்கும் ஜெயராம குருக்களின் சிரேஷ்ட புத்திரன் சந்திர குருக்களால் கரம்பொன் மண் மற்றும் வெளியூர் முன்னோர்களினதும் ஆசி வேண்டி ஊர்காவற்றுறையில் ஈழத்துக் காசிவிஸ்வநாதராக விளங்கும் கணபதீஸ்வரம் சிவன்கோவிலில் மோட்ச அரிச்சனையுடன் பிராமண தர்ப்பணமும் செய்தார்.
சிவன்கோவில்: சைவர்களின் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படுபவர் ‘சிவபெருமான்’. சிவனுக்கு பல வடிவங்கள் இருந்தபோதிலும் அருவ உருவ வழிபாட்டில் நாம் சிவலிங்கத்தையே வழிபடுகிறோம். இன்னும் சொல்லப்போனால் பிரமனுக்கும்இ விஷ்ணுவுக்கும் தமது அடி முடியைக் கண்டு பிடிக்கச் சொன்ன ஜோதிவடிவாகத் தோன்றியவர் சிவன். இந்நாளே சிவராத்திரியாகும்.
யாழப்பாணத்தில் தீப்பகுதியில் சிறப்பாகச் சொல்லக்கூடிய இரண்டு சிவன்கோவில்களாக காரைநகரில் “ஈழத்துச்சிதம்பரமும்” ஊர்காவற்றுறையில் ஈழத்துக் காசிவிஸ்வநாதராக கணபதீஸ்வரம் சிவன்கோவிலும் குறிப்பிடத்தக்கவை.
காசிவிஸ்வநாதரின் அற்புதவரலாறு:
19ம் நூற்றாண்டு ஆரம்பகாலத்தில் அனலைதீவைச் சேர்ந்த பிராமணரான கணபதி ஐயருடைய வாழ்க்கையில் நடந்த இரண்டு துயர நிகழ்வுகளையும் சிவனின் சோதனையாகவே கொள்ளவேண்டும்இ ஏனெனில் சிவனடியார்களை சிவன் சோதனைக்குள்ளாக்கியே ஆட்கொள்வதுவழக்கம்! அதே போல் கணபதி ஐயருடைய வாழ்வில் அவரது ஒரேயொரு பிள்ளையான பெண்பிள்ளையை பருவவயதில் நோய் கொண்டுபோனது மிகத்துயரமான நிகழ்வாகும.; அதனைத்தொடரந்து அவரது மனைவியும் இறைவனடி சேரவே அவர்களுக்கு பித்துரு காரியம் செய்வதற்காக இந்தியாவிலுள்ள இந்துக்களின் புண்ணியதலமாகிய காசிக்குசென்றார்.
அங்குசிவனின் (கங்காதரனின் ) தலைமுடியிலிருந்து பாய்கின்ற புனிததீர்த்தமான கங்கையில் மூழ்கி நீராடியபோது கணபதி ஐயரைசிவன் ( விஸ்வநாதர்) ஆட்கொண்டார்! ஜயாவின் காலில் பொருள் ஒன்று தட்டுப்பட அவர் அதை எடுத்தபோது அது பரமேஸ்வரனான காசிவிஸ்வநாதரே ஒருசிவலிங்கமாக இருக்கக்கண்டு மெய்சிலித்தார் கணபதிஐயர்.
சிவலிங்கத்தை பக்திப்பரவசத்தோடு எடுத்துச் சென்று காசியிலுள்ள சிவாச்சாரிகளிடம் காட்டியபோதுஇ அவர்கள் கூறியதாவது ‘நீர்; ஓர் புண்ணியவாதி இச்சிவலிங்கம் உமது கையில் கிடைத்துள்ளது. நீர் இதையெடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்து வழிபடும் ‘ என வாழ்த்தி ஆசிகூறினார்கள். அவர்களின் ஆசிஇ நொந்து வாடிய இவருக்கு ஓர் மறுவாழ்வாகவே அமைந்தது.
இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன் 1920ம் ஆண்டில் ஊர்காவற்றுறையில் கோவில் ஒன்றை அமைத்துஇ காசியில் கிடைத்த சிவலிங்கத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்து காசிவிஸ்வநாதராகவும் அத்துடன் அம்பாளையும்இ காசிவிஸ்வநாதர் சமேதர விசாலாட்சி என அழைக்கப் பிரதிஷ்டை செய்தார்.
அது நிற்க கணபதி ஐயாவின் சிவனின் பணிதொடர ஐயா அவர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்த பிராமண குலப்பெண்மணியான ஞானாம்பியை (பெரியம்மா) மறுமணம் செய்து பாரியாருடன் அவருடைய குட்டி தங்கை இராஜலட்சுமியையும்இ சிறு பையனான தம்பி ஜெயராமனையும் அழைத்துக் கொண்டுவந்தார்கள். அவர்களை தன்பிள்ளைகள் போல் வளர்த்தார்கள். சிறுவர்கள் பருவ வயதையடைந்ததும் இராஐலட்சுமியை கரம்பொனைச் சேர்ந்த சாம்பபசிவக் குருக்களுக்கு (பபாஐயாஇ குமார் ஐயாவின் மூத்தசகோதரன்) மணம் முடித்துவைத்தார்கள்.
தம்பியான ஜெயராமக் குருக்கள் தன்னுடைய தாய் மண்ணிலிருந்து பெண்ணெடுத்தார். அவரின் மகனான சந்தி குருக்களே பரம்பரையில் தற்போது இக்கோயில் நிர்வாகத்தை நடாத்தி வருகிறார்.
இக் கோவிலில் 1920ம் ஆண்டிலிருந்து பூசைகள் நடைபெற்று வந்தன. பின் கணபதிஐயா இந்தியாவின் சிற்பிகளுடன் இன்றைய ஆலயத்தைக் கட்டி எழுப்பி 1927ம் ஆண்டு முதற் கும்பாபிஷேகம் செயதார்.
அதனைத் தொடர்ந்து 1954ம் ஆண்டிலும் 2004ம் ஆண்டிலும் ;கும்பாபிஷேகங்கள் நடைபெற்றென.
ஆறு கால நித்திய பூசைகளுடன் வருடாந்த உற்சவமான தேர்த்திருவிழாவை ஆனி உத்தரத்திலும் இ சிவனுக்குரிய சிவராத்திரிஇ திருவெம்பாவைஇ நடேசர் அபிஷேகம்இ அம்மனின் விசேஷ பூசைகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
எமது முன்னோர்கள் போற்றிப் பாதுகாத்து வந்த இவ் வரலாற்று சிறப்பு வாய்ந்த காசிவிஸ்வநாதர் கோவிலை புனருத்தாரணம் செய்ய ஊர் மக்கள் முன் வரவேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும்.