New year-2021-1aஇன்று 2020ஆம் ஆண்டின் கடைசி நாள். நம் வாழ்நாளில் மறக்க முடியாத வருடம் என்றால் அது 2020ஆம் ஆண்டாக இருக்கக்கூடும். எத்தனை கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் 2020ஆம் ஆண்டை வரவேற்று மகிழ்ந்தோம். ஆனால் பலரது வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை 2020ஆம் ஆண்டு கற்றுக் கொடுத்துள்ளது.
பிறந்திருக்கும் புது வருடத்தில் அனைவரது வாழ்விலும் சாந்தி, சமாதானம், அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி நிலைத்திருக்க கரம்பொன்.நெற் இணையம் வாழ்த்துகிறது.
முதலாவதாக புத்தாண்டின் தொடக்கத்தை எதிர்கொண்ட நாடுகள்

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 2021ஆம் புது வருடத்தை வாண வேடிக்கை நிறைந்த காட்சிகளுடன் அங்குள்ள மக்கள் வரவேற்றனர்.

New year-2021-aஆஸ்திரேலியாவின் சிட்னியில் கண் கவர் வாண வேடிக்கை இருந்தபோதும், துறைமுக பகுதியில் மக்கள் ஒன்று கூடி அந்த காட்சிகளை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

ஆக்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

New year-2021-b2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸால் புரட்டிப்போடப்பட்ட இயல்புநிலையை மீட்டெடுக்க உலக அளவில் பல நாடுகள் போராடி வருகின்றன. இந்த நிலையில், உலகின் பல நாடுகளில் முதலாவதாக புத்தாண்டை எதிர்கொண்ட நியூஸிலாந்தை, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, ஜப்பான், தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டை மக்கள் அமைதியான வகையில் வரவேற்றனர்.

மெல்போர்னில் புத்தாண்டை வரவேற்ற பொதுமக்கள்

New year-2021-cஐரோப்பிய நாடுகளில் தொடரும் கட்டுப்பாடுகள்

பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த அந்நாட்டு அரசு, விதிகளை மீறி நிகழ்ச்சிகளை நடத்துவோரை கண்காணிக்க ஒரு லட்சம் காவல்துறையினரை சிறப்பு கண்காணிப்பு பணிக்காக நியமித்தது.

இத்தாலியில் புத்தாண்டு கொண்டாட விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, அங்குள்ள முக்கிய நகரங்களின் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

New year-2021-d
இத்தாலியின் மிலன் நகரில் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நகரங்கள் உள்பட பல இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

சீனாவில் விளக்குகளின் ஒளிரும் நிகழ்ச்சிகளுக்கு இந்த ஆண்டு அரசு கட்டுப்பாடு விதித்ததால், லாந்தர் விளக்குகளை ஏற்றி புத்தாண்டை மக்கள் வரவேற்றார்கள்.

பிரிட்டனில், புதிய கொரோனா வைரஸ் திரிபு வேகமாகப் பரவி வருவதோடு, மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் 20 மில்லியன் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அந்நாட்டில் மக்கள் கோவிட்-19 சமூக இடைவெளி விதிகளை பின்பற்றுமாறு பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டார்.

அயர்லாந்து நாட்டில் வியாழக்கிழமை இரவு மிக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பிறரது வீடுகளுக்கு மக்கள் செல்ல முழு தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பணிகளில் அல்லாதவர்கள் ஐந்து கி.மீ தூரத்துக்கு மேல் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.New year-2021-eஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படும் நகரின் முக்கிய வீதிகள்

ஜெர்மனி நாட்டில் ஜனவரி 10ஆம் தேதிவரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு புத்தாண்டையொட்டி பட்டாசு விற்பனைக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனினும், இந்த நடவடிக்கையை பொதுமக்கள் சாதகமான நடவடிக்கையாக பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், "நாட்டில் "அமைதியான புத்தாண்டு கொண்டாட்டம்" ஆக 2021ஆம் ஆண்டு நினைவில் இருக்கும்," என்றார்.

நெதர்லாந்து நாட்டில் பொது முடக்கம் ஜனவரி 19ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் வழக்கமான புத்தாண்டு கவுன்ட் டவுன் நிகழ்ச்சிக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

துருக்கி நாட்டில் புத்தாண்டு நாளில் தொடங்கி நான்கு நாட்களுக்கு பொது முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

நன்றி: பி.பி.சி நியூஸ்

வகைப்படுத்தப்பட்ட பகுதி: நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 1, 2021