"கரம்பொன் சீரடி சாயி இல்லத்தின் ஆதரவில் ஆஞ்சனேயரின் மார்கழி மூலநட்கத்திர நன்நாளில் 12-01-2021 செவ்வாய் கிழமையான இன்று "ஸ்ரீ பொன் சாயி" தொண்டர் சேவையின் முன்னோக்கி நகரும் செயல் திட்டத்தின் கீழ் ஸ்ரீபொன்சாயி இல்லத்தில் ஆஞ்சனேயர் விம்பம் பிரதிஷ்டை, சீரடி சாயி சத்சரித கைநூல் வெளியீடு, மரம் வளர்ப்போம் வளம் பெறுவோம் மற்றும் பொங்கல் பொதிகள் வழங்குதல் ஆகிய நான்கு நிழ்வுகள் நடைபெற்றன.
<
"கரம்பொன் சீரடி சாயி இல்லத்தின் ஆதரவில் ஆஞ்சனேயரின் மார்கழி மூலநட்கத்திர நன்நாளில் 12-01-2021 செவ்வாய் கிழமையான இன்று "ஸ்ரீ பொன் சாயி" தொண்டர் சேவையின் முன்னோக்கி நகரும் செயல் திட்டத்தின் கீழ் ஸ்ரீ பொன்சாயி இல்லத்தில் ஆஞ்சனேயர் விம்பம் பிரதிஷ்டை, சீரடி சாயி சத்சரித கைநூல் வெளியீடு, மரம் வளர்ப்போம் வளம் பெறுவோம் மற்றும் பொங்கல் பொதிகள் வழங்குதல் ஆகிய நான்கு நிழ்வுகள் நடைபெற்றன..
முதலாவது நிகழ்வாக ஆஞ்சனேயர் விம்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. சீரடி பொன் சாயியின் இல்லத்திற்கு பக்கத்துக் காணியிலே ஆஞ்சனேயரைப் போன்று ஒரு விருட்சம் காணப்படுகிறது. அந்த இடத்திலே ஆஞ்சனேயர் விம்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது இங்கு நடைபெற்ற முதலாவது நிகழ்வாகும்.
அடுத்த நிகழ்வாக சீரடி சாயி சத்சரித கைநூல் வெளியிடப்பட்டது. இந்த நூல் சீரடி சாயி சத்சரிதத்தின் சாராம்சமாக அமைந்துள்ளது. சீரடி சாயி சத்சரிதத்திலே 50 அத்தியாயங்கள் காணப்படுகின்றன. அந்த 50 அத்தியாயங்களிலுமுள்ள சாராம்சம் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. அதனை லண்டனில் வசித்து வரும் திருமதி. கமலா பாலசுப்பிரமணியம் தொகுத்து அனுப்பி அந்த நூல் இன்று இங்கே வெளியிடப் பெற்றுள்ளது.
அடுத்த நிகழ்வாக மரம் நாட்டுவோம் வளம் பெறுவோம் என்ற கருத்திட்டத்தின் கீழ் இங்கு மரம் நடுகை இடம்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து வறிய குடும்பங்களுக்கு பொங்கல் பொதி வழங்குகின்ற நிகழ்வு நடைபெற்றது.
அவை எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் சித்தத்தினால் இன்று மழை எஙகளுக்கு விட்டுத் தந்து இந்த நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உதவியாக அமைந்துள்ளது.
"துவாரகாமாயிடம் வந்த பக்தர்கள் எவரும் வெறும் கையுடன் திரும்பிச் சென்றதில்லை" -சீரடி பாபா
நன்றி: Capital TV
"கரம்பொன் ஸ்ரீ பொன் சாயி இல்லத்தில் (28-01-2021) வியாழக்கிழமை தைப்பூசம் மிகவும் பக்தி பூர்வமாக கொண்டாடப்பட்டது.
கனடாவில் வாழும் கரம்பொனைச் சேர்ந்த செல்வமோகன் விஜயகௌரி தம்பதிகள் தமது திருமண நாள் ஞாபகார்த்தமாக மகள் அபிஷாவுடன் ஸ்ரீ பொன் சாயி இல்லத்தின் தைப்பூச நிகழ்வுக்கு ஆதரவு அளித்து அமைதியாகக் கொண்டாடினார்.
அவர்கள் குருவருள் பெற்று நீடூழி வாழவேண்டுமென "கரம்பொன் ரெம்பிள்" சார்பில் நன்றி கூறி வாழ்த்துகின்றோம்!.