கடந்த வாரம் ஊர்காவற்துறை அரசினர் வைத்தியசாலைக்கு அங்குள்ள மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அத்தியாவசியமாக தேவைப்பட்ட (தசை, நரம்பு சிகிச்சைக்கு உதவும் இயந்திரம்) Interferential therapy machine "பிசியோதெரபி" உபகரணத்தை "ஸ்ரீ பொன்சாயி சேவையின்" ஆதரவாளர்களான அமரர்கள் குமாரசாமி அருளமணி அவர்களின் (கரம்பொன் தெற்கை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வருபவர்களான) குடும்பத்தினர் கொள்வனவு செய்ய உதவினார்கள்.
ஒரு லட்சத்து எண்பதாயிரம் பெறுமதியான இதன் உபயோகம் என்னவெனில் உடலிலுள்ள நரம்பு, தசை, சவ்வு போன்றவற்றின் ஈவால் ஏற்படும் வலியை குணப்படுத்தி மீண்டும் அசைவு இயக்கத்தைத் தரவல்லது.
அமரர்களினதும், ஸ்ரீ பொன்சாயியினதும் ஆசிவேண்டி குடும்பங்கள் சுகபலத்துடன் வாழ கரம்பொன் ரெம்பிள்ஸ் சார்பில் பிரார்தனையுடன் கூடிய நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு சாயிநாதருக்கு மங்களம்.