murugan1aஸ்ரீ முருகன் அடியார்களே!
திருமூலரால் சிவபூமியென போற்றப்பட்டதும், தேவாரப் பாடல் பெற்றதும், பஞ்ச ஈஸ்வரங்களை தன்னகத்தே கொண்டதுமான இலங்கைத் திருநாட்டின் வடபால் தீவகத்தின் ஊர்காவற்றுறை மேலைக்கரம்பொன் பதியில் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி சுவாமியின் வருடாந்த மகோற்சவம் நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் ஆடி மாதம் 14ம் நாள் (30-07-2021) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அமிர்தயோகமும் ரேவதி நட்சத்திரமும் சப்தமி திதியும் கூடிய சுபவேளையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துத் தினங்கள் நடைபெற்று ஆடியமாவாசையில் எம்பெருமானுக்குத் தீர்த்த உற்சவமும் நடைபெறும்.

இவ் உற்சவ காலங்களில் அடியார்கள் விரதம் அனுஷ்டித்து ஆசார சீலராய் ஆலயத்திற்கு வருகை தந்து ஸ்ரீ முருகப்பெருமானின் திருவருளை பெற்றுய்வீர்களாக!

kovil copy

வகைப்படுத்தப்பட்ட பகுதி: நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: October 25, 2021