அன்னையின் மடியில் 04–04-1930
ஆண்டவன் அடியில் 05-08-2021
யாழ். கரம்பொன் சுருவில் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இல்வேட் , எஸெக்ஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வம் ரீச்சர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட ஆசிரியை செல்வபாக்கியம் அவர்கள் (கரம்பொன் சிறிய புஸ்பமகளிர் மகாவித்தியாலயத்தில் தனது 30 வருட சேவையைப் பூர்த்தி செய்தவர்) 05-08-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அசாதாரன Covid-19 சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் 14-08-2021 சனிக்கிழமை அன்று மதியம் 12:00 மணியளவில் குடும்பத்தினரும் சிறியவட்டத்திலுள்ள நண்பர்களும் அமைதியான முறையில் அன்னாரின் இறுதிப்பயணத்தை நடத்த இருப்பதை கருணையுடன் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.