Rjeswary1aஅன்னையின் மடியில் 24-06-1934
ஆண்டவன் அடியில் 10-10-2021

கரம்பொன் சிறிய புஸ்ப மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியையாகவும், உப அதிபராகவும் கடமையாற்றிய "அந்தோனிப்பிள்ளை மிஸ்" என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட திருமதி இராஜேஸ்வரி அந்தோனிப்பிள்ளை அவர்கள் 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா குருமன்காட்டில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் தபால் திணைக்களத்தில் இலிகிதராக கடமையாற்றி ஓய்வுபெற்ற அமரர் திரு சவரிமுத்து அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், ஜெராட் பயஸ், ரெஜினோல்ட் மைக்கல், இயூஜின் வெனிசியஸ் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,

றதீனா பயஸ், இந்திராணி மைக்கல், சசிகலா வெனிசியஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும், லோஜிதா, கீர்த்திகா, பிரெவின்- நிரஞ்சன், பிரித்திவி, மோனிஷா, கனிஷ்ரன், டிலான் ஆகியோரின் அன்புப் பேத்தியும், பிரஜனின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அசாதாரன Covid-19 சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் இன்று 14-10-2021 செவ்வாய்க்கிழமை வவுனியாவில் நடைபெற்று முடிந்தது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
ஜெராட் பயஸ் (கனடா) 416-321-8929,  416-520-9972
ரெஜினோல்ட் மைக்கல், (கனடா) 416-508-8929
இயூஜின் வெனிசியஸ் (இலங்கை) 1024-222-3119, 077-539-7511, 071-595-3018

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Rjeswary copy

வகைப்படுத்தப்பட்ட பகுதி: அறிவித்தல்கள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: October 19, 2021