பூமியின் வெப்ப நிலை உயர்வு பல ஆபத்தான விளைவுகளை எமக்குத் தரப் போகிறது. அதிமோசமான கால நிலைஇ நிலங்கள் பாலை நிலமாக மாறுதல், உணவு-குடி நீர் பற்றாக்குறை, இதன் விளைவாக உயிரினங்கள் உலகத்திலிருந்து ஒரேயடியாக அழிந்து போதல், பனிப் பாறைகள் உருகுதல், அதன் விளைவாக கடல் மட்டம் உயருதல், இதன் விளைவாக நாடுகள் தண்ணீரில் மூழ்குதல் என பூகோள வெப்ப நிலை உயர்வின் சங்கிலித் தொடர் விளைவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 

மிக மோசமான கால நிலையின் கோர விளைவுகளை நாம் அண்மைக்காலமாக தொலைக்காட்சியில் பயத்துடன் பார்த்து வருகின்றோம். சுனாமி, நில நடுக்கம், எரிமலை, புயல், சூறாவளி, வெள்ளம், திடீர் வெண்பனி, மழையின்மை, வரட்சி, காடு எரிதல் என மாறி மாறி பூமியின் ஏதோ ஒரு பகுதியில் எதோ ஒரு அநர்த்தம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இவற்றின் எண்ணிக்கை முன்னையை விட அண்மையில் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஐரோப்பாவில் சில நாடுகளில் மழை கூடி வெள்ளத்தால் அழிவுகள் எற்படுகின்றன. தென் ஐரோப்பாவில், அமெரிக்காவில், அவுஸ்திரேலியாவில், இந்தியாவில் வெப்ப அலை வந்து மக்கள் இறக்க நேரிடுகிறது. அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பாவில் கடும் வரட்சியால் காடுகள் இலகுவில் தீப்பற்றி எரிகின்றன. அவுஸ்திரேலியா, ஆபிரிக்காவில் கடும் வரட்சி காரணமாக பயிர்கள் அழிந்து உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு விலைகள் சாதாரண மக்களுக்கு எட்டாத அளவுக்கு உயர்ந்துள்ளன. வெண்பனி பெய்யாத நாடுகளில் திடீரென பனியடித்து கோரமான போக்குவரவு விபத்துகள் எற்படுகின்றன. இந் நிகழ்வு 2007 குளிர் காலத்தில் சீனாவில் ஏற்பட்டு பெருந்தொகையான பயிர்களை அழிந்து விட்டது. அமெரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும், பசிபிக் கரீபியத் தீவுகளிலும் வருடத்துக்குப் பல தடவை புயல், சூறாவளியால் உயிரினங்களுக்கும், மக்களுக்கும் சொத்துகளுக்கும் பெரும் சேதம் ஏற்படுகின்றன. மிகச் சிறிய எண்ணிக்கயில் காணப்படும் உயிரினங்கள் ஒரேயடியாக அழிந்தும் போகின்றன.

ஆபிரிக்காவின் சில பகுதிகளில் தொடர்ச்சியான வரட்சி காரணமாக சாதாரண நிலங்கள் பாலையாக மாறிக் கொண்டு போகின்றன. மேலும் வரட்சி காரணமாக பயிர்கள் கருகி உணவு குடிநீர்ப் பற்றாக்குறையும்இ பஞ்சத்தால் மரணமும், அகதிகளாகி முகாம்களில் சர்வதேச உதவியை நம்பி வாழும் நிலையும் காணப்படுகிறது. மனிதர் பாதிக்கப் படுவது மட்டுமன்றி பல உயிரினங்கள் பூமியிலிருந்து அருகிப் போகின்றன.

வட தென் துருவக் கண்டங்களான ஆர்டிக், அன்ராட்டிகிலும், மற்றும் கிளிமஞ்சாரோ, இமாலயம் போன்ற உயர்ந்த மலைகளிலும் காலம் காலமாக வருடா வருடம் பெய்யும் வெண்பனியானது கோடையிலும் உருகாது மேலே மேலே படிந்து இறுகிப் பனிப் பாறைகளாகி உள்ளன. பூமியின் வெப்ப நிலை உயர்வதால் இப்போது இப் பனிப்பாறைகள் உருக ஆரம்பித்துள்ளதை செய்மதிப் படங்கள் காட்டுகின்றன. 1970-2000ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் ஆவணி மாதத்தில் ஆர்டிக்கிலுள்ள பனிப்பாறைப் பரப்பு 7.67 மில்லியன் சதுர கிலோமீற்றர் ஆக இருந்தது. 2007 ஆவணியில் இது 30மூ ஆல் சுருங்கி 5.32 மில்லியன் சதுரக் கிலோமீற்றர்களாகி விட்டது. 2030 அளவில் ஆர்டிக் பகுதியில் ஒரு பனிப்பாறை கூடக் காணப்பட மாட்டாது என ஐ.நா.வின் காலநிிலை ஆய்வுக் குழு கூறியுள்ளது. எனினும் இன்று பனி உருகும் வேகம் தொடர்ந்தால் 2013 இலேயே இது நடக்கலாம் எனக் கூறுவோரும் உளர். ஆர்டிக் கண்டத்தில் நிலம் இல்லை. பனிப் பாறைகள் கடலின் மேலேயே கானப் படுகின்றன. இதனால் இவை உருகினாலும் கடலின் நீர் மட்டம் உயருவதற்கான வாய்ப்புக் குறைவு.

ஆனால் அன்ராட்டிக் கண்டத்திலும்இ கிறீன்லாந்திலும் காணப்படும் பனிப்பாறைகள் நிலத்தின் மேலே படிந்துள்ள பனியாலானவை. இதனால் இங்கு பனிப்பாறைகள் உருகத்தொடங்கும் போது வரும் நீரானது வடிந்து கடலுள் செல்வதால் கடலின் நீர்மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிறீன்லாந்தில் இன்று பனிப் பாறைகள் உருகும் வேகம் பத்து வருடங்களுக்கு முன்னிருந்தடை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது. சுவிற்சலாந்திலுள்ள பனிப்பாறை அவதான நிலையம் ஒன்றின் அவதானிப்புகளின் படி 1980ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இன்று பனிப் பாறை சுருங்கும் வேகம் 3 மடங்காக அதிகரித்துள்ளது. அன்ராட்டிக்கிலுள்ள பனிப்பாறைகளில் 1 மூ உருகினாலே கடல் மட்டம் 70 சென்ரி மீற்றரால் உயரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடல்மட்டம் உயருவதால் நெதர்லாந்து, மாலைதீவு, வங்காள தேசம், மற்றும் பல கரீபிய, பசிபிக் தீவுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இதை விட நோர்வே உட்படப் பல நாடுகளின் கரைப் பகுதிகள் நீருள் அமிழும் அபாயம் ஏற்படும். இப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் அகதிகளாக இடப் பெயரும் நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

நோர்வேயிலிருந்து மைத்திரேயி