Barn-Swallow1aபார்ன் சுவாலோ  (Barn Swallow ) இது ஆர்ஜென்டினா நாட்டிலே வாழும் ஒரு அதிசய பறவையினம் , ஐந்தறிவு ஜீவனான சின்னஞ்சிறு பறவையினம் தான் ஆனால் , இதனிடம் மனிதர்களாகிய நாம் படிக்க வேண்டிய பாடம் ஏராளம்.

தன்னம்பிக்கை , தைரியம் , முயற்சி , சாமர்த்தியம் என்று பல தகைமைகளை தன்னகத்தே கொண்ட இக்குருவி  (Barn Swallow ) , மனித படைப்பிற்கான இறைவனின் இன்னொரு பாடமாகும்.

இச் சிறுய குருவியானது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம்Barn-Swallow2a ஆர்ஜென்டினாவிலிருந்து கலிபோர்னியா புறப்படுகிறது. ஆர்ஜென்டினாவிலிருந்து சுமார் 8300 கிலோமீட்டர் தூரம் உள்ளது கலிபோர்னியா.

மார்ச் மாதம் கலிபோர்னியா எல்லையை அடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு மீண்டும் ஒக்டோபரில் புறப்பட்டு , 8300 கிலோமீட்டர் பறந்து அர்ஜென்டினாவுக்கு வருகிறது.

Barn-Swallow4aஆக , இக்குருவி (Barn Swallow )  இனப்பெருக்கத்திற்காக பறக்கும் மொத்த தூரம் 16600 கிலோமீட்டர் ஆகும். இதிலே இன்னொரு ஆச்சரியம் என்ன தெரியுமா ? பார்ன் சுவாலோ குருவியானது பறப்பது நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது.கடற்பரப்பின் மேல்தான் இத்தனை தூரத்தை கடந்து அது பறக்கிறது.

இதுதான் ஏனைய பறவைகளுக்கும் , இதற்குமுள்ள வித்தியாசம்..அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி சாப்பிடுகிறது ?களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்கிறது ? இப்பறவைகள் பறப்பதற்கு புறப்படும்போது தனது வாயிலே, சிறு குச்சி ஒன்றை கவ்விக் கொள்ளுமாம்.

எப்பொழுது அவற்றிற்குப் பசி ஏற்படுகிறதோ ? எப்பொழுது களைப்பு ஏற்படுகிறதோ ?Barn-Swallow3a அப்பொழுது இப்பறவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வருகிறது. வாயிலே கவ்வியுள்ள குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொள்கிறது.

அதிலே நின்றுக்கொண்டே தான் பார்ன் சுவாலோ (Barn Swallow )மீனினங்களை சாப்பிடுகிறது ; ஓய்வெடுத்தும் கொள்கின்றது. அது முடிய மீண்டும் பார்ன் சுவாலோ தன் பயணத்தை ஆரம்பிக்கிறது. ஐந்தறிவுள்ள பார்ன் சுவாலோ  (Barn Swallow ) பறவைக்கு ஒரு சிறு குச்சி தான் நம்பிக்கையின் ஊன்றுக்கோல்.

Barn-Swallow5aஎப்படி மிகச்சிறிய பறவையான பார்ன் சுவாலோ (Barn Swallow ) தன் இலக்கை மிக நம்பிக்கையோடும் , உறுதியோடும் ஒரு சிறு குச்சியை கொண்டு கடந்து செல்கின்றமை நமக்கெல்லாம் பெரும் வியப்பை ஏற்படுத்துகின்றது.

ஆனால் ஆறறிவுள்ள நமக்கு எத்தனை ஊன்றுக்கோலிருக்கும் ? நமக்கான ஊன்றுக்கோலை , பல நேரங்களில் நாம் கண்டுக்கொள்ள தவறி விடுகிறோம் என்பதும் , பல விடயங்களில் தடுமாறி விடுகிறோம் என்பதும் தான் உண்மை.

-நன்றி JVPNEWS