2022 ஆ2022-New-Year1aண்டு புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வரும் நிலையில் நிலையில் நியூசிலாந்தில் முதலாவதாக 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. அங்குள்ள மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.

பூமிப் பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும் போது மறுமுனையில் இரவாக இருக்கும். அந்த வகையில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் சூரிய உதயத்தைச் சந்திக்கும் முதல் நாடாக உள்ளது. இதனடிப்படையில் ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பும் அமைகிறது.

2022-New-Yearநியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு- 12 மணி ஆனதும் லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களைகட்டியது. இந்நிலையில் நகரமே வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 1, 2022