கரம்பொன் ' ஸ்ரீபொன் சாயி' தொண்டர் சேவையின் முன்னோக்கி நகரும் செயல் திட்டத்தின் கீழ் இன்று 23-03-2022 புதன் கிழமை கரம்பொன் சுருவில் வீதியில் அமைந்துள்ள கரம்பொன் ஸ்ரீ சுயம்பு ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் நல்லூர் ' யாழ் மத்தி ஸ்ரீ பகவான் சத்திய சாய் சேவா நிலையத்திலிருந்து சிவாச்சாரியார்கள் சகிதம் பக்தர்கள் புடை சூழ சுருவில் வீதி வழியாக மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, சுயம்பு ஆஞ்சநேயர் பிரதிஷ்டா, கும்பாபிஷேகம் குருவருளாலும் இறையருளாலும் மிகச் சிறப்பாக நடைபெற்றென.
இன்றைய சங்கல்ப்பத்தில் சகல ஸ்ரீ பொன்சாயி தொண்டர் சேவை ' அங்கத்தவர்களும் கூடி நின்று கிரிகைகளில் பங்குபற்றினார்கள். இத்திருக் கோவில் கரம்பொன் மக்கள் யாவர்க்கும் சீரடிபாபாவின் அன்புக் கொள்கையின் ' பாதையில் பேதமின்றி எல்லோருக்கும் சம உரிமையுடன்' தடையின்றி சென்று வழிபட அமைக்கப்பட்டுள்ளது..
கரம்பொன் கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பல அரிய பணிகளைச் செய்து வரும்; ' ஸ்ரீபொன் சாயி' தொண்டர் சேவையினரை 'கரம்பொன்.நெற்' இணையத்தளம் மூலம் உளமாரப் பாராட்டி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.














