கரம்பொன் கிராமத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று 16-04-2022 சனிக்கிழமை விசேஷ பூஜைகளுடன் அபிஷேகமும் அன்னதான நிகழ்வும்; சிறப்பாக நடைபெற்றது.
சித்ரா பவுர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பவுர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ ராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பவுர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது.
வருடா வருடம் கரம்பொன் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி தினத்தில் அபிஷேகம் மற்றும் சித்திரைக் கஞ்சி நிகழ்வினை கரம்பொன் மேற்கைச் சேர்ந்த குகநேசன்(குகன்) கந்தையா குடும்பத்தினரும், அன்னதான நிகழ்வினை கரம்பொன் தெற்கைச் சேர்ந்த குமாரசாமி அருளமணி குடும்பத்தினரும் நடாத்தி வருகிறார்கள்.