கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் தமிழ் புதுவருட தினமான இன்று 14-04-2022 வியாழக்கிழமை பக்தர்கள் கூடி சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். அத்துடன் திருவாளர் சோமசுந்தரம் கனகநாதன் (குமரன்) அவர்கள் தான் பிறந்த கரம்பொன் ஊரின் வளர்ச்சிக்காக கனடாவிலிருந்து சென்று சாயி தொண்டாற்றிய அவரது சேவைக்காக குழந்தைகளும் ஏன் பெரியவர்களும் கூட எங்கள் 'சாயி அப்பா' என வாழ்த்தி அவருக்கு நன்றியுரை கூறி, மீண்டும் மீண்டும் கரம்பொன் சீரடி சாயி இல்லத்திற்கு வருகை தந்து தங்களுக்கு அன்பு வழிகாட்டும்படி வேண்டி பயணம் அனுப்பி வைத்தார்கள்.