Aanjaneyar8aஆஞ்சநேயரின் வாரதினமான சனிக்கிழமையுடன் கூடிய ஹனுமான் ஜயந்தியும் அத்துடன் சேர்ந்த சித்திரை பௌர்ணமி தினமான இன்று கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில்ஸ்ரீசுயம்பு ஆஞ்சநேயருக்கு செந்தூரம் இட்டு , 108 வடை மாலை, வெற்றிலை மாலை, அவரின் வாலைச்சுற்றி துளசி மாலை அணிவித்தும், நாற்பது புகழ்மாலை (ஹனுமான் சலிசா) பாடி, 108 போற்றிகளுடன் பூசை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றன.ஸ்ரீபொன்சாயிக்கு ஆராத்தியுடன் உழுந்துப் பிரியன் ஹனுமானின் இட்டலியும் பிரசாதமாக அடியவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த விசேட சித்திரா பௌர்ணமி நிகழ்வினை கனடாவில் வாழும் கரம்பொன் மேற்கைச் சேர்ந்தkiruba முத்துக்குமாரசாமி கிருபாம்பிகை(கிருபா ரீச்சர்) தம்பதிகளின் பிள்ளைகள் தமது தாயாரின் நினைவாக அவர்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து பூஜைகளுடன் அங்குள்ள அடியவர்களுக்கு இரவு உணவு அளித்து உபயம் செய்திருந்தார்கள். அன்னாரின் குடும்பம் ஆசிகளையும் சகல  சௌபாக்கியங்களையும் பெற்று நீடூழி வாழ்கவென பிரார்த்தித்து கரம்பொன் சீரடி சாயி இல்லத்தின் சார்பில் நன்றி கூறுகின்றோம்.

Aanjaneyar9Aanjaneyar1Aanjaneyar5Aanjaneyar3Aanjaneyar8