அன்னையின் மடியில் 27-07-1968
ஆண்டவன் அடியில் 14-12-2022
யாழ்ப்பாணம் இல 59 குமாரசாமி வீதி கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், இல.94/12 விவேகானந்த மேடு, கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தவருமான திருமதி. ஜெயந்தி குகானந்தா அவர்கள் 14-12-2022 புதன் கிழமையன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற குகானந்தா (மக்கள் வங்கி) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் (முன்னாள் தாசன் ரேடிங் கம்பனி உரிமையாளர் கொழும்பு) ஜெயலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சபாநாதன் குணபூசணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
Dr.சிவதாஸ்(உள மருத்துவ நிபுணர் யாழ் போதனா வைத்தியசாலை), Dr.சண்முகதாஸ் (NHSL), வசந்தி (Australia), சுகந்தி(Audit Officer NIBM) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr.சிவனேஸ்வரி(NHSL), Dr.வனிதா(DGH. Kilinochchi), கோணேஸ்வரன் (Australia). அருணோதயன் (Australia), காலஞ்சென்ற செந்தில்செல்வி மற்றும் நடேசன், சசிகலா, அனுஷா (Deputy registrar PGIM Colombo) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிநயா, கோகுலன், தனுஷன், பிரணவன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
விவேகா, ஹீமன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் 17-12-2022 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 18-12-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு ஈமக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு தகனக் கிரியைக்காக பொரளை கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.
தகவல்: சகோதரர்கள், உறவினர்கள்
இல: 94/12 விவேகானந்த மேடு, கொழும்பு-13
தொடர்பு: 011 2435137, 077 3420538, 0777730224, 0778870621
“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.