கனேடிய மக்கள் மிகவும் அதிர்ஸ்டசாலிகள் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நத்தார் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிட்டியமையினால் கனேடிய மக்கள் அதிர்ஸ்டசாலிகள் என தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி, ஆரோக்கியம், அன்பு மற்றும் சமாதானம் நிறைந்த நத்தார் பண்டிகையாக அமைய பிரார்த்தனை செய்வதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்த 2022ம் ஆண்டு மிகவும் சவால் மிக்கதாக காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் பெருந்தொற்று நிலைமகளினால் நெருக்கடிகளை எதிர்நோக்கிய மக்களுக்கு இந்த விடுமுறைக் காலம் வழமையானதாக அமையப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.