கனடாவில் இயங்கிவரும் Elson Badminton Club நடாத்திய வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் இராப்போசன விருந்து ஆகியன நவம்பர் 19ம் திகதி சனிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள “The Estate Banquet Hall” மண்டபத்தில் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மற்றும் நடனம் ஆகியனவும் இடம்பெற்று சிறுவர் சிறுமியர்களுக்கு அன்பளிப்புக்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.