கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவரும் சாதனை முயற்சிகளை சிலவற்றை ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவு செய்தவரும் இலக்கியவாதியுமான அகணி சுரேஸ் அவர்கள் மற்றுமொரு சாதனை முயற்சி அண்மையில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
35 மணித்தியாலயங்கள் தொடர்ச்சியாக நூல்கள் பற்றிய அறிமுக உரையை நடத்தி இலக்கியச் சாதனையை நிலை நாட்டிய அவருக்கான பாராட்டு வைபவம் ஒன்றை கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ஜனவரி 2ம் திகதி திங்கட்கிழமை நடாத்தியது.

மார்க்கம் வீதியில் அமைந்துள்ள “தமிழ்ப் பூங்கா” கல்விச்சாலையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கலை இலக்கியம் மற்றும் கல்வி சார்ந்த பல அன்பர்களும் அறிஞர் பெருமக்களும் ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தும் வாழ்த்துரைகளை வழங்கியும் பங்கெடுத்தனர்.
அங்கு உரையாற்றிய அனைவரும் அகணி சுரேஸ் அவர்களின் அயராத உழைப்பையும் மிகுந்த ஆர்வத்துடன் இலக்கியத்தின் பல பிரிவுகளிலும் படைப்புக்களைத் தந்தவண்ணம் இயங்கும் அவரது விடா முயற்சியையும் பாராட்டினர்.
மொத்தத்தில் ஒரு கல கலப்பான இலக்கியக் கலந்துரையாடலாகவும் காலம் தாழ்த்தாமல் ஏற்பாடு செய்யப்பெற்ற ஒரு அவசியமான நிகழ்வாகவும் இந்த நிழ்ச்சி அமைந்தது என்றால் அது மிகையாகாது.